நாம் உருவான வரலாறு 1 நிமிட காணொலியாக பார்க்க....

இந்த பதிவை படிக்க கூட உங்களுக்கு சில நிமிடங்களாகலாம். ஆனால் 14 பில்லியன் ஆண்டுகளின் வரலாற்றை 1 நிமிடத்தில் சொல்லிவிடுகிறது இந்த காணொலி. இந்த காணொலி பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து மனிதன் பரிணாமம், இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் அறிவியல் வளரச்சி வரை யான மிக நிண்ட வரலாற்றை சொல்கிறது. காணொலியில் உள்ள தகவல் குறித்து  சில விளக்கங்கள்.

இந்த பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியது? எப்படி தோன்றியது? என்பதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறி வந்தனர். இறுதியாக பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பின் மூலம்தான் இப்பிரபஞ்சம் உருவானது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்
மில்லி மீட்டர் அளவில் ஒன்று திரண்டிருந்த அணுக்கள் திடீரென பயங்கர வேகத்துடன் வெடித்துச் சிதறியது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இது விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாரு விரிவடைந்த போது வெப்பம் தனிந்த வாயுக்கள் தான் நட்சத்திரங்களாகவும் கோள்களாகவும் உருவாயின என்பது தான் பெருவெடிப்புக் கொள்கை. இது 14 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதன் பிறகு கடந்த 460 லிருந்து 500 கோடி ஆண்டுகளில் நம்முடைய  சூரிய மண்டலமும் பூமியும் உருவாகின. இதன் பிறகு வால்நட்ச்சதிரங்கள், எரிகற்கள் மூலமாகவோ அல்லது பூமியில் இயற்கையாகவோ உயிரனங்கள் தோன்றி வளரதொடங்கி, நாம் பூமியின் மைந்தர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உயிர்கள் தோன்றிய வளர்ச்சி பாதை சில பாய்ண்டுகளாக... 

1 400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒருசெல், பலசெல் உயிர்னங்கள் தோன்றின.

2.350 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரிய ஒளியிலிருந்து உணவு தயாரிக்கும்  பாசிகள் போன்ற தாவரங்கள்.

3.260 கோடி ஆண்டுகளுக்கு முன் சவ்வுகள் கொண்ட சில உயிரினங்கள் நீரிலும், நிலத்திலும் தோன்றின.

4. 230 கோடி ஆண்டுகளுக்கு முன் காற்றில் ஆக்ஸிஸன் என்னும் உயிர் காற்று நிறைய தொடங்கியது.

5. 100 கோடி ஆண்டுகளுக்கு முன் காளான்கள் தோன்றின.

6. 70 கோடி ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய மரங்கள்  உருவாக தொடங்கின.

7. 53 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலில் முள்ளெழும்புகளுடன் கூடிய மீன்கள் போன்ற உயிரினங்கள் உருவாயின.

8. 45 கோடி  ஆண்டுகளுக்கு முன்  ஒடுகளை கொண்டு உயிரனங்கள் உருவாயி நிரிலிருந்து நிலத்திற்கு இடம் பெயர்ந்தன.

9. 38 கோடி ஆண்டுகளுக்கு முன் மீனிலிருந்து நான்கு கால்களை கொண்டு உருவாயின. இவை நீரிலிருந்து தலையை வெளியே நீட்டி சுவாசிக்க தொடங்கின.இதே நேரத்தில் முதுகெலும்புள்ள தரையில் வாழும் உயிர்கள் தோன்றின.

10. 36 கோடி ஆண்டுகளுக்கு  முன் தாவரங்கள் விதைகளை உருவாக்க தொடங்கின.
   
            

11. 31 கோடி ஆண்டுகளில் பறவைகள்,பாலூட்டிகள் ,ஊர்வன தோன்றின.

12. 23 கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசர் போன்ற மபெரும் உயிரனங்கள் தோன்றின. அவை பூமியில் வால்நட்சத்திர தாக்குதல்களால் அழிந்தன.

13. 15 கோடி ஆண்டுகளுக்கு  முன் பறப்பனவற்றிக்கும், ஊர்வனவற்றிக்கும் இடைப்பட்ட ஒரு அதிசய பறவை தோன்றியது.

14. 7 கோடி ஆண்டுகளுக்கு முன் பாலூட்டி இனங்கள் பெரியதாக வளரத்தொடங்கின.

15. 3 கோடி  ஆண்டுகளில் டால்பின் போன்ற பாலூட்டி இனங்கள் தரையிலிருந்து மீண்டும் கடலுக்கு திரும்பின.

16. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான்.

17. 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நெருப்பை  உருவாக்கவும், அதை கட்டுபடுத்தும் ஆற்றலையும் மனிதன் பெற்றான்.

18. 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உடல் உறுப்புகளில் புதிய மாற்றங்களோடு இன்றை நவீன மனிதர்கள் அதாங்க நம்மதான் உருவாகினோம்.

 அப்பா எவ்வளவு பெரிய வரலாறு ..ஒரு மனிதன் உருவாக எத்தனை மாற்றங்கள், மேற்கண்ட வரலாற்றில் எதாவது ஒரு இடத்தில் தவறு நடந்திருந்தால் இன்றைக்கு நாம் இல்லை...  ஆனால் நாம் சுற்றுபுறத்தை கெடுத்து,சாதி,மதத்தின் பெயரால் நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம்.

- செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Unknown said…
Arumai....kanolikku nandri
மிக்க நன்றி நண்பரே...
Ram said…
Thank you for you useful information