இந்தியாவின் முட்டாள் முதலமைச்சர்...


இந்திய முதலவர்களில் முட்டாள் ஒருவரை கண்டுபிடித்திருக்கிறேன்... இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதலைமைச்சராக,நாடளுமன்ற உறுப்பினராக(எம்.பி), மாநில அமைச்சராக, வட்டச்செயலாளர் வண்டுமுருகன் ஆக சில தகுதிகள் இருக்கின்றன.  நீங்கள் முதலமைச்சராக வேண்டுமானால்  சில ஆயிரம் கோடிகளில் ஊழல் வழக்குகள் இருக்க வேண்டும்.எம்.பி.ஆக வேண்டுமானால்
சில லட்சம் கோடிகளில் ஊழல் வழக்குகள், சில கிரிமினல் வழக்குகள் இருக்குவேண்டும். மாநில அமைச்சராக 10க்கும் மேற்பட்ட கிரமினல் வழக்குகள் இருக்க வேண்டும். வட்டச்செயலாளராக ரவுடியாக அல்லது ரவுடிகளின் தொடர்பு இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகள் இல்லையா?... மிகப்பெரிய அளவில் பணக்காரணாக ... உழைக்காமல் சம்பாதிக்கும் திறமையிருக்க வேண்டும்.
 இப்ப எம்.பியா இருக்குற 543 பேர்ல 150 பேர் மீது பல்வேறு  கிரமினல் வழக்குகள்  உள்ளன, கடந்த தேர்தலில் இந்த எண்ணிக்கை 128  அதாவது 17.2 சதம்  உயர்ந்துள்ளது. இவர்களில் தீவிர குற்றவாளிகள் 73 பேர், குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கபட்ட ஒருவர் மீது 16 கிரிமினல் வழக்குகள்  உள்ளனவாம்?.543 பேரில் 306 பேர் கோடீஸ்வரர்களும் அடக்கம், இவங்க எப்படி சாதாரண மக்களுக்கு நல்லது பண்ணுவாங்க?. உண்மை நண்பர்களே...   மேற்கண்ட தகவல்கள் பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த தகுதிகளே இல்லாமல் முதலமைச்சராக,எம்.பி.ஆக இருந்தவர்களும் இருக்கிறார்கள்...
   
                                கேரள முன்னாள் முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதரிபார்ட, மேற்கு வங்களா முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, இவர்கள் வரிசையில் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும்  மிகச்சிறிய மாநிலமான திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார்... அவரை பற்றி சில தகவல்கள்..

"59 வயதான சர்க்காருக்கு முதல் வர் என்ற முறையில் மாத ஊதியமாக 9,200 ரூபாயும் அலவன்ஸாக 1,200 ரூபாயும் கிடைக்கிறது. அதை அப்ப டியே கட்சிக்குத் தந்துவிடு கிறார். கட்சி தரும் ஐயாயிரம் ரூபாயில் வாழ்க்கையை நடத் துகிறார். இவருக்கென்று சொந்தமாக வீடோ, நிலமோ கிடையாது. இவரது மனைவி பஞ்சலி பட்டாச்சார்ஜி மத் திய சமூக நலத்துறையில் பணியாற்றுகிறார். இவரது வருமானத்தில்தான் முதல மைச்சரின் குடும்பமே ஓடு கிறது. வேலைக்குச்செல்ல பஞ்சலி அரசு காரைக்கூட பயன் படுத்துவதில்லை. ரிக் ஷா வில்தான் போய் வரு கிறார். மாணிக் சர்க்கார் மட் டுமே அரசின் காரைப் பயன் படுத்துவாராம். குடும்பத்து டன் ஏதாவது ஒரு நிகழ்ச் சிக்குப் போவதாக இருந்தா லும் மனைவியை தனது காரில்                                                                                                     
ஏற்றாமல் ஆட்டோ வில் வரச்சொல்லி விடுவா ராம். ஒரு தையல் தொழிலாளி யின் மகனான இவர், தனது துணிகளைக்கூட தானே துவைத்துக்கொள்ளும் அள வுக்கு மிக எளிமையான மனி தர். இந்தத் தேர்தலில் அவ ரது தலைமையில் கட்சி அபார வெற்றிபெற்ற போதி லும் “இதற்கு நான் மட்டும் காரணமில்லை. கட்சியின் ஒட்டுமொத்த தொண்டர் களும்தான்” என்று எளி மையாகக் கூறியுள்ளார் "ஆக இவர் முட்டாள் தானே?.

