திரையுலகில் பட்டைய கிளப்பும் வாரிசுகள்


அரசியல் உலகத்தில் வாரிசு போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், சினிமா உலத்திலும் வாரிசு போட்டிகள் துவங்கியிருக்கின்றன.சினிமா,அரசியல் இரண்டுமே பேரும்,புகழும்,பணம் கிடைக்கின்ற துறை, அதனால் போட்டிகளும், பிரச்சனைகளும் தொடர்கின்றன. இரண்டிலுமே ஜெயிப்பது சிரமம். மக்கள் ஏற்க்கொள்ளவேண்டும். தமிழ்ச்சினிமாவில் ஏற்கெனவே பலவாரிசு கள் வந்துவிட்ட நிலையில் மேலும் சிலர் .கமலஹாசனின் இரண்டாம் மகள் அக்ஷராவும் நடிக்க தயார், மகளுக்கான கதையை அம்மா சரிகா மும்பையில் இருந்தபடியே தேடிக்கொண்டிருக்கிறார்.

இயக்குநர்களை கவரும் வகையான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார்.விஜயகாந்தின் இரண்டாம் மகன், 21 வயதாகும் சண்முகபாண்டியன் கேப்டனின் கலைவாரிசாக தயாராகி விட்டார். லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சண்முக பாண்டியன் தன் நடிப்பு ஆசையை அப்பாவிடம் சொல்ல, அவரும் மகனுக் காக சரியான  கதையை தேடிக்கொண்டி ருக்கிறார். அப்பாவைப்போலவே ஆக்ஷன் ஹீரோ ஆவதுதான் மகனின் ஆசை.நடிகர் திலகத்தின் இரண்டாம் பேரன் விக்ரம் பிரபு, நடிகர் பிரபுவின் மகன், `கும்கி’ படத்தின் வாயிலாக கதாநாயகன் ஆகிவிட்டார். ஏற்கெனவே சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் நடிக்க வந்துவிட்டார். அவரை தொடர்ந்து இன்னொரு வாரிசான சிவாஜிதேவ், நடிகை ஸ்ரீப்ரியாவின் அக்காள் மகன்,அவரும் நடிக்க வந்து 2 படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.சகலகலா வல்லவரான விஜய டி. ராஜேந்திரன் இரண்டாம் மகன் குறளரசன் படிப்பை முடித்து நடிப்புக்கு தயாராகிவிட்டார். மகனுக்காக டி. ஆரும், ஒரு அழகான காதல் ஸ்கிரிப்ட் தயார் செய்து
கொண்டிருக்கிறார்.
விரைவில் குறளரசனும் பட்டைய கிளப்ப வரலாம் அப்பா இயக்கத்தில்.நவரச நடிகர் முத்துராமன் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசு, நடிகர் கார்த்திக்கின் மகன்கௌதம் இயக்குநர் மணிரத்னம் இயக்கும் `கடல்’ படத்தின் கதை நாயகனாக திரைபிரவேசம் ..கௌதம் பெங்களூருக்கு சென்று பி.டெக். படித்து முடித்து திரும்பி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பதும் ஒரு வாரிசு நடிகைதான். நடிகை ராதாவின் இரண்டாம் மகள் துளசிநாயர் அவர்.பாரதிராஜாவின் இயக்கத்தில் `அலைகள் ஓய்வதில்லை’யில் கார்த்திக்-ராதா அறிமுகமானது போல, அவர்களின் வாரிசுகள் மணிரத்னம் இயக்கத்தில் `கடல்’ படத்தில் அறிமுகமாகிறார்கள்.


சரத்குமாரின் மகள் வரலட்சுமி `போடா போடி’ படத்தில் சிம்பு ஜோடி.,.அடுத்து கமலஹாசனின் அன்புத்தோழி கௌதமியின் மகள் கலையுலகில் நுழையலாம்.சுஹாசினி மணிரத்னம் மகனும் `உள்ளேன் ஐயா’ என்பது போல வளர்ந்து மலர்ந்து நிற்கிறார்.மலையாளத்தில் மம்முட்டியின் மகன் நடித்து இரண்டு படங்கள் வெற்றிபெற்றுவிட்டன. அவர் விரைவில் தமிழில் ஒரு படத்தில் `ஜேடி ஜெரி’ இயக்கத்தில் நடிக்க உள்ளார்.அவரைத் தொடர்ந்து கேரளாவில் மோகன்லாலின் மகனும், ஜெயராமனின் மகனும் கலை சேவைசெய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.ஆக , அரசியல் களத்தில் அங்கும் இங்குமாக சில வாரிசுகளே ஆக்கிரமித்துக் கொண்டதுபோல சினிமாவிலும் வாரிசுகளின் கையே ஓங்கிக்கொண்டிருக்கிறது. அரசியலானாலும் கலையுலகானாலும் வாரிசுகள் வரக்கூடாது என்று வாதிட முடியாது. அரசியலைப் போலவே கலையுலகிலும் சில வாரிசுகள் முத்திரை பதித்தது உண்டு.
-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

ஆத்மா said…
சொதப்பல்கள் கொடுக்காமல் விட்டால் சரிதான்
  • ஆதிசிவனை திறக்க வராதீர் பிரதமரே! ஆன்மீகத்தின் பெயரால் சட்டவிரோதம்:
    23.02.2017 - 1 Comments
    மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை ஈஷா மையத்தின் சார்பாக 112 அடி ஆதிசிவன் சிலை திற்கக்பப்ட உள்ளது.…
  • உலக குற்றங்களின் தலைவன் அமெரிக்கா
    23.04.2012 - 1 Comments
    அமெரிக்காதான் தீவிரவாதம் மற்றும் உலக குற்றங்களின் தலைவனாக திகழ்கிறது என்ற பயங்கரவாதி பின்லேடன் கூறிய…
  • தண்ணீய விலைக்கு விக்குறது பாவம்டா.......
    20.01.2014 - 5 Comments
    பஸ் அரைமணி நேரம் நிக்கும் சாப்பிட்டு வந்துருங்க....  அடுத்து கோயம்போடு தான் நிக்கும்...…
  • வலைப்பதிவர் சந்திப்பு ... ஆக்கபூர்வமான விழா
    20.10.2014 - 1 Comments
    வருடத்தில் 280 நாட்கள் மீனாட்சியம்மன் கோயிலில் ஆன்மீக நிகழ்வுகள் நடக்கும்.வழக்காடு மன்றங்கள்,…
  • மலையாள நண்பர்கள் மனம் திறக்க ஒரு மடல்...
    03.02.2012 - 1 Comments
    என் இனிய மலையாள நண்பர்களே ஒரு கதை சொல்கிறேன். ‘‘ஒரு ஊர்ல ஏழை விவாசாயி இருந்தான். நல்லவன், நல்ல உழைப்பாளி,…