நம்மை பற்றி தெரிந்து கொள்ள மதுரைக்கு வாங்ப்பா...


முன்னோர்கள் வளர்த்த தாவரங்களின் பெயர்களை கூட மறந்துவிட்டோம் . அரணைக்கும் ஓணானுக்கும் வித்தியாசம்¢  தெரியாமல் வளர்கிறார்கள் நம் பிள்ளைகள்.பாட்டுபாடி தும்பிப் பிடிக்கத் தெரியாமல் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் நம் குழந்தைகள்.
 நவீன வாழ்க்கை என்ற பெயரில் நாமும் நம் குழந்தைகளும் நம்மை சுற்றியிருப்பவற்றை மறந்துவிட்டோம். குறிப்பாக தமிழர்களாகிய நமக்கென்று தனியான பண்பாடும்,கலாச்சாரமும்,தனிபட்ட உணவு முறைகள்,தத்துவம்,வாழ்க்கை பழக்கவழக்கங்கள் என உலகின் பழமையான சமூகத்தை சேர்ந்தவர்கள். இவற்றையெல்லாம் மறந்து, அழித்து கொண்டுவருகிறோம். நம் பேசுகிற மொழி கூட இன்னும் ஒரு நூற்றாண்டில் மறைந்து விடும் நிலையில் இருக்கிறது.
           
 உலகில் மனிதர்கள் பரிணாமம் அடைந்த இடங்களில் அழிந்து போன லெமுரியாவும்,நம் தமிழகமும் முக்கியமானது என்பது நாம் அறிந்த செய்தி.  நம் தமிழ்மொழியும் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்கிறார்கள். அதிலும் சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் மூலமாக 2500 ஆண்டு வருட எழுத்துபூர்வமான வரலாறு நம்மிடம் உண்டு, இவை போக நம் தமிழ்மொழி வளர்ந்த வரலாறும், ஒரு காலத்தில் தமிழகத்தில் பிரபலமாக இருந்த சமணர்கள், அவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ்மொழி பற்றிய தகவல்களும் தமிழக முழுவதும் சிறு சிறு குன்றுகளில் கல்வெட்டுகளாக காணக்கிடைக்கின்றன. அதில் குறிப்பாக தமிழகத்தின் பண்பாட்டு தலைநகராக மதிக்கப்படுகிற மலைகள் சூழ்ந்த நகரமான மதுரையில், அரிட்டாபட்டி, திருப்பரங்குன்றும், அழகர்மலை கிடாரிப்பட்டி, முத்துப்பட்டி,யானை மலை, முதலை மலை,கீழவளவு ..... மலைகளில் 2500 ஆண்டுகளுக்கு முன் சமணர்கள் வாழந்த குகைகள், அவர்கள் பயன்படுத்திய கல்படுக்கைகள், நம் தமிழ்மொழியின் பழையவடிவமான வட்டெழுத்து,தமிழ்பிராமி காணக்கிடைக்கின்ற. இந்த மலைபகுதி கிரானைட் குவாரிகளாக மாறும் ஆபாயம் உள்ளது.

படத்தை கிளிக் செய்து பெரிதாக பார்க்கவும்.


இவற்றையெல்லாம் மீட்க எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் வழிநடத்துதலோடு பசுமை நடை என்ற நிகழ்வு கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டுவருகிறது.மாதம் ஒரு மலை என இதுவரை 24 பசுமை நடை நிகழ்வு முடிந்து, வருகிற ஆகஸ்ட 25 அன்று 25வது பசுமை நடையை விருட்சத்திருவிழாவாக கொண்டாடுகிறோம். பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம், சூழலியல் அறிஞர் தியோடர்பாஸ்கரன் உட்பட பசுமை ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.

சில பசுமைநடை பயண பதிவுகள்....

1. மதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்

2.மதுரையின் வரலாறு சொல்லும் யானைமலை

3.மழைப்பயணமாக மாறிய மலைப்பயணம்ஆர்வமுள்ள நண்பர்கள் 9443180480 தொடர்பு கொள்க. வாருங்கள் நம் பண்பாட்டை,வரலாற்றை பாதுகாப்போம்.

-செல்வன்.


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இதோ வந்துட்டேன்...
Bagawanjee KA இவ்வாறு கூறியுள்ளார்…
நடக்கட்டும் ,நடக்கட்டும் உங்கள் நல்ல பணி !