"ஜில்லா" ன்னா என்ன அர்த்தம் + கதை + படங்கள்


இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய்யின் அடுத்த படமாக வரவிருக்கும் ஜில்லாவில் விஜய் மதுரை நகரத்து நாயகனாக நடித்துவருகிறார். ஜில்லா என்பது பழைய தமிழ் வார்த்தை,
மதுரை ஜில்லா.... என்றால், மதுரை மாவட்டம்,மதுரை வட்டம், மதுரை பகுதி இப்படி அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். மதுரையை பொருத்தவரை ஒரு டீம் லீடரை ஜில்லா என்பார்கள்.  ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்கு அவர்தான் தலைவ(வா)ர். படத்தில் விஜயும் மதுரையின் ஜில்லாவாக (தலைவா வாக ) நடித்திருக்கிறார். ஜில்லா படப்பிடிப்பின் ஒருசில காட்சிகள் மட்டும் மதுரையில் படமாக்கியபின் மீதி படத்தை சென்னையிலே மதுரை போன்ற செட் போட்டு எடுத்துள்ளனர்.நீண்ட இடைவெளிக்குப் பின் விஜய் நடிக்கும் குடும்ப படமாக இந்தப்படம் வெளிவருகிறது.
பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்கு உள்ளேயே நடக்கும் சம்பவங்கள் என்பதால் வெளிப்புறப்படப்பிடிப்பு அதிகம் இருக்காதாம். . தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம்தான் கதையின் கரு. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் . மோகன்லால் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் அரசியல் செல்வாக்கு படைத்த பிரபல தாதா.  காக்கிச்சட்டை டிபார்ட்மென்ட்டில் தனது செல்வாக்கு கொடிகட்டிப் பறக்க வேண்டுமானால் தன்னிடம் இருக்கும் ஒருவனை போலீஸ் அதிகாரியாக்க வேண்டும் என்று நினைக்கிறார், லால்.
சிறுவயதில் தன்னிடம் அடைக்கலம் தேடிவரும் சிறுவன் விஜய்யை போலீஸ் அதிகாரி ஆக்குகிறார்.

                         
முதலில் மோகன்லால் பேச்சைக் கேட்டுத் தப்புக்குத் துணைபோகும் விஜய், அப்புறம் நிஜமாகவே நியாயத்துக்காகப் போராடுகிறார். திடீரென்று லாலின் மகன் ஒரு கொலைக் குற்றத்தில் சிக்கிவிட,  அவனை ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறார் விஜய். அன்றுமுதல் விஜய் லாலின் பரம எதிரியாகிறார். இதுதான் படத்தின் கதைச்சருக்கம். முழுபடத்தையும்  பார்க்க  பொங்கல் வரை காத்திருக்க வேண்டும்.

"ஜில்லா"வில் விஜயக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். விஜயுடன் காஜல் அகர்வால் நடிக்கும் இரண்டாவது படம்.. பூர்ணிமா பாக்கியராஜ் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார். இவர்களுடன் தம்பிராமையா, பிரமானந்தம், பரோட்டா சூரி ஆகியோரும் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் மகத் வில்லனாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார் நட்ராஜ் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்கிறார். என்.பாஸ்கர் வசனம் எழுதுகிறார். தாமரை, யுகபாரதி, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்கள். அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். இந்த படமாவது தலைவா மாதிரி பிர்ச்சனை இல்லாமல் வருமா?......
- செல்வன் 


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
Ajith Deena remake ?
  • நானும்
    14.02.2014 - 1 Comments
    இதுவரை எத்தனையோ நடிகர்கள்,நடிகைகள், இயக்குனர்களின் மரணமடைந்த போது ஏற்பாடத இனம்புரியாத ஒரு சோகம் பாலு…
  • குணமகள் தேவை
    26.09.2011 - 2 Comments
    என் மகன் M.S.Cண வரை படித்தவன். வாழ்வில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் தோல்விகளால் மனநோய்க்கு ஆளானான்.…
  • பசங்க -2 - வீட்ல பசங்க  இருந்த கண்டிப்பா பாருங்க...
    28.12.2015 - 0 Comments
    வழக்கமான படங்களிலிருந்தது புதுமாதரியான கதை. குழந்தைகளை எப்படி புரிந்து கொள்வது என்பதை புரிய வைக்கும்…
  •  ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடங்காத காளைகளை அடக்கி சாதனைகள் படைத்த மாவீரருக்கு கோவில் கட்டி வழிபடும் கிராமமக்கள்:
    17.01.2018 - 0 Comments
    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக…
  • நிலாவில் மர்ம க்குடில்... ஏலியான்களின்   வீடாக இருக்குமோ?
    18.12.2021 - 0 Comments
     நிலாவில் மர்கமகுடில் ஒன்றை  அங்கு  ஆய்வு செய்துவரும் சீன விண்கலம்…