2 ஜன., 2013

ஏமாந்து போன கமல்


விஸ்வரூபம் எடுத்துவிட்ட கமலை பற்றி செய்திகள் தினம்,தினம் வந்து கொண்டிருக்கின்றன.விஸ்வரூபம் பிரச்சனை முடிவதற்குள்ளாகவே விஸ்வரூபம் பார்ட் 2 ரெடியாகி வருவதாக சொல்கிறார். தமிழ் சினிமாவின் நடிகர்கள் திகைத்துதான் போயிருக்கிறார்கள், டி.டி.எச் ஒளிபரப்பு குறித்து அவர் பேசிய போது கோலிசெய்தவர்கள் இன்று அவர் சாதித்து காட்டிய பிறகு வாயடைத்து போயிருக்கிறார்கள்.இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கும் கமலின் முதல் படமான களத்தூர்கண்ணாமாவில்  ஏமாந்த அனுபம் ....


ஏ.வி.எம். சரவணனுடன் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்றான் சிறுவன் கமல். அப்போது ""கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ'' என்ற பாடலின் ஷூட்டிங் நடைபெற்றது. கமல் முதன் முதலில் பார்த்த ஷூட்டிங் அது தான். ஏற்கனவே எடுக்கப்பட்ட அப்பாடலின் சில காட்சிகள் மீண்டும் அன்று படமாக்கப்பட்டன. மாங்காய் சீஸனில் அப்பாடல் காட்சி முதலில் படமாக்கப்பட்டது. இரண்டாவது முறையாக அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது மாமரத்தில் மாங்காய்கள் இல்லை. ஆகையினால் டூப் மாங்காய்களை தொங்க விட்டு படப்பிடிப்பை நடத்தினார்கள்.
 மாங்காயைக் கண்டதும் சிறுவன் கமலின் நாவில் எச்சில் ஊறியது. தனக்கு ஒரு மாங்காய் பிடுங்கித் தரும் படி ஜெமினி கணேசனிடம் கேட்டான். குறும்புக்கார ஜெமினி கணேசன் மாமரத்தில் ஏறி டூப் மாங்காயை பறித்துக் கொடுத்தார். மாங்காயைக் கடித்ததும் டூப் மாங்காய் என்றதனை எறிந்தான் சிறுவன் கமல்.
படப்பிடிப்பு நடந்த வீட்டை உண்மையான வீடு என்றே கமல் முதலில் நினைத்தார். அது செற் என்று தெரிந்ததும் ""ஐயையோ டூப் வீடு'' என்று சத்தமிட்டான் சிறுவன் கமல்.
சாவித்திரி உப்புமாவை ஊட்டி விடும் காட்சியில்தான் சிறுவன் கமல் முதன்முதல் நடித்தார். சாவித்திரி ஊட்டிய உப்புமாவை வாயில் அடக்கி வைத்திருந்துவிட்டு படப்பிடிப்பு முடிந்ததும் துப்பி விட்டு ""ஐயையோ டூப் உப்புமா'' என்றார்.
அது உண்மையான உப்புமாதான் என்பதை நிரூபிப்பதற்காக உதவி இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் சாப்பிட்டுக் காட்டினார். அதன் பின்னர்தான் அது உண்மையான உப்புமா என்ற உண்மை சிறுவன் கமலுக்குத் தெரிந்தது.


இப்படி தனது சினிமா வாழ்க்கையை துவக்கி இன்று கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபம் அவருக்கு மட்டுமல்ல தமிழ்சினிமாவிற்கு நல்லதாகவே அமையும். சினிமா ரசிகர்கள் அவரது முயற்சிக்கு   ஆதரவு கொடுப்போம்.
-செல்வன்உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...