பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதிபயங்கர ஏரி


பல்வேறு மர்மங்களைக் கொண்ட இந்த பூமியில் தற்போது நீர் அருந்தும் பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதியபங்கர ஏரி குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

புராண காலங்களில் மந்திரவாதிகளும் மாயாஜால வித்தகர்களும் தங்களை எதிப்பவர்களையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி மகிழ்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.இந்த கற்சிலைகளுக்கு உயிர்கொடுத்திட அன்றைய கதாநாயகர்கள் ஏழு கடல்,ஏழு மலை தாண்டிச் சென்று கடைசியாக சூட்சுமத்தை கண்டுபிடித்து கற்சிலைகளை அகலிகளாக மீண்டும் உயிர்பெற்று தருவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.இந்நிலையில் உலகிலுள்ள மக்களுக்கு உயிரூட்டம் கொடுத்திடும் பல்வேறு ஏரிகள் குறித்து நாம் கேள்விப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டிலுள்ள ஏரியொன்று தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றியிருக்கும் அதிபயங்கர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தான்சானியா நாட்டின் வடபகுதியில் கென்யா நாட்டின் எல்லையை ஒட்டிய நாட்ரன் எனும் ஏரிதான் தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி வருகிறது.இதனை கண்டுபிடித்து வெளிஉலகிற்கு கொண்டுவந்தவர் ஆப்பிரிக்காவின் தலைசிறந்த வைல்ட்லைப் புகைப்பட

கலைஞர் நிக்பிராண்ட்.இவர் கடந்த 2010-2012 ஆண்டுகளில் நாட்ரன் ஏரியை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்துள்ளார்.அப்போது தான் ஏரிக்கரைகளிலும் ஏரியின் நடுவிலும் ஏராளமான பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் கற்சிலைகளாக மாறி உப்புப்பொரிந்து நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இருப்பினும் மனம் தளராத நிக்பிராண்ட் மனதை கல்லாக்கிக் கொண்டு கற்சிலை பறவைகளை தனது விலையுயர்ந்த கேமராவில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் தான் நாட்ரன் ஏரியில் கண்ட அனைத்து சம்பவங்களையும் ஒருங்கிணைத்த நிக்பிராண்ட் Across the ravaged land  என்ற புத்தகத்தை எழுதி தற்போது உலகப்புகழ் பெற்றுள்ளார்.மேலும் நாட்ரன் ஏரியில் நிக்பிராண்ட் எடுத்த புகைப்படங்கள் 2012 ஆண்டின் Best wild animal photography award பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வேதியல் விஞ்ஞானிகள் நாட்ரன் ஏரியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின.அதில் நாட்ரன் ஏரியில் எப்பொழுதும் 140 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருப்பதால் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழவழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் நாட்ரன் ஏரியில் அதிகளவு கால்சியம்,நேட்ரோ கார்பன்கள்,தாது உப்புகள் மற்றும் ஏராளமான வேதிப்பொருட்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.


          கற்சிலையாய் மாறிய பறவைகள்........ 6 படங்கள்.

          

மேலும் நீண்ட நாட்கள் முகாமிட்டு நாட்ரன் ஏரியில் ஆய்வு மேற்கொணட் விஞ்ஞானிகள் பறவைகள் கற்சிலைகளாக உறுமாறுவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.அந்த ஆய்வுகளில் நச்சுத்தன்மை கொண்ட தாது உப்புகள் மற்றும் வேதிப்பொருட்கள் கொண்ட நாட்ரன் ஏரியின் நீரை அருந்திய பறவைகள் தங்களின் உடலுக்குள் கலந்துள்ள உப்புக்கள் உறைவதால் உடனடியாக மரணமடைந்து காலப்போக்கில் கற்சிலைகள் போன்று மாறி உப்புப்பொரிந்து போய் உருமாறுவதை கண்டுபிடித்துள்ளனர்.இதனை தங்களது உள்ளுணர்வால் தெரிந்து கொண்ட சிலவகை பறவையினங்கள் இந்த அதிபயங்கர ஏரிக்கு வருவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டு கென்யநாட்டு நன்னீர் ஏரிக்கு தங்களது வாழ்வாதாரத்தை மாற்றிக்கொண்டு விட்டன.இருப்பினும் இந்த ஏரியின் தன்மை குறித்து அறியாத சிலவகை பறவைகள் நாட்ரான் ஏரியின் தண்ணீரை குடித்துவிட்டு தங்களது அறியாமையினால் உயிரை இழந்து கற்சிலைகளாக மாறி பார்வையாளர்களின் காட்சிப் பொருட்களாக மாறிவிடுகின்றன.
       
          நிக்பிராண்ட் பற்றி மேலும் தெரிந்து கொள்ள....
                 
       1.  நிக்பிராண்ட் பக்கம்... 
       2.  நிக்பிராண்ட - விக்கிபீடியா
       3.  நிக்பிராண்ட - புகைப்படங்கள்

 மழை மறைவுப்பிரதேசமாக காணப்படும் தான்சானியா நாட்டு வடபகுதியிலுள்ள இந்த எரிப்பகுதியில் எப்போதாவது மழைபெய்யுமானால் மழைநீர் பட்டு ஏரியிலிருந்து நச்சுவாயுக்கள் வெளியேறுவது கண்கூடாகத் தெரியுமாம்.அப்போதிலிருந்து சில நாட்களுக்கு மட்டும் நாட்ரன் ஏரி நன்னீர் ஏரியாக நிசப்தத்துடன் காட்சிதருமாம்.இப்பொழுது பறவைகள் கற்சிலைகளாக நிற்பதைக் காண்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர்.இதன் மூலம் தான்சானியா நாட்டின் அந்நிய செலவாணி வருவாய் அதிகமாக கிடைப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.எது எப்படியோ இறைவனின் அருட்கொடையான தண்ணீரை நாட்ரன் ஏரியில் அருந்திடும் பறவைகள் உயிரை இழந்து கற்சிலைகளாக மாறும் சம்பவம் இந்த படங்களைப் பார்த்திடும் நமது மனங்களை ரணங்களாக்கி கல்லாக மாற்றிடும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை


தொகுப்பு.......
ஜெ.எஸ்.செல்வராஜ்.

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வியக்க வைக்கும் அதிபயங்கரமான புதிய தகவல்... நன்றி...
Anand இவ்வாறு கூறியுள்ளார்…
அதிசயத் தகவல்
ஜே தா இவ்வாறு கூறியுள்ளார்…
அம்மாடியோவ்...
ஜே தா இவ்வாறு கூறியுள்ளார்…
அம்மாடியோவ்..
புதின் இவ்வாறு கூறியுள்ளார்…
வியப்பூட்டும் தகவல்தான்.
Muruganandan M.K. இவ்வாறு கூறியுள்ளார்…
அறியாத தகவல். நன்றி
கலாகுமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
யானை தந்தங்கள் வெகுவாக கவர்ந்தது. அவரின் புகைப்படமெல்லாம் ஓல்ட் போட்டோ கலரில் உயிர்ப்புடன் இருக்கிறது. நன்றி
தி.தமிழ் இளங்கோ இவ்வாறு கூறியுள்ளார்…
இப்பொழுதுதான் முதன் முறையாக உங்கள் பதிவின் மூலம் இந்த அதிசய செய்தியை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். பகிர்வுக்கு நன்றி!
எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!