டேவிட் & டேவிட்


ஒரு பெயர் இரண்டு வாழ்க்கை இது தான் டேவிட் பட கதையின் ஒன்லைன்.இரண்டு ஹீரோக்கள் ஒன்றிணைந்து நடிக்கும் நல்ல பழக்கம் மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு வந்துவிட்டது. பாலிவூட்டில் இந்த பழக்கம் சரளமாகவே  காணப்படுகிறது.  இந்தியாவின் இருவேறு பகுதிகளில் வசிக்கும் இரண்டு டேவிட்களை மையமாகக் கொண்டது இந்தக் கதை. இந்த இருவரும் எடுத்து வைக்கும் ஒரு அடி அவர்களின் வாழ்க்கையை மாற்றிப் போடுகிறது. என்பதை அழகாக காட்சி படுத்திகிறார்கள்,
மும்பையில் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து 18 வயதான டேவிட் என்ற இசைக்கலைஞனைப் பற்றியும், கோவாவில் உள்ள கடற்கரையோரம் உள்ள மீனவ குடும்பத்தில் பிறந்த 35 வயதான டேவிட் என்பவனுடைய கதையும் ஒரே படத்தில் சொல்லப்படுகிறது. இதில் மும்பையில் பிறந்த இசைக்கலைஞன் டேவிட்டாக ஜீவாவும், கோவாவில் மீனவக்குடும்பத்தில் பிறந்த டேவிட்டாக விக்ரமும் நடித்துள்ளனர்.
இந்த இரு வெவ்வேறு நிலப்பரப்பைச் சார்ந்த, வெள்வேறு குடும்பப் பின்னணியை, தொழிலை உடைய இவர்களின் வாழ்க்கையை பின்னிப் பிணைந்து சொல்கிறது படம்.விக்ரம், ஜீவாவுடன் நாசர், லாரா தத்தா, தபு, இஷா ஷெர்வானி நடித்திருக்கும் இந்தப் படம் பிப்ரவரியில் திரைக்கு வருகிறது.இந்தியில் மூன்றாவதாக ஓரு டேவிட் உண்டாம்.
பொதுவாக எல்லா படங்களிலும் அதிகபட்சம் இரண்டு மியூசிக் டைரக்டர்கள் இருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அனிருத் உட்பட சுமார் 5 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பிவிட்டது
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
எதிர்ப்பார்ப்பு கூடி விட்டது...