20 ஜூன், 2013

கமல் ஹாலிவுட் போகிறாரா இல்லையா?

தசாவதாரம்  இசைவெளியீட்டு விழா சமயத்தில் கமல், ஜாக்கிசான்  இணைந்து நடிக்கப்போவதாக  தகவல்கள் ஊடகங்களில் வரதொடங்கின.  அதன் பிறகு வேறு எந்த தகவலும் இல்லை. செய்தி உண்மையா? பொய்யா என தெரியவில்லை?. தற்போது விஸ்வரூபம் தயாரிப்பு நிலையிலிருந்த போது ''லார்டு ஆப்த ரிங்ஸ்'' போன்ற வெற்றி படங்களை தயாரித்த ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் உடன் இணைந்து ''ஆல் ஆர் கின்'' என்ற பெயரில் படம் இயக்கப் போவதாக தகவல் வந்தன. பேரி ஆஸ்போனுடன்  இணைந்து கமல் நிற்பது போல பல புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. மேலும் ஹாலிவுட் வெற்றிப்பட இயக்குனர் ஸ்பில்பெர்க் டெல்லி வந்த போது கமல் அவருடன் இருப்பது போன்ற படங்கள் வந்தன.


                   விஸ்வரூபம் பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு வெளிவந்து பிரமாண்ட வெற்றியும், இந்திய சினிமா துறையில் பரபரப்பையும் ஏற்படுத்தியது. சினிமா தணிக்கை துறையில் புதிய சட்டம் கொண்டுவரும் அளவுக்கு பிரபலமடைந்தது.

தற்போது விஸ்வரூபம் 2 யை ''மூ'' என்ற பெயரில் இந்தியா, தாய்லாந்து உட்பட பல இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்று தீபாவளிக்கு வெளிவரும் என்று சொல்கிறார்கள்.

இந்த படம மாவது எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளிவருமா என தெரியவில்லை. ''மூ'' க்கு பிறகு இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் ''உத்தமவில்லன்'' என்ற பெயரில் இதுவரை கமலுடன் நடிக்காத நகைச்சுவை நடிகர்
விவேக் இணைந்து கலக்க
போவதாக சொல்கிறார்கள்.

கிரேசிமோகன் வசனத்தில் நகைசுவை படம். இதற்கிடையில் கமலுடன் அதிக படங்களில் நடித்த நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து புதிய படம் ஒன்றும் வர இருப்தாக சொல்கிறார்கள். ஸ்ரீதேவியிடம் கமல் கதை சொன்னதாகவும் அதில் ஒரு கதையை ஸ்ரீதேவி ஓகே சொல்லியிருப்பதாகவும் தகவல். ஸ்ரீதேவி படம் எந்த அளவுக்கு உண்மையா என தெரியாது.

             ஆக இன்னும் 2 ஆண்டுகளுக்கு கமலுக்கு இங்கே வேலையிருக்கிறது. கமல் ஹாலிவுட் எப்போது  போகிறார். இல்லை அந்த திட்டம் நிறுத்தபட்டதா?. கமல் ஹாலிவுட் போகிறாரா இல்லையா? தெரிந்தவர்கள் தகவல் சொல்லுங்கள்

- செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...