2012ல் அதிக பாடல்களை எழுதிய நா.முத்துக்குமார்

தமிழ்த்திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி கவனத்தை ஈர்த்தவர்கள் ஏராளமானோர். தியாகராஜ பாகவதர் தொடங்கி கண்ணதாசன், வாலி, நாமக்கல் கவிஞர், வைரமுத்து என பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்களின் பாடல்கள் இன்றும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வரிசையில் உணர்வுகளை பாடல்கள் மூலம் தெளிவாகக் கூறி வருவோர் பட்டியலில் கவிஞர் நா. முத்துக்குமாருக்கென்று தனி இடம் உண்டு. அவர் திரையிசைக்க வந்தது முதல் சிறந்த பாடல்களைத் தந்து வருகிறார். இதனால் கடந்த 9 ஆண்டுகளாக தமிழ்த்திரைப்படங்களுக்கு அதிக அளவில் பாடல்களை எழுதியவர் என்ற பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். 2012ம் ஆண்டு வெளிவந்த படங்களில் 32 படங்களுக்கு மொத்தம் 103 பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.உறவுகளின் உணர்வை எடுத்துக் கூறுவதாக இருந்தாலும் சரி காதலின் வலியை,
இன்பத்தை கூறுவதாகவும் இருந்தாலும் சரி, நட்பின் ஆழத்தை புலப்படுத்துவதாக இருந்தாலும் சரி அனைத்து விதமான உணர்ச்சிகளையும் தனது பாடல் வரிகளால் ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறார்.இசையமைப்பாளர்களின் இசைக்கு ஏற்பவும், இசையின்றி வெறும் வரிகள் வரும் பாடல்களையும் தனது வரிகளால் அலங்கரிக்கும் ஆற்றல் பெற்றவராக திகழ்கிறார்.கடந்த ஆண்டு அவர் எழுதி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படங்களின் வரிசையில், வழக்கு எண் 18/9, ஒரு கல் ஒரு கண்ணாடி, நீ தானே என் பொன்வசந்தம், வேட்டை, தாண்டம், நண்பன், மாற்றான் போன்ற படங்களும் அடங்கும். இது தவிர 70ற்கும் மேற்பட்ட படங்களுக்கு முழுப்பாடல்களையும், ஒரு சில பாடல்களையும் அவர் எழுதி வருகிறார்.

- செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

வாழ்த்துக்கள்! இந்த நிலைக்கான அத்தனை தகுதிகளும் நா.முத்துக்குமாருக்கு உண்டு.
  • இயக்குனர் மணிரத்தினத்தின் பெர்சனல்
    20.09.2012 - 4 Comments
    உலக அளவில் சிறந்த 10 படங்களில் மணிரத்தினத்தின் ''நாயகன்'' இடம்பிடித்துள்ளது. அவரின் படங்கள் சினிமா…
  • உடல் சூட்டினை தணித்து நிம்மதியான உறக்கத்தினை தந்திடும் பனைநார் கட்டில்கள்
    19.06.2019 - 3 Comments
    உடல் கூட்டினை தணித்து நிம்மதியான உறக்கத்தினை தந்திடும் பாரம்பரியம் மிகுந்த பனைநார் கட்டில்கள்…
  •  ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடங்காத காளைகளை அடக்கி சாதனைகள் படைத்த மாவீரருக்கு கோவில் கட்டி வழிபடும் கிராமமக்கள்:
    17.01.2018 - 0 Comments
    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக…
  • முதல் முறையாக வால்நட்சத்திரத்தில் தரையிறங்கும் ஆய்வுக் கலம்  -வீடியோ
    13.11.2014 - 0 Comments
    விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் முதல்முறையாக, வால்நட்சத்திரம் ஒன்றில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கும்…
  • 28 நாட்கள் பொங்கல் கொண்டாடிய தமிழர்கள் ....
    15.01.2015 - 2 Comments
    தமிழர்கள் தனித்துவமிக்க ஒரு இனம் என்பதை உணர்த்துகிற விழா பொங்கல்.இயற்கையுடன் இணைந்து தமிழர்கள் கொண்டாடும்…