மாணவர்களே ராஜபக்சேவுக்கு எதிரான உண்ணாவிரத்தை உடனே நிறுத்துங்கள் ...


ராஜபக்சேவுக்கு எதிரா நம்மால ஓன்னும் பண்ணு முடியாது?. உண்ணாவிரதம் இருக்குறது வெட்டிவேலை... நல்ல படிச்சமா? நல்ல மார்க் வாங்குனமா, அமெரிக்கா,ஆஸ்திரேலியான்னு போய் டாலர்ல சம்பாதிச்சமான்னு இல்லாம, இதெல்லம் தேவையா? மன்மோகன்சிங், நம்ம சிதம்பரமோ வந்து பழரசம் கொடுத்து, உங்க கோரிக்கையை எத்துக்க போறாங்களா? மாணவர்களே படிக்க வேண்டாம் டாஸ்மாக் போங்க நல்ல குவாட்டர் அடிங்க லைப் என்ஜாய் பண்ணுங்க, தமிழ்நாடு முழுக்க தடுக்கி விழுந்தா டாஸ்மாக் இருக்கே....

      மாணவர்களே கோபித்துக்கொள்ள வேண்டாம். உண்மை அதுதானே மாணவர்கள் சமுகத்தை, ஏன் தமிழகமே போதையில் சுரணையற்று போய்தானே இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பெல்லாம் பஸ்கட்டணஉயர்வு, விலைவாசி உயர்வு, தேர்வு கட்டண உயர்வு என்றாலே மாணவர்கள் போராட்டம் கொந்தளிக்கும், மிகமிக... நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுப்பிரச்சனைக்காக மாணவர்கள் நட்தும் போராட்டம். லயோலா கல்லூரி மாணவர்கள் வெறும் 8 பேர் மட்டுமே உண்ணாவிரதம் இருக்கிறார்கள். மூன்றுநாட்களுக்கு பிறகும் பெரிய அளவில் போராட்டம் வளரவில்லை. வளராது? வளரவும் விடமாட்டார்கள்.ஏன்?..

நீ வந்தால் நான் வரமாட்டேன்...

தமிழக அரசியல் வாதிகள் இப்படித்தானே இருக்கிறார்கள். கருணாநிதி பந்த் நடத்தினால் ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளமாட்டார். ஜெயலலிதாவின் முயற்சிகளுக்கு கருணாநிதி ஒத்துழைக்க மாட்டார். விஜயகாந்த்  எதுவும் பேசமாட்டார். ராமதாஸ் அறிக்கை மட்டும் தான்... இந்திய கம்யூனிஸ்ட் வந்தால் மார்க்ஸிட் வராது. வைகோ நடந்து கொண்டே இருப்பார். சீமான் இருக்காரானு தெரியல... இவ்வளவு ஒற்றுமையா இருந்தா எப்படி நல்லது நடக்கும்?...தமிழக மீனவர்கள் தினசரி தாக்கப்படுகிறார்களே அதற்காக முன்னால் முதல்வர் கருணாநிதியும், இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவும், மன்மோகன்சிங்குக்கு  எழுதிய கடிதங்களை பழைய பேப்பர் கடையில போட்டக்கூட நிறைய பணம் கிடைக்கும். இங்க மட்டுமில்ல இலங்கையிலும் அப்படிதான் ஒற்றுமை பிரமாதமா இருக்கு .... தமிழன் குணமே இது தான் போலும், இதெல்லாம் தெரிஞ்ச ராஜபாக்சே பிறகு எப்படி நம்ம பார்த்து பயப்படுவார்.உண்ணாவிரத போராட்டமும்,தீக்குளிப்புகளும்...

போராட்டம் என்றால் உண்ணாவிரதம் அல்லது தீக்குளிப்பு, ஒன்று அமைதியான முறை,மற்றொன்று மிக ஆவேசமான முறை.உண்ணாவிரதம் காந்திகாலத்து போராட்ட முறை... அது இப்ப ஒத்துவருமா? தீக்குளிப்பு தன்னையே அழித்து கொள்கிற முறை. இந்த இரண்டுமே இந்திய அரசியலில் பயனற்றுபோனவை, இந்திய அரசியல்வாதிகள் உண்ணாவிரதம்,தீக்குளிப்பு, போராட்டங்களுக்கெல்லாம் பயப்படுவதில்லை, கண்டுகொள்ளுவதுமில்லை.எத்தனையோ பேர் தீக்குளிச்சாசு, எவ்வளவோ போராட்டம் பண்ணியாச்சு எதாவது நடந்ததா?...புதுசா  போராட்ட முறையை கண்டுபிடிக்க வேண்டியது தான்...

இலங்கைக்கு எதிராக இந்தியா செயல்பாடாது ....

ஏற்கனவே ஆயுத உதவி மூலம் 1லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்ய உதவிய இந்தியா, தற்போது தமிழர்களின் மேம்பாட்டுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் 1000 கோடிக்கு மேல் இலங்கைக்கு நீதியுதவி செய்துவருகிறது.மேலும் ஏர்டெல், அசோக் லேலண்ட், என்.டி.பி.சி., ஐ.ஓ.சி., தாஜ் குழுமம், டி.வி.எஸ். எஸ்.பி.ஐ., உள்ளிட்ட 108 மேற்பட்ட நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்துள்ளன. இலங்கை மீது பொருளாதார தடை வருமானால் இந்திய நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதை இந்திய முதலாளிகள் ஏற்றுக்கொள்வார்களா? தேர்தல் நேரங்களில் பண உதவி செய்வது முதலாளிகள் தானே.. அவர்கள் பாதிக்கப்படலாமா?... நீங்கள் ஒட்டுப்போடும் கட்சிகளின் பெயர் வேண்டுமானால் காங்கிரஸ்,பாஜக என்று இருக்கலாம்...நடப்பது முதலாளிகளின் அரசு தானே. ஆக மாணவர்களே படிக்கற வேலைய பாருங்க.....
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

guru nathan இவ்வாறு கூறியுள்ளார்…
இலங்கைக்கு எதிராக இந்தியா செயல்படாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதை எதிர்த்து போராடாமல் ஜடமாக இருக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் சொல்லலாம்?
நீங்கள் இருந்துவிட்டு போங்க.
மத்தவனும் அப்படி இருக்கணும்னு சொல்லாதீங்க.
இந்தியாவிடமோ, அமெரிக்கவிடமோ மண்டியிடவில்லை. புரிந்து கொள்ளுங்கள்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
enge irunthuda neenga ellam varuveenga..
kkk இவ்வாறு கூறியுள்ளார்…
May 2009 il varatha ezhuchi, Muthukumaran maranaththin pin varatha ezhuchi--tharpothu maanavahalidam!!!

BULIDING STRONG -BASEMENT WEEKகுருநாதன் இவ்வாறு கூறியுள்ளார்…
எழுச்சி எப்போதும் இருந்தது. வரலாற்றை மாற்ற வேண்டாம். உருப்படியா ஏதாச்சும் செய்யுங்க. இல்லைனா அமைதியா இருங்க