விதவிதமாய் புதிய எலிகள்.......


ஒவ்வொன்றும் ஒருவிதமாய்  புதிய எலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய டிசைன்கள், செயல்பாடுகளில் எலிகள் அதாங்க மவுஸ்கள் விற்ப¬னைக்கு வந்துள்ளன. இன்றைக்கு மவுஸ் இல்லையென்றால் கணிணி இந்த அளவுக்கு பயன்பாட்டுக்கு வந்திருக்காது. மவுஸ் கண்டுபிடித்த கார்ல்ஏங்கல் பர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 88 வயதில் மரணமடைந்திருக்கிறார்.
அமெரிக்காவின் போர்ட்லாண்ட் பகுதியை சேர்ந்தவர் டக்ளஸ் கார்ல் ஏங்கல்பர்ட். கணினித்துறையில் வல்லுநரான இவர் கடந்த 1968-ம் ஆண்டு கணிணிகளில்  பயன்படும் 'மவுஸ்'-ஐ கண்டுபிடித்தார். இது பாமர மக்களும் கம்ப்யூட்டரை எளிதாக இயக்க காரணமாக இருந்தது. மேலும் பின்னாளில் கம்ப்யூட்டர் உலகில் பல்வேறு சாதனைகளுக்கும் வழி வகுத்தது.மவுஸ் கண்டுபிடிப்பை தொடர்ந்து அவர், வீடியோ கான்பரன்சிங், இணையதளம், மின்னஞ்சல் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளிலும் முக்கிய பங்கு வகித்தார். மவுஸ் கண்டுபிடிப்புக்காக அவர் எந்தவொரு ராயல்டியையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ல் கண்டுபிடித்த மவுஸ்க்கு பிறகு பல மாற்றங்கள் அடைந்து தற்போது நாம் பயன்படுத்தும் மாடல் வந்துள்ளது. தற்போது மேலும் பல்வேறு சிறப்பு வசதிகளுடன்,மாறுபட்ட தோற்றத்துடனும் மவுஸ்கள் வந்துள்ளன... அவற்றை பற்றி சில தகவல்கள்.

        

1.3டி மவுஸ்

கனவுல கண்டுபிடிப்பு இது. பார்கவே மிக அழகாக இருக்கிறது. கையாள எவிதாக, வசதியாக இருக்கும். 5 விதமான செய்லகளை செய்கிறது.விலை 499 டாலர், அனைத்து கணிணிகளிலும் பயன்படுத்தலாம்.

2.வயர்லெஸ் மவுஸ்

வட்டவடிவம் கொண்டது. வலது, இடது பக்கமாகவும், மேலும் கீழும் நகரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

3.எலி போன்ற மவுஸ்

பித்தளை தட்டுகள், சில்வர், மரப்பெருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. உண்மையான எலிபோன்ற தோற்றம் கொண்டது.

4. ஏர் மவுஸ்

கையில் கையுரை மாதரி அணிந்து கொள்ளலாம்.கனடா நிறுவனத்தின் தயாரிப்பு. கை சைகையினால் இயங்குகிறது. கைகளை நாம் எப்படியெல்லாம் அசைக்கிறோமோ அதற்கேற்ப வேலை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

5.பிளாக் மவுஸ்

.தற்போதுள்ள வடிவமைப்பில் இருந்தாலும் ஒரே மாதியான பட்டன்கள் உள்ளமைந்த மெல்லியதான கருப்பு வண்ணத்தில் உள்ளது.கணிணியை கட்டுப்படுத்தும் பல்வேறு பட்டன்களை கொண்டது.


6. பெருவிரல் மவுஸ்

இதுவும் வயர்லெஸ் மவுஸ்தான். கையை அடக்கமான பெருவிரல் அசைவுகளை கொண்டு இயங்க கூடியது.15 மீட்டர் தூரத்தில் இருந்தும் இயக்கலாம்.

7.ஆப்பிள் மவுஸ்

ஆப்பில் வடிவமானது. கையசைவுகளில் இயங்ககூடியது.பட்டன்கள் இல்லாமல்,மெல்லியதாக இருக்கும். கண்ணாடி மேல்புறம் கொண்டது.

8. முகமூடி மவுஸ்

மரத்தாலும்,உலோகத்தாலும் செய்யப்பட்டது. தோற்றத்தில் கண்,மூக்கு,காது, அமைக்கப்பட மூகமூடி போன்ற தோற்றத்துடன் இருக்கும்.

புதிய எலிகள் எப்படி? தற்போது விற்பனைக்கு வந்துள்ள எலிகள் இவை .வெளிநாட்டு நண்பர்கள், அல்லது வெளிநாடு செல்லும நண்பர்கள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.

-செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

Anonymous said…
வணக்கம்
(எலி)மவுஸ்பற்றி அருமையான விளக்கம் அத்தோடு விதம் விதம்மான (எலி)மவுஸ்களி படங்கள் அவற்றின் விளக்கங்கள் மிக நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-