ஆண்களுக்கான பெண்களின் படம்


A  சான்றிதழ் பெற்ற படம் என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம்.வாழ்க்கை பயணத்தில் அம்மாவாய்,சகோதரியாய், மனைவியாய், மகளாய் பங்கேற்கும் பெண்களின் புரிந்து கொள்ளப்படத பிரச்சனையான "மாதவிடாய் "பற்றிய குறும்படம்.

                சிறுவயதில் எனது சகோதரியின் மாதவிடாய் நேரத்தில், தனியான ஒரு இடத்தில் ஒதுக்கப்படும் என் சகோதரிக்கு தனியாக சாப்பிடதட்டுகள், டம்ளர்கள், படுக்கை என கொடுத்து விடுவார்கள். சாப்பாடு போடும் போது கூட பட்டும் பாடாமல்  உணவு பரிமாறப்படும். என் சகோதரிகளோடு பொழுதுபோக தாயம், பல்லாங்குழி விளையாடும் போது லோசாக கைபட்டுவிட்டால் உடனே நான் குளித்தாக வேண்டும். அதுமட்டுமல்ல எதோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டது போல திட்டு விழுகும். என் சகோதரியை கொலைகுற்றவாளிபோல பார்க்க  வைத்துவிடுவார்கள்.இந்த நிலை சற்று மாறியிருந்தாலும் கூட சில சாதிய சமூகங்கள் தொடர்கின்றன.கிராமங்கள் மாறவில்லை.

                   
மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் மாதாந்திர நிகழ்வு. இன்னும் தெளிவாக சொன்னால் மனித பரிணாமத்தின் மிக முக்கிய முடிச்சு. இதை பற்றி ஆண்கள் பெண்களின் பொதுபுத்தியில் சரியான புரிதல்கள் இல்லை.மாதவிடாய் நேரத்தில்  பெண்ணுக்கு  தேவைப்படும் சரியான வசதிகள் கிடைக்கிறதா. மாதவிடாயின் அறிவியல் பார்வை என்ன?மாதவிடாய் ரத்தம் அசத்தமானதா? போன்ற வற்றை பற்றி சுமார் 40 நிமிடம் ஒடக்கூடிய குறும்படம்  தான் மாதவிடாய்.
     
                        பள்ளிச்சிறுமியிலிருந்து,ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தனியார்நிறுவன ஊழியர்கள், உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள்.ஊனமுற்ற பெண்கள் என  பலதரப்பட்ட பெண்களின் நேரடி அனுபவங்களோடு, அவர்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாக பெண்ணிய சிந்தனையாளர் வ.கீதா,

 "ஒரு பெண் பெரியவளாவதை ஊருக்கு அறிவித்துக கொண்டாடுகிற சமூகம் பெண்ணை அந்த நாட்களில் ஒதுக்குவது முரண்பாடாக இருப்தாக சொல்கிறார்".

மாதவிடாய் என்பது உயிரியல் ரீதியாக அனுகப்பட வேண்டியது என்பதை நமது பொது புத்தியில் ஏற்படுத்த சமூகம் தவறிவிட்டது என்கிறார் போராசிரியர் சுபா.

 மார்க்ஸிட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, அசந்தர்பமான சூழ்நிலையில் மாதவிடாய் நிகழும்பொழுது நமது மனதில் ஒரு கொலைக்குற்றம் செய்ததை  போல குற்ற உணர்வு எற்படுவதை தவிர்க்க முடியவில்லை என்கிறார்,

 இதோ போல கட்டுமான தொழிலில் உள்ளவர்கள். உனமுற்ற பெண்கள் என் பலரின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.மாதவிடாய் ரத்தம் அசுத்தமானதல்ல அதில் பல நோய் எதிர்ப்பு  குணங்கள் உள்ளன என்பதையும் குறும்படம் சுட்டிக்காட்டுகிறது.சுருக்கமாக சொன்னால் தாய்பாலப்போல மாதவிடாயும் உடலில் ஊறுகிற ரத்தம் தான் என்பதை புரிந்து கொள்ளலாம்.

                     இந்த குறும்படத்தை கணவனும், மனைவியுமான ... இளங்கோவனும், இயக்குனர் கீதா இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தை பார்க்க விரும்பினால்... geetaiis@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

அவசியம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது... முகவரிக்கு நன்றி...
  • தமிழ்சினிமா எப்படி இருக்கிறது? நடிகர் நாசருடன் நேர்காணல்:
    15.10.2017 - 0 Comments
    நடிகர் நாசரை பற்றி சொல்லித்தெரியவேண்டிதில்லை...பல்துறை வித்தகர்.நடிகர் சங்க பொறுப்பை ஏற்று அதை திறம்பட…
  • ரஜினியிடம் சில கேள்விகள்
    12.12.2011 - 8 Comments
    ஒரு காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்த ரசிகனின் வேத னை யும், ஆதங்கத்தின் வெளிப்பாடு,…
  • ஒலிம்பிக் நகரில் களைகட்டும் திருட்டு தொழில் + படங்கள்
    26.07.2012 - 1 Comments
    நாளை உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் லண்டன் ஒலிம்பிக் திருவிழா துவங்க இருக்கிறது. இதற்காக…
  • நான் என் ஆன்மாவை சாத்தான்களிடம் விற்றுவிட்டேன் - இயக்குநர் வெற்றிமாறன்
    16.03.2012 - 0 Comments
    சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் முதுகலை ஊடகக் கலைகள் துறையின் சார்பில் “21ம் நூற்றாண்டில் தமிழ்த்…
  •   தனுஷ் - சோனம் கபூரிடம் எத்தனை அறை வாங்குகிறார்?
    01.07.2013 - 1 Comments
    அம்பிகாபதி படம் பார்க்க செல்பவர்களுக்கு தனுஷ்  சோனம் கபூரிடம் எத்தனை அறை வாங்குகிறார் என் போட்டியே…