தற்கொலையில் தமிழகம் முதலிடம் ஏன்?.என்ன செய்யலாம் .......


தற்கொலைகளின் தலைநகராக பெங்களூர் கடந்த ஆண்டுகளில் இருந்து வந்தது. தற்போது அந்த இடத்தை சென்னை பெற்றுள்ளது. கூடுதலாக இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. நாளிதழ்கள் படிப்பவர்கள் கவனித்திருக்கலாம் விஷம் குடித்து, தூக்கிட்டு  என தற்கொலை செய்திகள் அதிகமாகி வருவதை. தற்கொலை செய்துகொள்ள காதல் தோல்வி,வறுமை,கடன் தொல்லை, குடும்பபிரச்சனைகள், தற்போதுள்ள போட்டியான உலகத்தில் தாக்குபிடிக்க முடியாமை போன்றவை காரணங்களாகின்றன. இது போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்ப்பட்டு நாளா¬டைவில் தற்கொலைக்கு தள்ளுகின்றன.

       
                   மனஅழுத்தம் குறித்து மேலும் 3 பதிவுகளின் இணைப்பு
                 
                      1. 21 ம் நூற்றாண்டின் முக்கிய நோய் மன அழுத்தம்
                 
                      2. பொறாமைபடுபவர்களுக்கு மட்டும்
               
                       3. மனம் விட்டு சிரிக்க தெரியுமா உங்களுக்கு?.

மன அழுத்தம் என்பது உலக மக்களிடையே பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கும்போது, தேவையற்ற கோபம், புதிதாக குடிப்பழக்கம், போதை மருந்துகள் பயன்படுத்துதல், தீராத நோய்கள் என பல்வேறு பிரச்சினை உருவாகிறது.
இவற்றுக்கெல்லாம் மேலாக மன அழுத்தம் உச்ச கட்டத்தை
தொடும்போது, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரிக்கிறது. உலகமெங்கிலும் நிகழும் தற்கொலைகளில் 60 சதம் பேர் தீராத மன அழுத்தம் காரணமாக தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மன அழுத்தம் தொடர்ந்து இருப்பதால் உறவுகளுடன் தகராறு, அலுவலகங்களில் பிரச்சினை மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் மாற்றாக மன அழுத்தத்தை குறைத்து உள்ளத்துக்கு குதூகுலமீட்டிடும் மூலிகைச் செடிகள் பல உள்ளன. இந்த மூலிகைச் செடிகளை பயன்படுத்தினால் மன அழுத்தம்  குறைந்து ரிலாக்ஸ் ஏற்படுவது நிச்சயம்.

கிரீன் டீ.

மூலிகைகளில் ஒன்றான கிரீன்  டீ அருந்துவதால் பல்வேறு நன்மை கிடைக்கிறது. முக்கியமாக கிரீன் டீ குடித்தால் மன அழுத்தம் பெருமளவு குறைந்து விடும் என்பது யாருக்கும் தெரியாது.தினமும் 3-4 கப் கிரீன் டீ குடித்தால் மன அழுத்தம் முற்றிலுமாகக் குறைந்து விடும். இதில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடை குறைந்திடும் என்பது பிளஸ் பாய்ண்ட்.

மணற்பூண்டு

மணற்பூண்டு என்பது ஒருவிதமான மன அழுத்தத்தை குறைத்திடு மூலிகைச் செடியாகும்.இதன் இலைகளை அரைத்து உடலில் தடவிக் கொண்டால் தசைகள் ரிலாக்ஸ் ஆவதுடன், மூளையும் ரிலாக்ஸ் ஆகி விடும். குறிப்பாக மனதில் ஏற்படும் தேவையற்ற வலிகளை சரிசெய்து  விடும். ஏனெனில் மணற்பூண்டில் உள்ள நறுமணம் மந்திரத்தன்மையுடையதாகும்.

 லாவண்டர்


லாவண்டர் என்ற இந்த செடியில் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. இதனால் உடலில் ஹார்மோன்களில் ஏற்படும் பாதிப்புகள் சரியாகிவிடும்.
லாவண்டர் எண்ணையை வைத்து உடல் முழுவதும் மசாஜ் செய்தால் உடல் புதுப்பொலிவு பெறும்.லாவண்டர் மூலிகையில் மணத்துடன் தயாரிக்கப்படும் டீயை அருந்தினால் மன அழுத்தம் குறைவது நிச்சயம்.  
  
சீமை சாமந்தி

சீமை சாமந்திப்பூ சிறந்த மூலிகைத் செடியாகும். இது காய்ச்சலால் ஏற்படும்  சில உடல் வலிகளை நிவர்த்தி செய்திடும் மருத்துவ குணமுள்ளதாகும்.
உடல் வலியால் அவகிப்பட்டு மன அழுத்தம் அதிகரிப்பவர்கள் சீமை சாமந்திப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி குளித்து வந்தால் உடல் வலி நீங்குவதோடு அதன் நறுமணத்தால் மன அழுத்தம்குறைந்து உடல் அழகாகும்.
                     

ரோஸ்மேரி

மூலிகைச் செடிகளில் ஒன்றான ரோஸ்மேரி மன அழுத்தத்தை குறைத்திட பெரிதும் உதவுகிறது. இவை உடல் தசைகளில் ஏற்படு ம் வலிகளுக்கு சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. ரோஸ்மேரி மூலிகை எண்ணையை தலைக்குத் தொடர்ந்து தேய்த்து வந்தால் மூளையில் ஏற்படும் அழுத்தங்கள்குறைந்து ரிலாக்ஸ் ஏற்படும்.

சாதாரண மூலிகை தானே என்று எவற்றையும் ஒதுக்கிவிடாமல்
முறையான உடற்பயிற்சி, நேரத்துக்கு நேரம் உணவு, வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து நீராடல், அதிகாலை தியானம் பணிகள் திட்டமிடல் போன்றவற்றுடன் மன அழுத்தத்தை குறைத்திடும் மூலிகைகளை முறையாகப் பயன்படுத்தினால் மனசு காற்றாய் பறப்பது நிச்சயம்....மனசே ரிலாக்ஸ் பிளீஸ்....
                               -.செல்வராஜ்     
                               

   
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இவை எல்லாம் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை...

"மௌனத்தோடு திருப்தி" அடைந்து கொள்கிறேன்... நன்றி...