8 நவ., 2012

தேவர் குல பெருமக்களே திருந்தவே மாட்டீர்களா?

பசும்பொன் தேவரின் பெயரால், அவரது குருபூஜையன்று ஒவ்வொரு வருடமும் நடந்துவரும் வன்முறைக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. நேற்று (நவ.7) தேவர்குருபூஜையன்று ராமநாதபுரம் பகுதியில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மாவட்டங்களில் பந்த அறிவிக்கப்பட்டது. விலைவாசி உயர்வு,மின்வெட்டுக்கு கூட கிடைக்காத ஆதரவு இந்த பந்துக்கு கிடைத்தது. எல்லாம் பயம் காரணமாக கிடைத்த ஆதரவு. எனது ஊரான திரமங்கலத்தில் பந்த் மிகப்பெரிய வெற்றி???... ஒரு கடைகூட திறக்கப்படவில்லை. பஸ்கள் நிறுத்தப்பட்டது.
பந்துக்கு முதல்நாள் எங்கள் ஊரில் பஸ்களுக்கு கல்எறி, தீவைப்பு நடந்தது. எந்த பந்தாக இருந்தாலும் மாலை 4 மணிக்கு மேல் கொஞ்சம், கொஞ்சமாக சரியாக தொடங்கி கடைகள் திறக்கப்பட்டு, பேருந்துகள் இயங்கதுவங்கும். தவிர்க்க முடியாத அவசர வேலை காரணமாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் செல்ல வேண்டியதிருந்தது. மாலை 4மணிக்கு புறப்பட்ட பேருந்தில் கிளம்பினேன் , மொத்தமே 3 பேர்தான் இருந்தோம்,போக்குவரத்து துறைக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குகிறது. (மதுரைக்கு தெற்காக கன்னியாகுமரி,தென்காசி செல்பவர்கள் யாராக இருந்தாலும் திருமங்கலம் இறங்காமல் செல்லமுடியாது, இரவு நேர பேருந்துகள் இயக்குமளவுக்கு பிஸியான பகுதி)மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு 4 கிலோமீட்டர் முன்பாகவே பஸ்கள் நிறுத்தப்பட்டன.இதுக்குமேல பஸ் போகாது, ஏறங்கிருங்க என்றார் நடத்துனர். காரணம் கேட்டபோது பெட்ரோல் குண்டு போட்டாங்க,பஸ் போகாது என்றார்.


          அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் குழந்தைகளுடன் தாய்மார்கள், நடக்க முடியாத பெரியவர்கள்,இளம் வயது பெண்கள் ,அடுத்த என்ன செய்வது என தெரியவில்லை திரும்ப ஊருக்கே போகலாமா எப்படி போவது என்ற படி நடக்க துவங்கினார்கள்.நான் மதுரையில் இருந்த நண்பரின் உதவியோடு என்வேலைகளை முடித்து இரவு 10மணிக்கு பெரியார் பேரூந்து நிலையம் வந்த போது மின்வெட்டில் பெரியார் பேருந்து நிலையம் இருண்டு கிடந்தது. வேலை முடிந்து செல்லும் இளம் பெண்கள், குழந்கைகளோடு நிற்கும் தாய்மார்கள், வயதானவர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் பேருந்து வரும் என்ற நம்பிக்கையில் காத்துகிடந்தார்கள்,
                 இதற்கிடையில் எனது ஊரிலிருந்து நண்பர் கைபேசியில்  பேசினார், அவரது மனைவியும் வயதுவந்த மகளும் பெரியார் பேருந்து நிலையத்தில் நிற்பதாகவும் அவர்களை எப்படியேனும் பாதுகாப்பாக அழைத்துவருமாரும் என்னிடம் டூவீலர் இல்லை என்றும் சொன்னார். மின்வெட்டு இருட்டில் அவர்களை ஒருமணி நேர தேடலுக்கு பிறகு கண்டுபிடித்து, சிலமணிநேர காத்திருப்புக்கு பின் வந்த பேரூந்தில் ஊர்வந்து சேர அதிகாலை 1 மணியாயிற்று இரவு உணவு சாப்பிட முடியாமல் பட்டினிதான் கிடந்தோம்.

                ஆட்சியில்
இருப்பவர்கள் தங்களின் ஓட்டுவங்கிகாக சாதிய அரசியலை வளர்க்கிறார்கள். மின்வெட்டைதான் சரிசெய்யமுடியவில்லை சட்டம் ஓழுங்கு பிரச்சனையையுமா?
   பசும்பொன்தேவர் தலித்துகளை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய பிரவேசம் செய்த நல்ல மனிதர், அவரின் சிறுவயது வளர்ச்சியில் முஸ்லிம் மற்றும் தலித் பெண்களின் பங்களிப்பு குறித்து அவரே பேசியிருக்கிறார்.சாதியின் பெயரால்  அவரின் வாரிகள் என சொல்லிக்கொள்ளும் தேவர்குல மக்கள் திருந்தவே மாட்டார்கள் போலிக்கிறது.ஒவ்வொரு வருடமும் இமானுவேல்சேகரன் நினைவுதினம்,தேவர் குருபூஜையன்று தென்மாவட்ட மக்கள் படும் கொடுமைக்கு தீர்வேயில்லையா?
- -செல்வன்.

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...