ஓரு கேன் சுத்தமான காற்று ரூ.40க்கு விற்பனை....


தண்ணீர் விலைக்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்போதுய தலைமுறைக்கு தண்ணீர் விலைகொடுத்து வாங்குவதென்பது புதிய செய்தியல்ல. ஆனால் நம் தாத்தா, பாட்டி காலத்தில் வீட்டுக்கு வெளியே ஒரு திண்ணை கட்டியிருப்பார்கள். வாகன போக்குவரத்து அதிக மில்லாத காரணத்தால் கால்நடையாக நடப்பவர்கள் ஓய்வெடுத்து விட்டு செல்வதற்கு. அப்படி வருபவர்களுக்கு இலவசமாக நீர், மோர், கொடுத்து உபசரிப்பது தமிழ்பண்பாடு. வெளிநாட்டு குளிர்பானங்கள் இந்தியாவுக்குள் வந்த போது அதோடு சேர்த்து மினரல் வாட்டர் வந்து சேர்ந்தது. மினரல் வாட்டர் குடிக்காவிட்டால் நோய்கள்  வரும் என்றார்கள்.உண்மையில் மினரல் வாட்டர் குடித்த பின்னர்தான் நோய்கள் அதிகரித்திருக்கிறது. இப்போது காற்றும் விற்பனைக்கு வந்திருக்கிறது. ....

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. இங்கு வாகனங்களும், தொழிற்சாலைகளும் பெருகிவிட்டன. இதனால் தலைநகர் பெய்ஜிங்கில் சுற்றுச்சூழல் மாசுபட்டு விட்டது. தூசிகள் காற்றில் அதிகமாக கலந்துள்ளன. எனவே சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை.
ஆகவே,


அங்கு கேன்களில் சுத்தமான காற்று அடைத்து பிரபல தொழில் அதிபர் சென்குவாங்பியோ (44) விற்பனை செய்கிறார். ஒரு கேனின்விலை 40 ரூபாய். இதுவரை 80 லட்சம் கேன்கள் விற்று தீர்ந்துள்ளன.
சுத்தமான காற்று அடைக்கப்பட்ட கேன்களை அறிமுகப்படுத்த கடந்த வாரம் அவர் ஏராளமான கேன்களை இலவசமாக வினியோகம் செய்தார்.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னாள் மினரல் வாட்டர் கேன்கள் வரதொடங்கிய போது எனது பாட்டி சொன்னார் "உலகத்துக்கு அழிவு நெருங்கிருச்சுப்பா"...என்றார். காற்றும் விற்பனைக்கு வந்து விட்டதே...
 - செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Seeni said…
varthanaiyaana visayam...!
பாட்டி சொல்லைத் தட்டக்கூடாது.உண்மையிலேயே " நமக்கு அழிவு நெருங்கிருச்சு ” வேறு சொல்வதற்கு இல்லை.
  •  புத்தகயா குண்டுவெடிப்பும் - புத்தரின் போதி மரமும்....
    09.07.2013 - 2 Comments
    அமைதியை போதித்த புத்தரின் வழிபாட்டுதளத்தில் குண்டுவெடிக்க செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் தீவிரவாதிகள்.…
  • மோடியின் அமெரிக்க கனவுக்குவுக்கு அதிரடி ஆப்பு
    13.02.2014 - 4 Comments
    நரேந்திர மோடிக்கு விசா வழங்கும் தங்களது பழைய கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்கா திட்டவட்டமாக…
  • எகிப்து மன்னனுக்கு வேற்றுகிரவாசிகள்  கொடுத்த கத்தி
    14.04.2021 - 0 Comments
     ஏராளமான புதையல்களைக் கொண்டிருந்த ஓர் எகிப்திய அரசரின் கல்லறை. அந்த அரசரின் பெயர், துட்டன்காமன்.…
  •  ஜனவரி 5 தமிழ் புத்தாண்டா  ????.......
    06.01.2014 - 3 Comments
    இது என்னடா புதுக்குழப்பம்?....ஏற்கனவே இரண்டு தேதிகளில் அல்லாடிக்கொண்டிருக்கும் தமிழ்புத்தாண்டுக்கு…
  • ''கும்கி'' புதிய ஸ்டில்கள்
    25.08.2012 - 3 Comments
    ''கும்கி'' ரிலிசுக்காக காத்திருக்கிறது, அதன் இசை வெளியீட்டு விழாவே கமல்,ரஜினி கலந்து கொண்ட மிக பிரமாண்ட…