ஆர்யா(ராஜா) -9தாரா(ராணி) - நல்ல ஜோடி


9தாராவுக்கும், ஆர்யாவுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக சொல்கிறார்கள்... அது எந்த அளவுக்கு என்பதை இந்த படத்தில் பார்க்கலாம். உங்க ஓய்ப் பேரு......, ம்ம்ம் தெரியல, என்ன வயசிருக்கும்,
ம்ம்ம் தெரியல, டாக்டரின் கேள்விகளுக்கு ஆர்யா இப்படி பதில் சொல்கிற அளவுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்காமல் திருமணம் செய்து கொள்கிற ஜோடி கடைசியில் சேருகிறார்களா இல்லையா என்பது தான் கதை. ஒரு சினிமாவுக்குள் 9தாரா,ஆர்யா, 9தாரா,ஜெய், ஆர்யா,நஸ்ரியா என மூன்று காதல் கதைகள்.அதனால் படம் கொஞ்சம் இழுவையாக தெரிகிறது. ஓளிப்பதிவு,காதல்காட்சிகள்,காமடி மூலம் அதை சரிக்கட்டி இருக்கிறார்கள்.படத்தில் சில காட்சிகள் இயக்குனர் அட்லியை கவனிக்க வைக்கிறது. 9தாராவும், ஆர்யாவும் கண்ணாடி முன் தனிதனியாக நின்று கொண்டிருந்தாலும், கண்ணாடியில் அவர்கள் அடித்துக்கொள்ளும்காட்சி, பிறகு இருவரும் மனம் மாறுகிற போது அதே கண்ணாடி முன்பு தனிதனியாக இருந்தாலும் கண்ணாடியில் கட்டிஅணைத்துக்கொள்ளும் காட்சியும், 9னின் அப்பாவாக வரும் சத்யராஜ் நடிப்பும்,அப்பா மகளுக்கிடையேயான உறவை மிக அழகாக செய்திருக்கிறார்கள். மூன்று காதல் ஜோடிகளின் காதல் காட்சிகளும் மிக அருமை.நகைச்சுவைக்கு சந்தானம், சத்யன் என இருவரும் இருக்கிறார்கள். ஆர்யாவுடன் சந்தானம், ஜெய்யுடன் சத்யன் என ஆளுக்கொரு பக்கம். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளன. அதை காட்சிப்படுத்திய விதம் அருமை.

படத்தின் ஒன்லைன்.....

நம்முடைய முந்தைய வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு தற்போது கிடைக்கும் வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது. காதலித்த பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை காதலிக்க பழகிக்கொள்ளுங்கள்
         
         சிலைடுஷோ  - 3 படங்கள்...

        


திரைக்கதை...

கிருத்துவ தேவலாயத்தில் 9தாரா,ஆர்யா திருமணத்துடன் திருமணம் துவங்கிகிறது. ஆர்யாவும் 9தாராவும் ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தினால் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு வீட்டுக்குள் தனித்தனியே யார் என்பது தெரியாததுபோல் ஒரு வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

ஒருநாள் 9தாராவுக்கு வலிப்பு நோய் வருகிறது. உடனே, அவரை ஆர்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். சிகிச்சைக்குப் பிறகு சகஜ நிலைக்கு திரும்பும் 9தாராவிடம், எப்படி இதுபோல் ஆனது என ஆர்யா விசாரிக்கிறார். அப்போது, 9தாரா தான் ஏற்கெனவே ஜெய்யை காதலித்ததாகவும், அவன் தற்கொலை செய்து கொண்டதையும் ஆர்யாவிடம் சொல்கிறார். இதைக் கேட்கும் ஆர்யா, 9தாரா மீது காதல் வயப்படுகிறார். ஆனால், 9தாரா ஆர்யாவை வெறுத்தே ஒதுக்குகிறார்.

ஆர்யாவை 9தாரா வெறுப்பதைக் கண்டு ஆர்யாவின் நண்பரான சந்தானம் ஒருநாள் 9தாராவை சந்தித்து தன் நண்பன் ஏற்கெனவே நஸ்ரியாவை காதலித்ததும், அவன் கண்முன்னேயே நஸ்ரியா விபத்தில் இறந்ததையும் கூறுகிறார். இதைக் கேட்கும் 9தாராவுக்கு ஆர்யா மீது மரியாதை ஏற்படுகிறது.

இறுதியில், இருவரும் மனம் மாறி இல்லற வாழ்க்கையில் சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை. படம் மேல்தட்டு ஜோடிகளின் கதை, படம் துவங்குகிற போதே கதை முடிவையூகிக்க முடிகிறது.9தாரவுக்காக பார்க்கலாம்...

-செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

Bagawanjee KA இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் விமர்சனம் அருமை !
என் கனவுக்கன்னி நயன் தாராவை 9தாரா எனக் குறிப்பிடுவதை கண்டிக்கிறேன் ,இன்னொரு முறை இது நடந்தால் தீக்குளிப்பேன் ,ஜாக்கிரதை !
தொடருங்கள் ..தொடர்கிறேன் !
thamilselvi இவ்வாறு கூறியுள்ளார்…
நன்று
Andichamy G இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வலைப்பூவிற்கு முதல் முறையா வர்றேன். உங்க அற்முகத்துக்கும் நட்புக்கும் மிக்க நன்றி. மறுபடியும் வருவோம்ல..!!
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பார்க்க வேண்டும்... ஸ்லைட் ஷோ அருமை...