பதிவர்கள்,வாசகர்களுக்கு புத்தாண்டு வேண்டுகோள்...


அறிவுரையோ, ஆலோசனையோ அல்ல நண்பர்களே 2013 ம் ஆண்டுக்காக நான் செய்ய நினைத்திருக்கும் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இன்னும் சிலமணி நேரங்களில் விடைபெற இருக்கிற 2012ம் ஆண்டு நமக்கு நிறைய அனுபவங்களை விட்டுச்சென்றிருக்கிறது. அவை சந்தோசமானதாக, இனி நடக்கவே கூடாத கொடூரமாக நமக்கு விட்டு¢ச்சென்றுயிருக்கிறது. இந்நிலையில் 2013ம் ஆண்டு வந்துவிட்டது. வலைபதிவு என்பது நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வாய்ப்பு. அதை நாம் சரியாக பயன்படுத்தினால் என்ன?.என்கிற அக்கறையில் தோன்றிய சிலவற்றை உங்களோடு .....

         
                1. 2013ம் ஆண்டு இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் ஆண்டு. அதனால் நம் பதிவுகளில் சரியான அரசியலை முன்வைத்து பதிவுகளை வெளியிடலாம். அரபுநாடுகளில் பேஸ்புக் மூலமாக அரசியல் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது நமக்கு உதாரணம்.
             
                2. சினிமா பதிவுகளுக்கு இணையாக அரசியல் பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
             
                3. சினிமா பதிவுகளில் கூட கிசுகிசு... தகவல் வேண்டாமே அதை வணிக பத்திரிக்கைகள் பாத்துக்கொள்வார்கள்.
                4. நல்ல திறமையான நடிகர்களை ஆதரிக்கலாம், உங்களுக்கு பிடித்த நடிகர் என்பதற்காக அவர் செய்வதையெல்லாம் சரி என்கிற பார்வையில் பதிவு வேண்டாம்.
         
                5. அறிவியல், கலை, இலக்கியம் போன்ற தகவலை வெளியிடும் வலைபூக்களுக்கு ஆதவுகொடுங்கள், சினிமா பதிவுகளுக்கான முக்கியதுவத்தை இவற்றிக்கும் கொடுங்கள்.
           
                6. மொக்கை பதிவு என்கிற பெயரில் பதிவுகள் வேண்டாமே...
           
                7. தனிஈழுமோ,தமிழக பிரச்சனையோ விமர்சனம்,சுயவிமர்சனத்தோடு உங்கள் பதிவு இருக்கட்டும்.
             
                8.தமிழ்,தமிழர் வளர்ச்சியை முன்வைத்து உங்கள் பதிவுகள் வரட்டும் தவறில்லை, ஆனால் தமிழரும்,தமிழகமும் மட்டுமே உலகமில்லையே.
               
                9. நல்ல தகவல்களை copy - past  தவறில்லை.ஆனால்  கூடுமானவரை தகவல்களை எடுத்துக்கொண்டு உங்கள் பாணியில் பதிவு எழுதுங்கள்.
           
               
10. உங்கள் பதிவுகளை பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளோடு வரட்டும்.
                 மேற்கண்டபடியெல்லாம் எனது பதிவுகள் வருகிறதா? என்றால் ஒரளவு முயற்சிக்கிறேன்.நீங்களும் முயன்று பாருங்கள்....
 வாசகர்கள்,சகபதிவர்கள், நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

-செல்வன்.

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Anonymous said…
நல்ல பதிவு, தேவையின்றி அரசியல் எழுதுவதில்லை, சமூகம் - அறிவியல் இதனையே தொடர்ந்து எழுதவுள்ளேன், இணைந்திருங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Anonymous said…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

---

www.sudarvizhi.com

ஆத்மா said…
முயற்சிக்கிறோம்.....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்
  • ஒமிக்ரோன்  - மனித இனத்தின் மீது கொரோனோ நிகழ்த்தும்  கடைசி யுத்தம்..
    30.11.2021 - 0 Comments
      உலகை  அச்சுறுத்தும் புதிய கொரோனா வைரஸ் ஒமிக்ரோன்  - மனித இனத்தின் மீது கொரோனோ…
  • பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது கற்பழிப்புக்கு சமம்: எம்.எஸ்.வி. பேட்டி
    11.08.2012 - 1 Comments
    புதுப் படங்களில் பழைய பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வருகின்றன தொட்டால் பூ மலரும், பொன்மகள் வந்தாள்,…
  • காங்கிரஸ்- பாஜக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
    25.10.2012 - 2 Comments
    ஊழல் என்ற குட்டையில் ஊறி மொதித்த மட்டைகள்தான் காங்கிரசும் பாஜகவும். ஊழல் என்னும் ஓட்டப்பந்தயத்தில் போட்டி…
  • மழைப்பயணமாக மாறிய மலைப்பயணம்
    06.12.2011 - 5 Comments
    வரிச்சியூர் மலைப்பயணத்தில்(கிரீன்வாக்) கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மழைபெய்து கொண்டுக்கிற…
  • ஊழல் செய்த நபர் முதல்வராக   யார் காரணம்?
    06.10.2014 - 0 Comments
    ஊழல் செய்த நபர் முதல்வராகக் கூடிய அள விற்கு வாய்ப்பு எதனால் கிடைக்கிறது என்று உயர் நீதிமன்ற மூத்த…