பட்டப்படிப்பில் பெயிலான கேப்டன் தோனி


நம்ம இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி படிப்பில் கோட்டை விட்டுட்டார். இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என மூன்று பணிகளிலும் பட்டையை கிளப்பும் இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.ஆண்டு ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். கடந்த 2007ல் "டுவென்டி-20 உலக கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்தார். டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு "நம்பர்-1 இடம் பெற்று தந்தார். பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்(ஒரு நாள் போட்டி) பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

விளம்பர உலகிலும் கொடி கட்டிப் பறக்கிறார் . தற்போது உலகில் அதிகம் சம்பாதிக்கும் கோல்ப் வீரர் டைகர் உட்சுக்கு நிகரான அந்தஸ்தை தோனி பெற்றுள்ளார்,இவ்வளவு திறமையான கேப்டனுக்கு படிப்பு வரவில்லை,இந்திய கிரிக்கெட் அணி தலைவர் மகேந்திர சிங் தோனி பட்டப்படிப்பில் தோல்வி அடைந்து விட்டார். ஆறு செமஸ்டர் தேர்வுகளில் அவர் தோல்வி அடைந்துள்ளார் என்று ஜீ செய்திகள் கூறுகின்றன. ராஞ்சியில் பிறந்த தோனி, டிஏவி பள்ளியில் மேல்நிலைப்படிப்பை முடித்த பின், செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வணிக மேலாண்மை மற்றும் செயலாளர் பணிச்செயல்கள் படிப்பில் இளங்கலை படித்து வருகிறார். தொடர்ந்து கிரிக்கெட் ஆடிவருவதால் அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அவருக்கு உதவிடும் வகையில் சில விதிகள் தளர்த்தப்பட்டன.
ஆனாலும் அவரால் தனது பட்டப்படிப்பை முடிக்க முடியவில்லை.அடுத்த செமஸ்டர்லயாவது பாஸ் பண்ணுங்க தோனி.... உங்களுக்கென்ன பெயிலானலும் வேலை கிடைக்கும், கோடி..கோடியா சம்பளம் கிடைக்கும். நாங்க தான்?....

-செல்வன்




உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

இனி மேல் 'படிப்பு' தேவைப்படலாம்...!
  • பிழைக்கத் தெரியாதவர்களால் பிழைக்கிறது இவ்வுலகம் -சகாயம்
    26.11.2014 - 4 Comments
    தலைப்பைச் சேருங்கள் உண்மையை பேசுவது மட்டும் தான் சத்தியமா? அநீதிக்கு எதிராய் ஆவேச குரல் எழுப்புவதும்,…
  • அரசு வேலை வேண்டுமா?
    11.03.2015 - 1 Comments
    நீங்கள் அரசு வேலையில் சேர விரும்புகிறீர்களா? மிக மிக எளிதாக அரசு வேலை வாங்கலாம். கால்காசா (காலாணா)…
  •  கன்னிப் பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து 36 திருமண ஜோடிகள் வீரமரணம்
    04.05.2018 - 1 Comments
    மதுரை மாவட்டம் திருமங்கலம்  அருகே தஞ்சமடைந்த கன்னிப் பெண்ணை காட்டிக் கொடுக்க மறுத்து 36 திருமண…
  • முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு தர மாட்டோம்
    10.07.2012 - 11 Comments
      இந்தியாவில் ஓரு குறிபிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு வீடுவாடகைக்கு தரமுடியாது என்கின்ற அளவிற்கு மத…
  • இயக்குனர் கௌதம்மேனனை கண்ணீர்விட்டு  அழச்செய்த படம்
    30.03.2013 - 124 Comments
    நம்மை போன்ற சினிமா ரசிகர்கள் படக்காட்சிகளில் ஒன்றிப்போய் கண்ணீர்விட்டு அழுவது எப்போதாவது நிகழ்கிற…