தலைவா பட தடைக்கு 3 காரணங்கள் ....

தலைவா படம் ஒரு வாரகாலமாக தடை செய் யப்பட்டுள்ளது. படம் தடை செய்ய ப்பட பல காரணங் கள் சொல்லப் படுகின்றன. கதையின் மையக்கருத்தாக சொல்லப்படுகிற மும்பை தாதா ஒருவரின் பேரன் வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல், அடுத்ததாக நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி  மேடைகளில் விஜயை அடுத்த முதல்வராகவே பாவித்து பேசிதாக சொல்லப்படுகிறது.
புரட்சி மாணவர் படை என்ற அமைப்பு தியோட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது காரணமாக சொல்லப்படுகிறது, இவர்கள் யார் என்பதோ , எதற்காக மிரட்டல் விடுத்தார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் இ¢ல்லை. அடுத்தாக அரசியல் தரப்பில் இருந்து பணம் எதிர்பார்பதாக சொல்லப்படுகிறது. இப்படி பல ஊகங்கள் சொல்லப்படுகின்ற. உண்மை என்ன என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...

             படத்தின் இயக்குனர் விஜய் ...இந்த படத்தில் அரசுக்கு எதிரான காட்சிகளோ,வசனங்களோ இல்லை என பேட்டி அளித்துள்ளார். பட தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ரூ. 40 கோடி நஷ்டம் அடைந்துள்ளேன். தெருவில் நிற்கிறேன் என கண்ணீர்விட்டு அழுகிறார். நடிகர் விஜய் முதல்வர் உதவவேண்டும்,படம் வெளிவரும் என்று நம்புகிறேன் என நம்பிக்கை தெரிவித்து இருக்¤றார்.

கேரளாவில் படம் பார்த்த நண்பர் படம் தடைக்கு மூன்று அரசியல் சம்பவங்களை காணமாக இருக்கலாம் என்கிறார்...

1. மினரல்வாட்டர் வாடிக்கையாளர்களிடம் தன்னை மாட்டிவிடும் விஜயிடம் சந்தானம் ''நம்ம ஊர் அரசியல்ல சேர எல்லாத் தகுதியும் இருக்கு உனக்கு'' என்கிறார்.

2. மக்களுக்கு நல்லது செய்யத் தயங்கிக் கொண்டிருக்கும் விஜயிடம் ஒய்.ஜி.மகேந்திரன் தலைவன்கிறது நாம் தேடிப் போற விஷயம் இல்லை. நம்மை தேடி வர்ற விஷயம் உன்னை அவங்களுக்குத் தலைவன் ஆக கூப்பிடுறாங்க.

3. இந்த படத்தில் சத்யராஜ் கேரக்டருக்கு அண்ணா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அவரின் அதாவது அண்ணாவின் (அறிஞர் அண்ணா?????) வாரிசு விஜய் என்று படகாட்சிகள் உள்ளன.

மற்றபடி மும்பை தாதா ஒருவரை பற்றிய கதை, கிட்டத்தட்ட நாயகன் ஸ்டைல் படம் வழக்கமான விஜய் படம்போல காமடி,பைட் படம் தான். தமிழக காவல்துறை படம் தடைக்கு நாங்கள் காரணமல்ல என அறிவித்திருக்கிறது. தமிழக அரசிடம்இருந்து இதுவரை எந்த ரியாக்ஸனும் இல்லை.உண்மை பிரச்சனை அரசியல் அல்ல என்றால் நல்லது. அரசியல் தான் காரணம் என்றால் ........

-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

saran said…
good bro
பிரச்சனை அரசியல் அல்ல என்றால் நல்லது. அரசியல் தான் காரணம் என்றால் ........அதை விட நல்லது....
Anonymous said…
anantha vikadanla vanthatha appadeiye copy



sivaparkavi
  • முதல் ''குடிமகனும்'' கடைசி ''குடிமகனும்''
    13.09.2012 - 4 Comments
    டாஸ்மாக் பார்ல கடைதிறக்க சரக்கு வாங்குற முதல்குடிமகன்,இரவு 10 மணிக்கு பார் அடைக்கும் போது கடைசியா சரக்கு…
  •  நாம் ஏன் இரவில் தூங்குகிறோம்?
    13.10.2015 - 1 Comments
    நாம் ஏன் இரவில் தூங்குகிறோம்?இந்தகேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்கு முன்னால் ... நம் எல்லோருடைய…
  • நீங்கள் முதன் முதலில் கேட்ட கதை எது?  எஸ்.ராமகிருஷ்ணன்
    24.10.2013 - 2 Comments
    நீங்கள் எப்போது யாரிடம் கதை கேட்டீர்கள், நீங்கள் எப்போது யாருக்குக் கதை சொல்லியிருக்கிறீர்கள் ? நீங்கள்…
  • கமல் - ஜாக்கி சான் இணையும்
    08.02.2012 - 1 Comments
    கமல் தனது ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை துவங்க முடியாமல் தவித்து வந்தார். தற்பொழுது ஒருவழியாக ஆஸ்கார்…
  • பெயிண்ட் அடிக்கும் வ.உ.சி யின் பேரன்கள்....
    04.05.2014 - 2 Comments
    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையமாக வைத்து `அங்குசம்’ திரைப்படத்தை எடுத்த (இப்படி நல்ல படங்கள் எப்ப…