1 ஆக., 2013

வெல்லம், பனம்கருப்பட்டி, அச்சுவெல்லம்.......

இனிப்பு சுவை என்பது உலகில் உள்ள அனைவராலும் விரும்பப்படுவதாகும். காலையில் எழுந்து காபி குடிப்பது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் முன் குடிக்கும் பால் வரை நமது அன்றாட உணவுப் பொருட்களில் சீனி ஊடுருவி உள்ளது. பெரும்பாலானோர் சீனியை அப்படியே அள்ளி வாயில் போட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வெள்ளை நிற சீனியை எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டால் அதை நாம் கையால் கூட தொட மாட்டோம். இதோ வெள்ளை சீனியை என்னென்ன ரசாயன பொருட்கள் கொண்டு தயார் செய்கிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவலை  பார்ப்போம்....

* கரும்பில் இருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளீச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளூயிட் பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

* கரும்பில் இருந்து பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரேட் வரை பாஸ்போரிக் அமிலம் லிட்டருக்கு 200 மி.லி. வீதம் கலந்து கொதிக்க வைக்கப்படுகிறது. இந்த சமயத்தில்தான் ஆசிட் அழுக்குகளை நீக்கும் நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.

* இதையடுத்து சுண்ணாம்பை 0.2 சதவீதம் என்ற அளவில் சேர்த்து சல்பர் டை ஆக்சைடு வாயுவை உட்செலுத்துகிறார்கள்.

* பின்னர் 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தியதில் நல்ல வைட்டமின்கள் இழந்து செயற்கை சுண்ணாம்பு சத்து அதிகளவில் உட்பொருளாக சேர்ந்து விடுகிறது.

* அடுத்து பாலி எலக்ட்ரோலைட் சேர்த்து கொதிகலனில் மண், சக்கை போன்ற பொருட்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

* சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங்சோடா சேர்த்து அடர்மிகுந்த சாறு(ஜூஸ்) தயாரிக்கப்படுகிறது.


* மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும், சோடியம் ஹைட்ரோ சல்பைடும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக மாற்றப்படுகிறது. இந்த இடத்தில்தான் சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்து விடுகிறது.

* இத்தனை அடுக்கு தயாரிப்புகளுக்கு பின்பு மிஞ்சியிருக்கும் சீனியில் எஞ்சியிருப்பது வெறும் கார்பன் என்ற கரிதான்.

தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாத காலத்திற்கு அதிகமாக ஸ்டாக்கில் உள்ள சீனியை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் காரணம். அதில் உள்ள சல்பர் டை ஆக்சைடு எனும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியம் கொண்ட நஞ்சாக மாறி விடுகிறது. அழுக்கடைந்த உடைகளை சோப் போட்டு அலசினால் அழுக்கு போகவில்லை என்றால் சிறிது சீனியை எடுத்து அழுக்குள்ள இடத்தில் தேய்த்தால் அது மாயமாய் பறந்து பளீச் என்று ஆகி விடுகிறது. இதற்கு காரணம் சீனியில் உள்ள வேதிப் பொருட்கள்தான்.
இப்படியொரு வேதிப் பொருளான வெண்மை நிற சீனியைத் தான் நாம் அள்ளித் தின்றபடி உணவு வகைகளிலும் சேர்த்து உடல் நலத்தை கெடுத்து வருகிறோம். இந்த சீனியை சாப்பிட்டால் குடலும், வயிறும், இரைப்பையும் என்ன பாடுபடும் என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. இது மட்டுமல்ல, பல்வலி, பல் சொத்தை, அல்சர், சளித் தொல்லை, உடல் பருமன், சிறுநீரக கற்கள், இதய நோய், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்து பெரிய வியாதிகளுக்கும் இந்த வெண்ணிற சீனியே காரணகர்த்தாவாகி விடுகிறது.
எனவே தான் ரசாயன ஆலையில் உருவாக்கப்படும் வெள்ளைச் சீனி உபயோகிப்பதை நிறுத்தி விட்டு வெல்லம், பனம்கருப்பட்டி, அச்சுவெல்லம், நாட்டு சர்க்கரை, பணங்கற்கண்டு போன்றவற்றை பயன்படுத்துவது சாலச்சிறந்தது. வெறும் வாயிலே இவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் பாதிப்புகள் ஏற்படாது. மேலும் இயற்கை இனிப்பு பொருட்களால் ரத்த அழுத்தமா, இதயநோயோ, சர்க்கரை வியாதியோ நிச்சயம் வராது.
வெள்ளை சீனிக்கு குட்பை!
உடல் நலத்துக்கு ஹாய்! ஹாய்!

செல்வராஜ்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Related Posts Plugin for WordPress, Blogger...