2வீலர்- 4வீலர் வைத்திருப்பவரா நீங்கள்.....


உங்களிடம் 2வீலர், 4வீலர் இல்லையா? மற்றநாடுகளில் எப்படியோ இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மரியாதை கிடைக்காது. தெருமுனை பெட்டிக்கடையில் ''கருவேப்பிலை வாங்க வேண்டுமானால்'' கூட 2வீலர் வேண்டும். வண்டியை சர்வீஸ் கொடுத்துவிட்டு நடந்து போனால் ''வண்டி என்னாச்சி'' என்ற கேள்விகளுக்கு நிறைய பேருக்கு பதில் சொல்லவேண்டிவரும். கல்யாணம், காதுகுத்துக்கு போனால் 2வீலரில் போகவேண்டும்... காரில் போனால் உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனி... நம்ம ஊர்களை பொருத்தவரை நண்பர்கள், உறவுகளுக்கு முன்னால் பகுமானம் செய்தாகவேண்டியதிருக்கிறது.
 ஆனால் இந்த பகுமானத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக வாரம் ஒரு முறை பெட்ரோல். டீசல் உயர்ந்து வருகிறது. இன்றைய இந்திய  அரசின் பல சாதனைகளில் இதும் ஒன்று...என்ன செய்ய நாம் தான் சிக்கனமாக இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் சிக்கனப்படுத்த எனக்கு தெரிந்த சில டிப்ஸ்கள்.....

1.கார் ஒட்டினாலும் டூவீலர் ஓட்டினாலும் டயரில் உள்ள காற்றழுத்தம் எப்படி உள்ளது என்பதை அடிக்கடி செக் பண்ண வேண்டும். டயரின் காற்றழுத்தத்தை  மிகச்சரியான அளவில் பராமரித்தாலே பெருமளவில்  எரிபொருளை  சேமித்திடலாம்.
2. டயர்களில் காற்றின்  அழுத்தம் குறிப்பிட்ட  அளவிலிருந்து  25 ெ குறைவாக  இருந்தால்  5 - 10  ெஎரிபொருள்  கூடுதலாக  செலவாகும். முறையாக  பராமரித்தால் இதனை தவிர்க்கலாம்.
3. கிளட்சை அழுத்திக் கொண்டே வண்டியை ஒட்டினால்  அது வாகனத்தின் ஆயுளை குறைப்பதுடன்  எரிபொருளை  அதிகமாக  வேஸ்ட் ஆக்கும். இதனால் கிளட்சை பிடித்தபடி அல்லது மிதித்தபடி  வாகனங்களை  ஓட்டக்கூடாது
4. வேகத்திற்கு  தகுந்த கியரில் வாகனத்தை  செலுத்தாவிட்டால்
எரிபொருள் 20 ெ அதிகம் செலவாகும் எனவே சரியான வேகத்தில் சரியான கியரில் வாகனங்களை செலுத்துவது அவசியம்.
5. வாகனங்களில் ாபை மெட்டாலிக் ஸ்பார்க் பிளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் 15 ெஎரிபொருளை சேமிக்கலாம் மேலும் அது வெளியிடும் புகையின் அளவு குறைவாக  இருப்பதால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
6.தேவையற்ற  சுமைகள் எரிபொருள்  உபயோகத்தை அதிகப்படுத்தும். நகரத்தில் வாகனத்தை ஓட்டும் போது 50 கிலோ வரையிலான  எடை குறைப்போ 2  ெஎரிபொருளை மிச்சப்படுத்தும்.
7. ஏ.சி, குளுமையுடன் பயணத்தை இனிதாக மாற்றிடும் ஆனால் ஏ.சி. உபயோகிக்கும்  வாகனங்கள் சாதாரண வாகனங்களை விட 20 ெஅளவுக்கு எரிபொருள் செலவை அதிகமாக்கிடும். தேவையறிந்து  ஏ.சி. உபயோகித்தால் எரிபொருளை சேமித்திடலாம்.
8. தகுந்த  இடைவெளியில்  அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ்  சென்டர்களில்  வண்டியை சர்வீஸ் செய்திடல் அவசியம்.  அது எரிபொருளை  தானாக  மிச்சப்படுத்திடும்.
9.எரிபொருளுடன் பயன்படுத்தப்படும் ஆயில்  தரமானதாக, இருப்பது  வண்டியை  நல்ல நிலையில் வைத்திருப்பதுடன் எரிபொருளையும் மிச்சப்படுத்தும்.
10. வாகனத்தை  அதிக வேகத்தில் ஓட்டினால் எரிபொருள்  அதிகமாக  வீணாகும். மித வேகம்  மிக நன்று.  அடிக்கடி  பிரேக் போட்டு  வண்டியை நிறுத்துவது எரிபொருள்  செலவை  அதிகப்படுத்தும்.
11.சிக்னலில்  அல்லது வேறு சில இடங்களில்  2 நிமிடத்திற்கு  மேல் வண்டி நிற்க வேண்டியிருந்தால் இன்ஜினை ஆப் செய்து விடுவது
சிறந்தது.
12. வாகனத்தின்   எரிபொருள் டேங்க் துருபிடிக்காமல்  சுத்தமாக  பராமரிக்கப்பட்டால் எரிபொருள் எளிதாக  மிச்சமாகும்.
13. எந்த எரிபொருளை  பயன்படுத்தினாலும் வண்டியை அதிக வேகத்தில் ஓட்டுவது இனிமையான பயணத்திற்கு வழிவகுக்காது. எரிபொருளையும் வேஸ்ட் ஆக்கி விடும்.
14. வாகனத்தின் ஏர்பில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசுக்கள் நிறைந்த ஏர்பில்டரால் எரிபொருள் அதிகம் வீணாகும்.
15. சொந்த வாகனத்தில் பயணம் செய்யும் முன் யோசிப்பது அவசியம். சொந்த வாகனத்தில் போகும் அளவிக்கு அந்த பயணம் அவசியமானதல்ல என்று கருதினால் எரிபொருள் சிக்கனத்தை மனதில் வைத்து பஸ் அல்லது ரயில் பயணங்களை தேர்வு செய்வது நல்லது.
16. வாகனத்தில் உள்ள போல்ட், நட்டுகளை சரியான அளவில் இறுகச் செய்து அதிர்வுகளை குறைத்தால் 5  ெஎரிபொருளை சேமித்திடலாம்.

