கவனிக்க வைக்கும் பிளாக்பாண்டி...

சினிமாவில் ஹீரோ,¦ஹீரோயினை தவிர சில நடிகர்கள் கவனிக்க வைக்கும் விதமாக நடிப்பார்கள் அந்த வகையில் பிளாக்பாண்டி முக்கியமானவர். சாதணகாமடியன் என பார்த்தால் இசை ஆர்வம்,திரைக்கதை என அவரை பற்றி தகவல் பிரமிக்க வைக்கின்றன....

    குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்வைத் துவக் கிய பிளாக் பாண்டி இன்று கண் நிறைய கனவுகளுடன் தனது எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளார்.அந்நாளைய பிரபலங்களான தியாராஜ பாகவதர், கே.பி.சுந்தரம்பாள், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நட்சத்திரங்களுடன் மேடை நாடகங்களிலும் திரைப் படங்களிலும் நடித்தவர் பழனி சொக்கலிங்கம். இவரது மகன் எம்.சி.சேகர் மதுரையில் பிரபல நாடக நடிகர்.

இசைக்குழுவில் இசையமைப்பாளராக இருந்தவர். இந்த சேகரின் மகன் பிளாக் பாண்டி.லிங்கேஸ்வரன் என்ற தனது பெயரை சினிமாவுக்காக பிளாக் பாண்டி என மாற்றிக் கொண்டவர். “மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து 14 வருடங்களாக சினிமாக் கனவுகளுடன் தான் சுற்றினேன். அந்தக் கோட்டைக்குள் நுழைந்துஎனக்கென ஒரு இடம் பிடித்தி ருக்கிறேன்’’ என்கிறார்.விஜய் டி.வி.யில் வெளிவந்த ‘கனா காணும் காலங்கள்’ மெகா தொடர் இவரைக் கவனிக்க வைத்தது. சின்னத் திரை யிலிருந்து கொண்டு பெரிய திரைக்கு வந்தார்.அங்காடித் தெரு, லீ, நீர்ப்பறவை,

தெய்வத் திரு மகள், பாகன் என்று 30 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். தற்போது “வேல்முருகன் போர்வெல், இரண்டு, சொகுசுப் பேருந்து, வணக்கம் சென்னை, வெண்ணிலா வீடு, ஆண்டாள், அகதீ, திருவாசகம் என்று கை நிறையப் படங்களுடன் பரபரப்பாய் இருக்கிறார். ஒரு நகைச்சுவை நடிகராகப் பயணம் தொடர்கிறது.நடிப்போடு இசையின் மீதும் தனிக் கவனம் கொண்டு அதிலும் பெயரைப் பதித்து வருகிறார். “என் தாத்தா, அப்பா என இசை என் பரம்பரை வழியாக எனக்குள் நிரம்பி வழிகிறது. ‘சாய் இருக்க பயமேன்‘, ‘தில்லையம்பட்டி அம்மன்‘ ஆகியபக்திப் பாடல் ஆல்பம் இசையமைத்து வெளியிட் டிருக்கிறேன்.நான் இசையமைப்பாளனாக வர வேண்டும் என்பது என் தந்தையின் கன வாக இருந்தது. எனக்கு முறைப்படி இசைபயிலச் செய்தார். தாத்தாவின் ஆசை நான் ஒரு நடிகனாக வேண்டும் என்பது. இரண்டும் நிறைவேற்றும் வண்ணம் செயல்படுகிறேன்.


எஸ். டாட் ஸ்டுடியோவை துவக்கியிருக்கிறேன். இனி இசை, டப்பிங், எடிட்டிங் போன்றவைகளுக்கும் ஏற்ப ஸ்டுடியோவை அமைக்கப் போகிறேன். நடிகர் தம்பி ராமையா, இயக்குநர் தமிழ் பாரதி ஆகியோரின் அன்பான ஆதரவுடன் என் கனவு நனவாகும்’’ என்கிற பிளாக் பாண்டி,கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த உமே ஸ்வரி பத்மினி என்ற எம்.பி.ஏ. மாணவியை வருகின்ற டிசம்பரில் திருமணம் செய்ய இருக்கிறார். செல்போனில் தொடங்கிய காதல் மலர்ந்திருக்கிறது.ஒரு படம் இயக்குவதற்காக கதை ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். விஜய் படத்துக்காக ஒரு தொடக்க (ஓபனிங் சாங்) பாடல் எழுதி, இசையமைத்தும் வைத்திருக்கிறார். அதை விஜயின் கவனத்துக்கு கொண்டு போகிறார். நல்லவை நடக்கட்டும்

.- எஸ். சுபேரியா

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்

எது எப்படி நடந்தாலும்சரி பிளாக்பாண்டியின் திருமணம் இனிதாக நடைபெற்றால் சரிதன்....பதிவு அருமை... வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அங்காடித் தெருவில் இயல்பான நடிப்பை மறக்க முடியாது...
சே இவ்வாறு கூறியுள்ளார்…
தஎடஎத்ய்ர்