23 செப்., 2013

பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்

காட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.
மாரியம்மன் கோவில்களில் பாம்புக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள் ஆனால் பாம்பு பால் குடிக்காது என்பது அறிவியல் உண்மை.
பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.

      

மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.
பாம்பு தனது ஜோடியை கொன்றுவனை தேடிவந்து கொல்லும் என்பது நம்பிக்கை, இதை அடிப்படையாக கொண்டுதான் கமல்,ஸ்ரீபிரியா நடித்த நீயா என்ற படம் வந்தது. அதில் ஆண்பாம்பு கொல்லப்பட பெண்பாம்பான ஸ்ரீபிரியா,கமலை கொல்ல முயற்சிப்பார்.பாம்புகள் இலக்கியங்களில் செக்ஸ் குவியீடாக பயன்படுத்தப்படுகின்றன.மதுரை அலங்காநல்லுர் மலையாண்டி ஊரணி பகுதியில்,... என்து நண்பரின் கேமவில் சிக்கிய பாம்புகள் உறவு கொள்ளும் காட்சிகள்..10 ஆடி நீளமான இந்த பாம்புகளின் விளையாட்டு 6 மணிநேரத்திற்கு மேலாக நீடித்ததாம்....

.- செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...