ஆல் இன் ஆல் அழகு(காமடி)ராஜா -கதை + படங்கள்


தீபாவளி என்றாலே பட்டாசு,புத்தாடை,பலகாரத்தோடு தீபாவளிக்கு என்ன படம் ரீலிஸ் என்ற கேள்வியும் வரும். இந்த தீபாவளிக்கு வரும் படங்களில் அழகுராஜா....
தற்போதைய சினிமா டிரண்ட் படி காமடிபடம் தான். இந்த படத்தின் இய்ககுனர்  ராஜேஷ்க்கு, காமடிபடங்களை தவிர வேறுமாதரி படம் இயக்கு தெரியாது... சிவாமனசுசக்தி, பாஸ் என்ற பாஸ்கரன்,ஒருகல் கண்ணாடி  இப்படி காமடி படங்களை மட்டுமே இதுவரை இயக்கியவர். அழகுராஜா கார்த்திக்கும் காமடிதான் வரும்...சாந்தானம் வேற இருக்கார். இரண்டாவது முறையாக கார்த்தி-காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கும் படம்
டவுன் வளர்ர இளைஞனுக்கும் அவன் அப்பா அம்மாவுக்கு இடையில் நடக்கிற பாசப்போராட்டம் தான் அழகுராஜா படத்தின் ஓரு லைன் ஸ்டோரி..பிரபு, சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தில் 80களில் நடப்பது போன்ற சில காட்சிகள் இடம்பெறுகின்றன. அதற்காக, கார்த்தி, நடிகர் பிரபுவைப் போல கெட்டப் மாற்றிக்கொண்டு அவரைப் போலவே நடித்துள்ளாராம். நடிப்பு மட்டும் இன்றி ஒரு பாடல் முழுவதும் பிரபு போலவே நடனமும் ஆடியுள்ளார்.

        சிலைடு சோ............... 10 படங்கள்

       


இப்படத்தில் சந்தானம் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார். படத்தின் கதைப்படி கார்த்தி, காஜல் அகர்வாலை காதலிக்கிறார். ஆனால் காஜலோ, கார்த்தியை காதலித்தாலும் அதை சொல்லாமல் பிகு பண்ணிக் கொண்டிருப்பாராம். எனவே, காஜல் மனதில் இருக்கும் காதலை எப்படியாவது வெளி கொண்டுவர நினைக்கிறார் கார்த்தி. உடனே அவர், தன் நண்பன் சந்தானத்தை பெண் வேடம் போடச்சொல்லி காஜல் முன்னால் ரொமான்ஸ் பண்ணுவது போன்று வெறுப்பேற்றுவாராம். இதை சகிக்க முடியாத காஜல் தன்னுள் இருக்கும் காதலை சொல்லிவிடுவாராம்.ஏற்கனவே சந்தானம் சிறுத்தை மற்றும் சிங்கம் புலி படத்தில் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்.

     உண்மையான  ஆல்இன் ஆல் அழகு ராஜா - கவுண்டமணி..காமடி

    

தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

- செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்