அறிவு இருக்கா ... என தீட்டுவாங்கியவரா நீங்கள்?


கொஞ்சமாவது ,அறிவிருக்கா, மூளையிருக்கா என நம்மில் அநோகம் பேர் தீட்டு வாங்கியிருப்போம். அப்படி தீட்டு வாங்கியவர்களுக்கான பதிவு.
உணவில் இருக்கும் கருவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விட்டு சாப்பிடுவதையே பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் தற்போது கருவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது ஆய்வுகள் மூலம் வெளியாகி உள்ளது. உணவில் வாசனையை கூட்டத்தான் கருவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.
உண்மையில் கருவேப்பிலையை உண்பதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க முடியும் என்று பல்வறு ஆராய்ச்சிகள் மூலம் தெரியவருகிறது. கருவேப்பிலையின் தாவர பெயர் முரையா கோய்னிஜா.
இது ருப்டேசி என்ற தாவர இனத்தை சேர்ந்தது. கருவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள அமிலங்கள் கருவேப்பிலைக்கு இனிய மணத்தை தருவதுடன் பல்வேறு மருத்துவ குணங்களையும் தருகிறது. இதனை ஆராய்ச்சி செய்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உணவில் வாசனைக்கு சேர்க்கப்படும் கருவேப்பிலை புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கொல்லும் தன்மையுடையது என்பதை கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் நியூட்ரிசன் சயின்டிஸ்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் லனோகோபியாக் கருவேப்பிலை மருத்துவ குணம் நிறைந்த ஆண்டியாக்சிடெண்ட் ஆக திகழ்வதாகவும், புற்று நோய் மற்றும் இதய நோய்களை குறைத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும் அரிய மருந்து என்று கூறியுள்ளார். இதில் இருந்து எண்ணெய் எடுத்து அதை நுரையீரல் , இருதயம், கண் நோய்களை தீர்க்க தலைக்கு தேய்க்கும் எண்ணெயாக பயன்படுத்தலாம் என்று இங்கிலாந்து வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


100 கிராம் கருவேப்பிலையை அரைத்து அதன் சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெயில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தலைக்கு தேய்த்துவந்தால் உடல் உஷ்ணம் குறையும்.பரம்பரை நரைமுடி வராது. கண் பார்வை மங்காது. அதேபோல் இதனை அரைத்து துவையலாக உணவுடன் சேர்த்துக்கொண்டால் நுரையீரல் நோய் வராததுடன் ரத்த ஓட்டமும் சீராகும். திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் கறிவேப்பிலையுடன் கடுகையும் சேர்த்து பயன்படுத்தினால் என்ன நன்மை விளையும் என்று ஆராய்ச்சி செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகையும் சேர்த்து உண்டால் நமது உடலில் உள்ள திசுக்கள் பாதுகாக்கப்படும் என்பது தெரியவந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் வருவதை கரிவேப்பிலை தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி,என்.ஏ. பாதிக்கப்பட்டு செலக்ளில் உள்ள புரோட்டின் அழிகிறது. இதனால்தான் புற்றுநோய் மற்றும் வாத நோய்கள்  உருவாகின்றன. கறிவேப்பிலையும் கடுகும் தாளித்து உணவில் சேர்க்கப்படும் போது பிரிரேடிக்கல்ஸ் தடுக்கப்படுகிறது. புற்று நோய் ஆரம்ப கட்டத்திலேயே முறியடிக்கப்படுகிறது. இது தவிர நீரழிவு நோயாளிகள் காலையில் 10, மாலையில் 10, கருவேப்பிலையை பறித்தவுடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை குடித்து வந்தால் இன்சுலின் மருந்து அளவை பாதியாக குறைத்து விடலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். தினசரி வெறும் வயிற்றில் கருவேப்பிலையை தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால்

நீரழிவு  நோயால் உடல் பருமனாவது தடுக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் கட்டுப்படும். ரத்தத்தில் உள்ள கொழுப்பினை குறைப்பதற்கும், அறிவை பெருக்கிடவும், ஞாபக சக்தியை உயர்த்திடவும் கருவேப்பிலை உதவி செய்கிறது. பச்சையாக கருவேப்பிலையா மென்று தின்றால் குரல் இனிமையாகும். நீண்ட நாள் சளிக்கட்டு குறையும் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் புகையிலை போடும் பழக்கமுள்ளவர்கள் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள், தினமும் கருவேப்பிலையை உணவோடு சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என மருத்துவ ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. எனவே இனிமேலாவது கருவேப்பிலையை துச்சமென நினைத்து தூக்கியெறியாமல் உணவோடு உட்கொண்டு புற்றுநோய் உட்பட்ட பல்வேறு நோய்களை வராமல் பாதுகாத்துக் கொண்டு அறிவையும் வளர்த்துகலாம். .

செல்வராஜ்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
முடி கருமைக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமல்ல... பலவற்றிக்கும் உகந்தது என்பதை சொல்லும் விரிவான பகிர்வு... நன்றி...

தினமும் காலை தண்ணீருடன் இரண்டு கரண்டி கறிவேப்பிலை பொடி... ஆரம்பத்தில் சிறிது சிரமம் தான்... பிறகு பழக்கமாகி விடும்...