மாமதுரையை போற்ற மதுரைக்கு வாங்க....


கொலைகள், வன்முறை மிகுந்த நகரம் என்ற பார்வை மதுரை பற்றி இருக்கிறது. உண்மைதான்... அரசியல் கொலைகள், சாதிய கலவரங்கள், அதிமான நகரம் தான் ...  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம். 2000 ஆண்டுகள் எழுதப்பட்ட வரலாறு உள்ள நகரம் மதுரை. சிலப்பதிகாரம், மதுரைகாஞ்சி போன்ற 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய படைப்புகளில் இன்று இருப்பது போலவே அன்றும் வியாபாரம், அரசியில் போன்றவற்றி¤ல் முக்கிய நகரமாக இலக்கியங்கள் பேசுகின்றன.
இன்று மிகப்பெரிய கிராமமாகவே மதுரை மாநகரம் உள்ளது. கிராமிய பழக்கவழங்கள், தமிழின் ஆதி விளையாட்டான ஜல்லிகட்டு, கலாச்சாரம் போன்றவற்றை நடைமுறை படுத்துகிற நகரம்.இலக்கியங்களில் பேசப்படும் எத்தனையோ நகரங்கள் அழிந்து போனாலும் மதுரை இன்றும் உயிர்புடன் இயங்கி வருகிறது..
               
                           மதுரையின் வரலாற்று சிறப்பை பேசும் விதமாக மாமதுரை போற்றுவோம் என்ற நிகழ்வு பிப்.8,9,10 தேதிகளில் நடக்கயிருக்கிறது.அதையொட்டி மதுரையின் பழமையை பேசும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடக்கவுள்ளன. மாமதுரை நிகழ்வின் துணைதலைவர் எழுத்தாளர் சு.வெங்கடேசன்(மதுரையின் 600 ஆண்டுகளா வரலாற்றே பேசும் காவல்கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதுபெற்றவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர், அரவான் திரைப்பட வனசகர்த்தா).வெளியிட்ட நிகழ்சசிகள்...
           
                         பிப்.7ம் தேதி  2300 ஆண்டுகள் பழமையான கல்வெட்ட  உள்ள மதுரை, அழகர்கோயில் அருகேயுள்ள கிடாரிப்பட்டியில் இருந்து விழா தீபம்எடுத்துவரப்படுகிறது. அத் தீபத்திற்கு மீனாட்சியம்மன் கோயில், கோரிப்பாளையம் பள்ளிவாசல், செயின்மேரிஸ் சர்ச் அகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிது. இத்தீபம் பிபி.8ல் தமுக்கம் மைதானத்தில் ஏற்ப்பட்டு மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சி துவங்குகிறது.மதுரையின் பழமையான கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

                     பிப்.9 தொன்மையை போற்றுவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தேரோடும் வீதியில் ஊர்கூடம் திருவிழா என்ற தலைப்பில் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு...மதுரை கல்லூரியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் வழியாக தமுக்கம் வருகிறது.இதில் கல்லூரி மாணவ ,மாணவியரின் உள்ளிட்ட 1000 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
              முன்றாவது நாளான பிப்.10 வைகையை போற்றுவோம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை  6மணி முதல் 7 மணிவரை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி  அதனை தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு தமுக்கம் மைதாத்தில் உள்ள தீபம் தெப்பகுளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அணைக்கும் நிகழ்ச்சி நடத்தபடும்
     
                 ஆக பிப். 8 ஒரு மினி சித்திரை திருவிழா .... மதுரையை போற்ற வாங்க ..வாங்க..
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
வரும் போது தொடர்பு கொள்கிறேன்...