பேஸ்புக் கில் கருத்துச்சொன்னால் போதாது... இயக்குநர் பிரபு சாலமன்


சார் உங்க பேஸ்புக் ஐடி கொடுங்க.... இல்ல எனக்கு டிவிட்டர் கணக்கு இருக்கு... பிளாக்ல எழுதுறேன்... இது போன்ற பேச்சுகள் தற்போது சர்வ சாதரணமாக புழங்குகின்றன. சமூக வலைத்தளங்கள் மிக பயனுள்ள ஒன்று தான். உதாரணமாக கடந்த ஆண்டில் அரபு நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களுக்கு இதுவும் ஒரு காரணம்.  அங்கு  பேஸ்புக் மூலமாக தகவல்களை பரிமாரிவிட்டு தெருவில் இறங்கி  போராடினார்கள். இந்தியாவில்  அன்னாஹசரே இயக்கம் ஒரளவு இதை பயன்படுத்தியது. ஆனால் பெரும்பாலான இளைஞர்கள் அரசியல்,சமூக தவறுகளை போஸ்புக்,வலைபூக்களில் பதிவு செய்வதோடு சரி தங்களின் கடமை முடிந்தாக நினைக்கிறார்கள். இதை பற்றி கடந்த வாரத்தில் நாகர்கோவிலில் நடைபெற்ற(dyfi )  இந்தியஜனநாயக வாலிபர் சங்கம் மாநில மாநாட்டில் நீர்பறவை இயக்குனர் சீனு ராமசாமியும், கும்கி பிரபு சாலமன்னும் பேசியதிலிருந்து...

இயக்குநர் சீனுராமசாமி....
       
நான் திருப்பரங்குன்றம் தமுஎகச வின் (தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்) விதை. கலை, இலக்கியம் பற்றி கற்றுதந்தவர் சு.வெங்கடேன். ( காவல் கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் சு.வெங்கடேசன் பற்றி). இந்த மேடையில் நிற்பதன் மூலம் தேசிய விருதை விட பெரிய அங்கிகாரமாக கருதுகிறேன். தேசிய விருது கொடுப்பவர்கள் எல்லாம் சமூக அக்கறை உள்ளவர்களோ, அறிவாளிகளோ அல்ல.தற்போது தயாரிப்பாளர்கள் எல்லாம் காமெடி பேசும் படங்களை மட்டுமே கேட்கிறார்கள்.சமூக பிரச்சனைகளை பற்றி பேசக்கூடாது என்ற மனநிலை வளர்ந்து வருகிறது.ஆரோக்கியமற்ற பொழுதுபோக்கு,நேர்மையை கிண்டல் செய்யும் நிலை வளர்கிறது. எதிர்வினை புரியும் உங்களோடு (dyfi )  நான் நிற்கிறேன். எனக்கு அரசியல் சினிமா தெரியும்,சினிமா அரசியல் தெரியாது. எங்களுக்கு பின்னால் இருந்து உந்துசக்தியாக இருக்கிறீர்கள் அதுவே எங்களுக்கு நம்பிக்கை தருகிறது.



இயக்குநர் பிரபு சாலமன்.....
             
 திருச்சி கல்லூரியில் படிக்கும் போது எனது சீனியர்கள் இச் சங்கத்தில் (dyfi )  பணியாற்றுவதை பார்த்திருக்கிறேன்.அவர்கள் மீது மரியாதை ஏற்பட்டது, காரணம் அவர்கள் எனது கொள்கைகளை செயல்படுத்துவதுதான்.பேஸ்புக்கில் தங்கள் கருத்துகளை கூறுபவர்களோடு எனக்கு உடன்பாடில்லை. வீதிக்கு வந்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.அதை நான் வரவேற்பேன். சாட்டை போன்ற சினிமாக்களுக்கு  தட்டி கொடுத்தல் தேவைப்படுகிறது. எனது வெறும் கையில் ஒன்றை லட்சம் ரூபாய் வைத்துக் கொண்டு துவங்கிய படம் சாட்டை. அந்த படத்தை தற்போது தெலுங்கு மொழியில் தயாரிக்கிறோம். நான் இயக்குகிற , தயாரிக்கிற படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்கலாம் என்ற நம்பிக்கையை தருகிறோம்.எனது படத்தில் வன்மம்,கவர்ச்சி காட்சிகள் இருக்காது. அடுத்த மாநாட்டிலும் சந்திப்போம்.

என்ன நண்பர்களே பேஸ்புக்கில், வலைபூக்களில் கருத்து தெரிவித்தால் மட்டும் போதுமா..வாங்க தெருவுக்கு...
                        
தொகுப்பு 
-    செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

எங்கேன்னு சொல்லுங்க வந்துடலாம்... ஹிஹி...

வாழ்த்துக்கள்...
Seeni said…
varalaam ....
  • யாரோ ஒருவன்...
    26.01.2020 - 0 Comments
    ஒட்டிப்போன தன் வயிறு மடியும் அளவுக்கு குனிந்து ,நிமிர்ந்து மிக உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்தான்... அவன்…
  • 2012ல் அதிக பாடல்களை எழுதிய நா.முத்துக்குமார்
    07.01.2013 - 1 Comments
    தமிழ்த்திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி கவனத்தை ஈர்த்தவர்கள் ஏராளமானோர். தியாகராஜ பாகவதர் தொடங்கி…
  • ஓரு கேன் சுத்தமான காற்று ரூ.40க்கு விற்பனை....
    04.05.2013 - 2 Comments
    தண்ணீர் விலைக்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்போதுய தலைமுறைக்கு தண்ணீர் விலைகொடுத்து வாங்குவதென்பது…
  • வாட்ஸ்ஆப் - டெலிகிராம் எது பெஸ்ட்?
    20.10.2015 - 0 Comments
    வாட்ஸ் ஆப் செயலிக்கு போ ட் டியாக வளர் ந்துவரு வது டெலிகிராம் செயலி. வாட்ஸ்ஆப் செயலி வெளியிட ப்பட்டது…
  • ரஜினி என்னும் வியாபாரி...
    23.10.2014 - 0 Comments
    கடந்த வாரத்தில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா (முன்னாள் முதல்வர் என்று சொல் லக்கூடா தாம்)ஜாமீன் விடுதலை…