‘ந்தா வந்துட்டாருய்யா ஜகஜ்ஜால புஜபல வடிவேலு..+ படங்கள்

வடிவேலு மீண்டும் தன் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார்.‘ந்தா வந்துட்டாருய்யா நம்ம வைகை காமெடிப் புயல்…’ என்று சொல்ல வைக்கும் அளவுக்கு புதுப் பொலி வுடன் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமனாக வரயி ருக்கிறார்.கடைசியாக விஜய்யுடன் நடித்த காவ லன் படத்துக்குப் பிறகு வேறு புதிய படங்களில் நடிக்கவில்லை. அதற்குப் பிறகு வெளியான மம்பட்டி யான், மறுபடியும் ஒரு காதல் போன்றவை அவர் ரொம்ப நாளைக்கு முன்பு ஒப்புக் கொண்டு நடித்தவை. எனவே கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இடைவெளிவிட்டு இந்தப் படத்தில் நடிக்கிறார் வடிவேலு.
. தேர்தலுக்கு பிறகு அவர் நடிக்கவும் இல்லை.அவரை நடிக்க கூப்பிடவும் இல்லை. அரசியல் புயலில் சிக்கி சின்னாபின்னாமான
வடிவேலு இப்போதுதான் கரையேற முயற்சிக்கிறார்.மொக  ஹிட் படமான இம்சைஅரசன் 23ம் புலிகேசி பட பாரமுலா தனக்கு கைகொடுக்கும் என்ற தைரியத்தில் ராஜாகாலத்துககதை தேர்தெடுத்து மீண்டும் சினிமா களத்தில் குதித்திருகிறார்.காமெடி கேரக்டரையெல்லாம் உதறி தள்ளிட்டு ஹீரோவா நடித்து ரீ-என்ட்ரியை பவர்புல்லா தொடங்கணும்னு பிளான் பண்ணி பண்ணுற படம்தான் "ஜெகஜா புஜபல தெனாலிராமன்".

                                           சிலைடுசோ - 10 படங்கள்

        

ஏஜிஎஸ் எண்டர்டயின்மெண்ட் படத்துக்கு  25 கோடியை ஒதுக்கி தயாரிக்கிறது. ஆர்ட் டைரக்டர் பிரபாகர் போட்டிருக்கும் பிரமாண்ட செட்டுகளிலேயே இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட சில கேமராமேன்கள் பிரச்னை பண்ணியதை தவிர படத்துக்கு வேறு சிக்கல் எதுவும் இல்லை.
தெனாலிராமனுக்கு மீனாட்சி தீக்ஷித்தான் ஜோடி.. இந்த வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் பார்வதி ஓமணக்குட்டன். ஆனால் அவரை நடிக்கவிடாமல் யாரோ சதி செய்துவிட்டதாக வடிவேலுவே கூறிகிறார்.சிவாஜி நடித்த பிளாக் அண்ட் வொயிட் தெனாலிராமனின் எந்த சாயலும் இல்லாமல் காமெடியால் தெனாலியை உருவாக்கிக் கொண்டிருகிறர் யுவராஜ் தயாளன். சில நாட்களுக்கு முன்பு வடிவேலு மோடியை சந்தித்தாக தகவல்கள் வந்தன... மீண்டும் அரசியல் புயலில் சிக்காமல் கலைச்சேவை????.. செய்வதே வடிவேலுவுக்கு நல்லது.

- செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

வரட்டும்... மீண்டும் சிரிப்போம்...
  • இவ்வளவு எளிமையானவரா முதல்வர்?நடிகர் சூர்யா ஆச்சர்யம்.
    25.01.2017 - 0 Comments
    இவ்வளவு எளிமையானவரா முதல்வர்?நடிகர் சூர்யா ஆச்சர்யம். வார்ட் கவுன்சிலர் பண்ற அலப்பரையே தாக்கமுடியாது .…
  • இந்த ஆண்டு டிசம்பர் 12ல் உலகம் அழியுமா? அறிவியல்பூர்வமாக கணித்து சொல்லும் தளம்
    24.02.2012 - 0 Comments
    இந்த ஆண்டு அறிவியல் ரீதியாக உலகில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவருக்கும்…
  • தீயசக்திகள் - அநதணர் சாபம் ?... மாயமாய்போன கிராமம் + படங்கள்
    06.12.2013 - 2 Comments
    காத்துகருப்பு,பேய், அந்தணர் சாபத்தால் மிகப்பெரிய கிராமே மாயமாய் போன அதிர்ச்சி தகவல்..மதுரை மாவட்டத்தின்…
  • பெயிண்ட் அடிக்கும் வ.உ.சி யின் பேரன்கள்....
    04.05.2014 - 2 Comments
    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையமாக வைத்து `அங்குசம்’ திரைப்படத்தை எடுத்த (இப்படி நல்ல படங்கள் எப்ப…
  •  மாடுகள் மாலை தாண்டும் திருவிழா
    15.10.2021 - 0 Comments
     திருவிழாக்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம் ஒவ்வொகு சமூகமும் தனக்கோயுறிய தனித்துவமிக்க கலாச்சாரம்…