இதெல்லாம் நம்மால முடியாது என்பவர்களுக்கு மிக எளிய வழி....



தொகுப்பு
செல்வராஜ்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

பயனுள்ள தகவல்கள்... நன்றி...

எளிய வழி மிகவும் பிடித்துள்ளது... ஹிஹி...

தொடர வாழ்த்துக்கள்...
Unknown said…
நன்று , தங்களுடைய வலைப்பதிவுகள் மிகவும் சுவாரியசியமாக உள்ளன...
எமது வலைப்பகுதி
தமிழ் வாழ் வலைப்பகுதி
திருக்குறள்
  •  செவ்வாய்கிரகக் கல் விலைக்கு வேண்டுமா?
    07.10.2012 - 1 Comments
    உண்மைதான் நண்பர்களே... செவ்வாய்கிரதிலிருந்த பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் விழுந்த கல் ஒன்று…
  • வடிவேலு-- 2011 தேர்தலுக்கு முன்னும் - பின்னும் நகைச்சுவை வீடியோ
    14.04.2012 - 1 Comments
    வடிவேலு சும்மா பெயரே கேட்டாலே காமடியா இருக்கல்லுல, 2011 தேர்தலுக்கு முன் எப்படி இருந்த வடிவேலு இன்னைக்கு?…
  • ‘மாற்றான்’படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி சூர்யா
    10.10.2012 - 3 Comments
    சூர்யாவின் ’மாற்றான்’ படம் நாளை மறுதினம் வருகிற அக்டோபர் 12-ந்தேதி ரிலீசாகிறது. இதில் ஒட்டிப் பிறந்த…
  • அரசு வேலை வேண்டுமா?
    11.03.2015 - 1 Comments
    நீங்கள் அரசு வேலையில் சேர விரும்புகிறீர்களா? மிக மிக எளிதாக அரசு வேலை வாங்கலாம். கால்காசா (காலாணா)…
  • சைவம்... புதிய சுவை
    29.06.2014 - 1 Comments
    சூப்பர்ஸ்டார் இல்லை,தளபதிகள் இல்லை, தலயும் இல்லை,சூப்பர் ஆக்டரும் இல்லை,பஞ்ச் வசனம் இல்லை,அடிதடிகள்…