26 ஜூலை, 2013

அந்த விபத்து தான் என் சினிமாவின் ஆரம்பபுள்ளி - பாலுமகேந்திரா

பாலுமகேந்திரா படங்களை இயக்கி பல ஆண்டுகளாகின்றன.  பி.சி.ஸ்ரீராம் தொடங்கி இந்தியா முழுவதும் ஒளிப்பதிவில் முக்கிய இடத்தில் இருக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கு பாலு தான் துவக்க புள்ளி. அவர் சினிமாவுக்கு வருவதற்கான  ஆரம்பபுள்ளி குறித்து ......

“என்னுடைய ஆரம்பகால பள்ளிப்படிப்பில் பூராவும் மட்டக்களப்பு சென்மைக்கல்ஸ்ல இருந்தது. அங்கு பாதர் லோறியஸ் என்று ஒரு அமெரிக்கர் இருந்தார். அவருக்கு சினிமா பைத்தியம், அவருடைய இந்த சினிமா பைத்தி யம் தான் எனக்கும் கொஞ்சம் ஒட்டியிருக்கணுமின்னு நினைக்கிறேன்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் காட்டுவார் பல உலக சினிமாக்களை சின்ன வயசில பார்த்த அந்த சந்தோசம். அதுக்கப்புறம் ஒரு தடம் 4ம் கிளாசோ 5ம் கிளாசோ சரியா ஞாபகமில்ல சுற்றுலா கூட்டிப் போயிருந்தாங்க. கண்டி என்ற இடத்தில் நாங்கள் தங்கியி ருந்தோம். இலங்கிலீஸ் படம் சூட்டிங் நடக்கிறதா தெரிய வந்தது. பாதர் லோறியஸ்சுக்கு சினிமா பைத்தியம் என்ற தால அவர் அந்த சூட்டிங் பாக்க ஆசைப்பட்டார். அவர் போன தினால் எங்க எல்லாரையுமே கூட்டிப் போனார். அங்க போனா எல்லாருமே வெள்ளக்காரங்க, ஒண்ணுரெண்ணு பேர் நம்மாளுங்க, குறிப்பா ஒருத்தர் அந்தக் குழுவுக்கு தலைவர் போல இயங்கிக்கிட்டு இருந்தார். எல்லோரும் அவர்கிட்ட வந்து என்னமோ பேசிக்கிட்டு போய்கிட்டு இருந் தாங்க. எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தார். அவர் ஏதோ சைகை காட்டியிருக்க வேண்டும். திடீரென அமைதி நிலவியது. எங்களுக்கும் அமைதியா இருக்கும்படி சைகை காட்டப்பட்டது. அன்று வெயில் இருக்கக் கூடிய ஒரு சாதாரண நாள், லேசா மழை மூட்டம் இருந்தது. ஆனா ஒரு மழைத்துளி கூட இல்லை. அங்கு தலைவர் போல இருந்தவர் “ரெயின்ன்ன்”ன்னு கத்தினார். கத்தினதுமே மழை பெய்ய ஆரம்பித்தது; நான்பிரமித்துப்போனேன் ரெயின் ன்னு இந்தமனுசன் கத்தினதுமே மழை பெய்யு துன்னா அவர் கடவுளா இருக்கணுமின்னு எனக்கு தோணிச்சு, அன்னிக்கு நான் நினைச்சுக்கிட்டடேன். ஒரு நாள் நானும் “ரெயின்”ன்னு கத்துவேன் அன் னிக்கு மழை பெய்யணுமின்னு. என்னுடைய இளமைக் காலத்திலே சினிமாவினுடைய ஆரம்பம் இதுதாண்ணு சொல்லாம்.

அதுக்கப்புறம் எனக்கு 14 வயசா இருக்கிறப்போ எங்கப்பா போட்டோ எடுக்கிற கமரா வாங்கிக் கொடுத்தார். இன்னிக்கு வரைக்கும் எனக்கு ஏன் கேமரா கொடுத் தாருன்னு அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. அது ஒரு விபத்தாக நடந்த விசயம். அந்த விபத்துதான் என்னுடைய சினிமாவிற்கு இன்னுமொரு ஆரம்பப் புள்ளி; போட்டோ கிராபியோட ஆரம்பப்புள்ளி என்றும் சொல் லலாம். நான், காசியானந்தன், மௌனகுரு போன்ற எல் லாருமே பக்கத்து பக்கத்து வீடு தான். வாவி ஓரத்தில் அமைந்த அழகான கிராமம் அமிர்தகழி. அந்த மாமாங்க குளமும் அங்கு நீச்சல் அடிச்சு விளையாடு வதும், அந்த கமுக மரங்களும், தெருக்களும் ரொம்ப சந்தோ சமான ஒரு காலமாக இருந்தது. அமிர்தகழி மாமாங்க குளத்தில் எங்க கூட்டத்தில் ஒரு நண்பன் நீந்தத் தெரி யாம குளத்தில் இறங்கி தாமரைக் கொடியில் சிக்கி இறந்து போனது மிகப் பெரிய சோகமா இருந்தது. என்னோட இளமைப்பருவம், பாலியம் முடிந்தது அன்றைய தினம் என்றே சொல்லாம்.

அழியாத கோலங்களில் குளத்தில் சிக்கி ஒரு பையன் இறந்து போவான், அந்த சிறுவன் தான் நான் இப் பொழுது உங்களுக்கு சொன்ன நண்பனுடைய இறப்பு, இழப்பு”.
 இன்றைக்கு ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய பரத்பாலா,சந்தோஷ்சிவன் படங்களின் காட்சிகளை கவிதையாக எடுப்பார்கள்,ஆனால் படத்தின்திரைக்கதை சொதப்பி விடுவார்கள். அதில் பாலுமகேந்திராவின் முன்றாம்பிறை போன்ற படங்களில் காட்சியமைப்பும் சரி திரைகதையும் அற்புதமாக அமைந்திருக்கும்.

 (பூவரசி  அரையாண்டிதழ் பேட்டியி லிருந்து
ஒருபகுதி)

தொகுப்பு செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்Related Posts Plugin for WordPress, Blogger...