மேற்கண்ட மூன்று பேருக்கும் ஒரு ஒற்றுமையிருக்கிறது அவர்கள் எல்லோருமே மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். நம்ம தமிழ்நாட்டு மக்கள் இந்த எப்ப இப்படி ............................ முதலைச்சரை தேர்தெடுக்கபாங்ளோ?

-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Robin said…
அதெல்லாம் சரிதான். ஆனால் திரிபுரா இன்னும் பின்தங்கிய மாநிலமாகவே இருக்கிறதே.
சிந்தனைக்கு புது கட்டுரை... வாழ்த்துக்கள்
Jayadev Das said…
வெறும் எளிமை மட்டும் போதாது, முதல்வர் என்ற முறையில் அவரது பாதுகாப்பும் அவசியம். இவர் சைக்கிள் ரிக்ஷாவில் போகிறார், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மாநிலம் ஒரு நல்ல மாநில முதல்வரை அல்லா இழந்து [கடவுள் அவ்வாறு நடக்காமல் காக்கட்டும்] தவிக்கும். மேலும் இவர் துணிகளை இவை துவைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மாநில மக்களுக்கு நல்லது செய்யும் திட்டங்கள் மக்களுக்கான இதர சேவைகளில் ஈடுபடலாம். ஒரு சீப் மினிஸ்டரின் நேரம் அவ்வளவு செப்பானது இல்லை. மைய அரசு, வெளிநாட்டு நிறுவனங்கள் , மக்கள் என அனைவரையும் சந்திக்க வேண்டும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும், மக்கள் முன்னேற்றத்தில் ஈடுபட வேண்டும், அதற்க்கு 24 மணி நேரமே போதாது, இவர் அதிலும் துனி துவைத்துக் கொண்டிருக்கிறார். இவருக்காக அல்லாவிட்டாலும் மக்களுக்காக இவர் துரிதமாக பயணிக்க வேண்டும். காரில் போனால் தப்பில்லை. எது மக்களுக்குச் சிறந்ததோ அதைச் செய்ய வேண்டும், இவர் எளிமையைக் காண்பிக்க மக்கள் நலத்திட்டங்கள் அடி வாங்குகிறது......... நல்லவர்தான், சற்று மாற வேண்டும்.
Jayadev Das said…
வெறும் எளிமை மட்டும் போதாது, முதல்வர் என்ற முறையில் அவரது பாதுகாப்பும் அவசியம். இவர் சைக்கிள் ரிக்ஷாவில் போகிறார், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மாநிலம் ஒரு நல்ல மாநில முதல்வரை அல்லவா இழந்து [கடவுள் அவ்வாறு நடக்காமல் காக்கட்டும்] தவிக்கும். மேலும் இவருக்காக அல்லாவிட்டாலும் மக்களுக்காக இவர் துரிதமாக பயணிக்க வேண்டும். காரில் போனால் தப்பில்லை. இவர் துணிகளை இவரே துவைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மாநில மக்களுக்கு நல்லது செய்யும் திட்டங்கள் மக்களுக்கான இதர சேவைகளில் ஈடுபடலாம். ஒரு சீப் மினிஸ்டரின் நேரம் அவ்வளவு சீப்பானது இல்லை. மைய அரசு, வெளிநாட்டு நிறுவனங்கள் , மக்கள் என அனைவரையும் சந்திக்க வேண்டும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும், மக்கள் முன்னேற்றத்தில் ஈடுபட வேண்டும், அதற்க்கு 24 மணி நேரமே போதாது, இவர் அதிலும் துணி துவைத்துக் கொண்டிருக்கிறார். எது மக்களுக்குச் சிறந்ததோ அதைச் செய்ய வேண்டும், இவர் எளிமையைக் காண்பிக்க மக்கள் நலத்திட்டங்கள் அடி வாங்குகிறது......... நல்லவர்தான், சற்று மாற வேண்டும்.
நம்ம அய்யா காமராசரை விட்டுவிட்டீர்களே..