5 மார்., 2013

வடிவேலு?... கவுண்டர் மீண்டும் வருகிறார்...


வடிவேலு கிட்டதட்ட சினிமா உலகத்திலிருந்தே வெளியேறிவிட்டார். அவரை நடிக்க வைக்க எந்த தயாரிப்பாளரு க்கும்,இயக்குனருக்கும் தைரியமில்லை. வடிவேலு படங்களில் நடித்து  2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பேட்டிகளில் குடும்ப வேலைகளை பார்க்கிறேன், ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன் என்கிறார். அவர் சொல்வது ''இம்மை அரசன் -2''யை தான் ஆனால் அப்படி ஒரு படம் வரும் அறிகுறியே இல்லை.
  கவுண்டமணி மீண்டும் வருகிறார். சந்தானம்,வடிவேலு,கருணாஸ்.... என பல நகைசுவை நடிகர்கள் வந்தாலும் இந்தியாவின் ''லாரல்- ஹார்டியாக'' வலம் வந்த நகைசுவை ஜோடிகள் கவுண்டமணி, செந்தில் நகைசுவை காலத்தால் மறக்க முடியாதது.

இந்த இடத்தில் ஒரு சின்ன தகவல் கவுண்டமணியா? கவுண்டர்மணியா என்றால்? கவுண்டர் ஆதாவது சினிமாவில் பேச்சுக்கு பேச்சு அவர் அடிக்கும் "கவுடண்டர்" (காமெடி,பதிலடி) களை பார்த்து ''கவுணடர்மணி'' தான் பின்பு ''கவுண்டமணி''. கவுண்டர்மணி ஜாதிய ரீதியான  பார்வை இல்லாதவர். மூடநம்பிக்கைக்கு எதிரான மனோபாவம் கொண்டவர். ஓகே கவுண்டர் .....              

 கவுண்டரை மீண்டும் அழைத்து வந்திருக்கும் இயக்குனர் செந்தில்குமார்... , வாய்மை படத்திற்காக.படத்தில் கவுண்டருக்கு உலகபுகழ்பெற்ற இதய சிகிச்சை நிபுணர்,டாக்டர் பென்னி என்பது கேரக்டர் பெயர்.(நம்ம் முல்லைபெரியாறு கட்டுன பென்னிகுக் நினைவாக அந்த பெயராம்).கவுடண்டரின் நகைசுவை சிரிக்க சிந்திக்க வைக்ககூடியவை, இந்த படத்தில் '' இங்கிலீஷ் பேசும் போது தமிழ்வந்துடக் கூடாதுனு இருக்கற அறி¢வு தமிழ்பேசும் போது இங்கிலிஷ் வந்துடக்கூடாதுனு இல்லையே''. என்கிறார். இந்த ஒரு பஞ்ச் காமெடியே தமிழர்களுக்கு போதும். (நாமும் கவுணட்ர் பேச்சை கேட்டகலாமே....).
             
                        வாய்மை படத்தில் இன்னொரு விஷேசம் பாரதிராஜா,பாக்யராஜ்,பாண்டியராஜன் வாரிசுகளும் நடிக்கிறார்கள். பாக்யராஜ் மகன் சாந்தானு, பாண்டியராஜன் மகன் பிரித்வி, பாரதிராஜா மகன் மனோஜ் என அசத்த இருக்கும் படம். காத்திருப்போம் கவுண்டருக்காக...

-செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...