தமிழ்நாடு - பாண்டிச்சேரி நண்பர்களுக்கு மட்டும்....

தமிழ்நாடு  - பாண்டிச்சேரி நண்பர்களுக்கு மட்டுமான பிரத்யோக தகவல்.சிலருக்கு தெரிந்திருக்கலாம்..... கடைகள்,வங்கிகள், தாலுகா அலுவலகம்,நகராட்சி என சகலத்திலும் ஆங்கில ஆட்சிதான். எதோ ஆங்கிலேயர்கள் தினமும் நம்மூர் கடைகளில் பொருட்கள் வாங்க வருவது போலவும்,தாலுகா, நகராட்சிக்கு வருவது போலவும் நினைப்பு,முன்னேரிய நாடுகளான ஜப்பான்,சீனா,ஐரோப்பிய நாடுகளில் ஆங்கில மோகம் இல்லை... அதனால் தான் அவர்கள் முன்னேரி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து மெல்ல இனி தமிழ் சாகும்  என்கிறார்கள். நம் மொழியை சாவிலிருந்து தடுக்க  ஆங்கில கலப்பில்லாமல் பேசுவதும்,பயன்பாடுகளில் தமிழை கொண்டுவர முயற்சிப்பதும் அவசியம்.அந்த வகையில் வாகனங்களில் தமிழ் எண்களை பயன்படுத்துவதை பயன்பாட்டுக்கு கொண்டுவரலாமே . அதற்கான சில தகவல்கள்...


தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கும். இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவ ங்களை மிகவும் ஒத்து காண ப்படும்.தமிழ் எண்கள் தற்போது அதிகம் பயன்படுத்தவதில்லை. (விவேகானந்தா காலண்டரில் பாரக்கலாம்) தமிழில் எண்களை எழுத இந்திய-அரேபி ய எண்கள் தான் பயன்படுத்த ப்படுகின்றன.
தமிழ் எண்களில் பழங்கா லத்தில் சுழியம் (பூஜ்யம்) இல்லாமல் போயினும், தற்காலத்தில் சுழியம் தமிழில் எண்களை எழுதும் போது பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1825ஆம் ஆண்டு வெளி வந்த கணித தீபிகை என்னும் நூல் கணித செயல்பாடுகளை எளிமையா க்கும் பொருட்டு தமிழில் சுழியம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பயன்படுத்தும் முறை


தொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறை யில் (Positional System)  எழுதப் பயன்படுத்தப்படவில்லை. 10, 100, 1000 ஆகியவற்றுக்குத் தனித்தனி குறியீடுகள் இரு ப்பதைக்கொண்டு இதை அறியலாம். தமிழ் எண்கள் எழுத்தால் எழுதப்படும் எண்க ளைச் சுருக்குவதற்கான குறியீ ட்டு முறையாகவே பயன்படு த்தப்பட்டது. சுழியம் அறிமு கம் செய்யப்பட்ட பின்னர்தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட ஆரம்பித்தது.

உதாரணமாக, இரண்டா யிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி, ௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டது. அதாவது, இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று .தற்கால புதிய முறைப்படி, இவ்வெண் ௨௪௫௩ என எழுதப்படுகிறது .௧ - 1,  ௨ - 2,  ௩ - 3, ௪ 4, ௫ -5, ௬ - 6, ௭- 7, ௮ - 8, ௯ - 9, ௰ - 10, ௰௧ - 11, ௰௨ - 12, ௰௩ -13, ௰௪ - 14, - 2 - ௰௫ - 15, ௰௬ - 16, ௰௭ - 17, ௰௮ - 18, ௰௯ - 19, ௨௰ - 20......

ஊர்திகளில் தமிழ் பதிவு எண் மத்திய அரசு ஆணை


ஊர்திகளில் பதிவு எண் பலகைகளில் எந்தெந்த மொழி களை நடைமுறையில்
பயன்ப டுத்தலாம் என்பது குறித்து மத்திய அரசானது 1988ம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 41, உட்பிரிவு (6)ன் கீழ் வெளி யிட்டுள்ளது மத்திய அரசின் அறிவிப்பு எண்.ஓ.441(இ)ன் படியும் அதன் தொடர்பாக 11.11.1992ல் வெளியிடப்பட்ட திருத்தம் எஸ்.ஓ.827(இ) நாள் 11.11.1992ன் படியும் மோட்டார் வாகனங்களில் பொருத்த ப்படுகின்ற ஆங்கில எழுத்து க்களுடன் அடங்கிய வாகனப் பதிவு எண்கள் பலகையுடன் கூடுதலாக வாகன உரிமை கயா ளர்கள் விருப்பினால் அந்தந்த மாநில மொழியிலும் ஒரு பல கையில் எலுதிப் பொருத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஆணை

மோட்டார் வாகனங்களில் பதிவு எண் பலகை தொட ர்பாக மத்திய அரசால் வெளி யிப்பட்ட ஆணையின்படி தமி ழக அரசு 1998ல் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது (ஆ ணை எண் 11 உள்துறை (போக்குவரத்து) நாள் 5.1.1998) இணைப்பு(7). ஊர்திகளில் பதிவு எண் பலகைகளை ஆ ங்கிலத்திலும் ஊர்திகளின் உரி மையாளர்கள் விரும்பினாள் அந்தந்த மாநில மொழிகளிலும் கூடுதலாக ஒரு பலகையில் எழுதிப் பொருத்தி க்கொ ள்ளலாம் எனும் விவரங்கள் மத்திய,தமிழக அரசின் மோ ட்டார் வாகனச் சட்டங்கள், ஆணைகளில் இருந்தும் அது பற்றிய தகவல்களை முழுமை யாகத் தெரிந்து கொள்ளா ததால் தமிழகம், புதுச்சேரிப் பகுதிகளில் இயக்கப்படும் பெரும்பாலான ஊர்திகளில் உள்ள பதிவு எண் பலகைகளில் ஆங்கில எழுத்து க்கள் மட்டுமே பயன்பத்த ப்பட்டு வருகின்றன. இந்நிலை தொடர்ந்து நீடிக்காமல் இரு ப்பதற்கு தமிழ் எண்கள் குறித்த விழிப்புணர்லை ஏற்படுத்தலாமே. நம் மொழியை மரணத்திலிருன்த பாதுகாக்க நமமால் முடிந்தை செய்யலாமே.

தொகுப்பு..
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

mobile software said…
எமக்கு இதுபோல் எழுதி பல சிக்கல்கள் வந்துவிட்டது... இதற்கான அரசாணை நகலை இதில் தட்டச்சு செய்யுங்கள்
Unknown said…
ஆனால் இருசக்கர வாகன த்தில் , ஆங்கிலம் மற்றும் தமிழில் பொறுத்திகொள்ளலாம் என்றால் எழுத்துக்களின் அளவு சிறியதாகுமே அதில் ஏதும் சட்டசிக்கல் இருக்கிறதா ??