ஒரு தோல்வி படத்திற்கான முன்னோட்டம்...


நல்ல படம்.. ஆனால் ஒரு வாரம் கூட ஒடாது. தொப்புள் காட்டும் பெண்கள் இந்த படத்தில் இருக்கமாட்டார்கள்.பைட்,பாட்டு சென்டிமென்ட எதுவும் இருக்காது. உலகநாயகனோ,சூப்பர் ஸ்டாரோ,பவர் ஸ்டாரோ நடித்தபடம் அல்ல.ஆனால் தமிழர்களை தலைநிமிரச்செய்த தமிழனை பற்றி படம். உலகம் தெரிந்த பிரபலத்தை பற்றிய படம். 100 கோடிக்கு மேல் வசூல் செய்ய வேண்டிய படம்.ஆனால் நாம் ரூ.100 கொடுத்துக்கூட இந்த படத்தை பார்க்க மாட்டோம். கணித மேதை ''சீனிவாச ராமானுஜத்தின்' வாழ்க்கை படமாக வெளிவர உள்ளது. ஏற்கனவே பாரதி,பெரியார் போன்றவர்களின் வாழ்க்கை படமாக்க பட்ட போது ஏற்பட்ட நிலைமை தான் இந்த படத்திற்கும். தமிழ் சமூகத்திற்கும், இந்திய சுதந்திரத்திற்கும் பாடுபட்டவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தான். நடிகை அஞ்சலியை பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிற பதிவர்கள் இந்த படத்தை பற்றி எழுதுவார்களா?..

பாரதி,பெரியார் இயக்குனரின் படம்..

கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையை மையமாக வைத்து ராமானுஜன் என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. இப்படத்தை ஞானராஜசேகரன் எழுதி இயக்குகிறார். இவர் மோகமுள், முகம், பாரதி, பெரியார் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. இதில் ராமானுஜன் கேரக்டரில் பழைய நடிகை சாவித்திரியின் பேரனும், விஜய சாமுண்டீஸ்வரியின் மகனுமான அபிநய் நடிக்கிறார். நாயகியாக பாமா நடிக்கிறார்.
சுஹாசினி, நிழல்கள் ரவி, அப்பாஸ், சரத்பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, ராதாரவி, தலைவாசல் விஜய், மதன்பாப், டி.பி.கஜேந்திரன், ஏ.ஆர்.எஸ்.பெல்லிகுமார், டி.வி.வரதராஜன், மோகன்சர்மா ஆகியோரும் நடிக்கின்றனர்.இவர்களுடன் லண்டனை சேர்ந்த கெவின் மெக்கோவன், கிரஹாம் சியாடில், மைக்கேல் லியபர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.படப்பிடிப்பு ராமானுஜன் வாழ்ந்த கும்பகோணம் மற்றும் நாமக்கல், வேலூரிலும், லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் நடக்கிறது.

சீனிவாச ராமனுஜம் பற்றி சுருக்கமாக...




சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த  பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தை கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாய் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 வயது முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
இராமானுஜனின் தந்தையும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராக வேலை பார்த்தவர்கள்.. தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். எனினும் இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (n theory),), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

என்ன நண்பர்களே இந்தபடம் நிச்சயம் தோல்வி படம் தானே?.

-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Anonymous said…
Movies like this shouldn't be a failure one.If so, its nothing but our society's failure(again).Thanks for the post.
RameshS
Anonymous said…
"இவர் என்னத்தைக் கண்டுபிடித்து கிழித்தார். வெற்றுக் கணிதக் கோட்பாடுகள்.
நம் பல்கலைக்கழக கணிதங்களில் 97 விழுக்காடு எந்தப் பயனும் இல்லாதவை. மூளைக்கு விளையாட்டு கொடுக்கும் வெற்று தேற்றங்களே.
மீதி 3 விழுக்காடு மட்டுமே நடைமுறை இயற்பியல் வேதியியல் மின்னணுவியல், கணிதவியலில் பயன்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம் ராமானுஜம் கணினி, தொலைக்காட்சி, திரைப்படம், தொலைபேசி, மின்சார விளக்கு போன்ற பயனுள்ள விஷயங்களைக் கண்டுபிடித்திருந்தால் நாம் பாராட்டலாம். வெற்றுக் கணித தேற்றங்களைக் கண்டுபிடித்தவருக்கு ஏன் இந்த டாம்பீகப் பெருமை?
தோல்வி படம் என்றே முடிவாகி விட்டதா...?
முதல் தியேட்டர் கிடைக்கட்டும், கிடைத்தால்
படம் வந்தது போனது தெரியாமல் இருக்கும்.
  • செவ்வாயில் ஓடிய நதி வீடியோ +மங்கல்யாண்
    23.09.2014 - 0 Comments
    நொடிக்கு 22.1 கிமீ வேகத்தில்  செவ்வாயை நோக்கி பயணத்து கொண்டிருந்த மங்கள்யானை தற்போது வேகத்தை…
  • காவியத் தலைவனுக்கு இன்று பிறந்த தினம்
    17.01.2012 - 1 Comments
    சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். மறைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகும்…
  • பிப்.18 செவ்வாய் கிரகத்தில் பறக்க போகும் முதல் ஹாலிகாப்டரும் -2050  அமையவுள்ள smartcity  யும்
    17.02.2021 - 0 Comments
                 செவ்வாய் சூரியக் குடும்பத்தில் நான்காவது கோளாகும். இதன்…
  • 10 மாதங்களில் மீண்டும் எழுந்த ஜப்பான் படங்கள்
    13.02.2012 - 2 Comments
    சுறுசுறுப்புக்கும், உழைப்புக்கும் பெயர்பெற்றவர்கள் ஜப்பானியர்கள்.ஒரு சிறிய தீவு நாடு உலகத்தின் பொருளாதார…
  • விஸ்வரூபம் படத்தில் கமல் கெட்டப் என்ன?
    20.01.2012 - 0 Comments
    தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போதைய பரபரப்பே விஸ்வரூபம் படத்தில் கமலின் கெட்டப் என்ன? என்பதுதான்.விஸ்வரூபம்…