டீசர்ட்,டவுசர்,நைட்டி- - குற்றாலக்குளியல்

டீசர்ட், டவுசர், நைட்டி குற்றாலம் முழுவதுமே இப்படி தான் இருக்கிறது. மேகம் மூடிய மலைகள், வானதிலிருந்து நேரடியாக கொட்டுவது போன்ற  அருவி, சாரல் மழை என குற்றாலமே குளித்தபடி இருக்கிறது.
ஒருவாளி, இரண்டுவாளி தண்ணீரில் குளிக்கும் நமக்கு வருடத்திற்கு ஒருமுறையாவது முழுமையான குளியல் போட குற்றாலம் சரியான இடம். மேகமூட்டமும், குளிர்ந்து காற்றும் ராஜபாளையம் நெருங்கியதுமே குற்றால எபக்ட் தெரியத்துவங்குகிறது. சமீபநாட்களாக மதுரையிலேயே  மாலை நேரங்கள் சாரல் விழத்தொடங்குகிறது.
குற்றாலம் அருகே செல்லச்செல்ல கடைநல்லூர், தென்காசியில் மழைச்சாரலில் நனைந்தபடியே இருக்க வேண்டியதுதான்.குற்றாலம் பேருந்துநிலையத்தில் இறங்கிதுமே பிரதான அருவி (மெயின் பால்ஸ்) யில் வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.குற்றாலத்தில் இறங்கியதும் செல்போன்,வாட்ச்,பணம் இவைகளை பாலிதீன் பைகளில் பத்திரபடுத்திவிடுங்கள். ஒரு டவுசர், ஒரு டிசர்ட் போதுமானது. குற்றாலத்தை பொருத்தவரை வெயிலும்,மழையும் சில நிமிட இடைவெளிகளில் மாறி மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் அருவியில் மட்டுமல்ல தெருவில் நடந்து சென்றாலே மழையில் குளித்துக்கொண்டே இருக்கலாம். மழைக்கு யாரும் ஒதுங்குவதில்லை.


        பிரதான அருவி,ஐந்தருவி,பழையகுற்றாலம், செண்பகாதேவி அருவி,தேன் அருவி என ஐந்து அருவிகளில் முதல் மூன்று அருவிகள் குளிப்பதற்கான வசதிகள் அதிகம். சிமெண்ட் தளம், பொருட்களை பாதுகாக்க அறைகள், பெண்களுக்காக தனி பகுதிகள் உள்ளன. அருவி நீர் தெரித்து விழத்தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அருவியில் நனையத்தொடங்கிவிட்டால் அது அற்புதமான நிகழ்வாக இருக்கும், உயரத்திலிருந்து விழும் அருவி நீர் சடசடசட  என அடிக்கிறது. தலைக்கு சாம்பு,சீயக்காய்,எண்ணை போடத்தேவையில்லை,உங்களை உரசிக்கொண்டு செல்லும் நண்பர்களே எல்லாவற்றையும் செய்துவிடுவார்கள். பிரதான அருவி, ஐந்தருவியில் கூட்டம் அதிகம். பழைய குற்றாலம் நிதானமான கூட்டம் திருப்தியாக அருவியில் நிற்கலாம்.குற்றலாத்தின் தெருக்களிலும், ஆட்டோ, பஸ் என எங்கு பார்த்தாலும் குளித்து முடித்த ஈர உடைகளோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
மிளகாய் பஜ்ஜி,வடை,போண்ட என குளிருக்கு இதமாக சூடாக சாப்பிடலாம். எவ்வளவு சாப்பிட்டாலும் அருவியில் குளித்து முடித்ததும் பசி எடுக்க துவங்கும். குற்றா லத்தில் லம்டான் பழம், மங்குஸ் தான் பழம் என இரண்டு புதிய பழங்கள் கிடைக்கின்றன. புளிப்பும் இனிப்பும் கலந்த அருமையான சுவை.
செண்பகா தேவி,தேன் அருவியில் குளிக்க வேண்டுமானல் மலை பகுதிகளில் இரண்டு ,மூன்று கிலோ மீட்டர் நடந்தாகவேண்டும்,புலி அருவி இன்னும் சற்று ஆபாயமான பகுதி, செண்பகா தேவி அருவியை பொருத்தவரை வருடத்திற்கு தவறி விழுந்து, அருவி செல்லும் பாதையில் சிக்கி கொண்டு இறந்தவர்கள் அதிகம்.

                     எங்களை போன்ற மதுரைகாரர்களுக்கு ஒருநாள் டூர். பேரூந்து பயணம், பொதிகை, செங்கோட்டை ரயிலில் பயணத்தில் இரண்டை மணி நேர பயணம் தான். பொதிகை மதுரையில் அதிகாலை 4மணிக்கு கிளம்புகிறது, மதுரை , செங்கோட்டை ரயில் காலை 7 மணிக்கு, மணிக்கு இரண்டு பேருந்துகள் என குற்றாலம்,செங்கோட்டைக்கு மாட்டுத்தாவணியிலிருந்து புறப்படுகிறது. வட மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு தென்காசி, குற்றாலத்தில் ரூ400 லிருந்து வாடகை ரூம்கள் கிடைக்கின்றன. குடும்பத்தோடு வந்து தங்குபவர்களுக்கு தென்காசி பகுதிகளில் வீடுகள் வாடகைக்கு கிடைக்கும்.  அருவிகளுக்கு  செல்ல டவுன் பஸ்கள், சேர் ஆட்டோக்கள் ஆம்னி வேன்கள், மினி பஸ் கிடைக்கின்றன.
     
      


ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் என மூன்று மாதங்கள் களைகட்டும் குளியல் திருவிழா வருடம் ஒருமுறையாவது  முழுமையான குளியல் கிடைக்கும். ஜூலை 27 முதல் ஆகஸ்ட 5 வரை சாரல் திருவிழா நடக்கிறது. மேகம் தவழும் மலைகளும், மழைச்சாரலும், ஆர்ப்பரித்து கொட்டும் அருவியும், குளிக்கின்ற போது உற்சாகத்தில் ஓஓ...ஓஓ... என்ற சத்தமும் ஒருவருடத்திற்கு உங்களை உற்சாகப்படுத்தும்.

-செல்வன் 

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments

இன்னும் குற்றாலம் போனது இல்லை...

மதுரையில் இருந்து செல்ல வேண்டிய வழிகளை சொல்லியிருகிங்க..

முயற்சிக்கிறேன்...
குற்றலாம்... குதுகலம்...
Ponchandar said…
நம்மூருக்கு வந்துட்டு போயிருக்கீக ! ! குளிச்சுட்டு எங்கன சாப்பிட்டீகன்னு சொல்லவேயில்லையே ! ! என் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் குற்றால மெயின் அருவி தெரியும்
போகாத வருடம்.... ஞாபகத்திற்கு வரவில்லை... பிறகு சொல்கிறேன்...

ரசனைக்கு வாழ்த்துக்கள்...
போகாத வருடம் - ஞாபகத்திற்கு வரவில்லை... பிறகு சொல்கிறேன்...

ரசனைக்கு வாழ்த்துக்கள்...
ராஜி said…
எனக்கு ரொம்ப பிடித்தமான இடம். வருடம் ஒருமுறை வருவோம்.