கடல் அரசியல் பேசும் நீர்பறவை + படங்கள்


தென்மேற்கு பருவகாற்று படத்தில் மூன்று தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் சீனுராமசாமியின் புதிய படம் நீர்ப்பறவை..ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம்.
படத்தின் கதை குறித்து இயக்குனர் சொன்ன தகவல்களிருந்து ...
நடுக்கடலில் படகில் பலர் இறந்துகிடக்க அதில் ஒரு சிறுவன் மட்டும் உயிரோடு இருக்கிறான். தென் இலங்கையை சேர்ந்த அவனை ஒரு மீனவன் தமிழகத்துக்கு அழைச்சிட்டு வந்து வளர்க்குறான். இதிலிருந்து தான் படம் துவங்குகிறது.புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையை படத்தில் 14 நிமிடம் சமரசம் இல்லாமல் பதிவு செய்திருக்கிறேன்.

           கடல் அரசியல்தான் நீர்பறவை படத்தின் மையக்கதை. உயிரினங்கள்  தோற்றத்திலிருந்து. அந்நிய படையெடுப்பு, வியாபாரம், என முக்கிய பங்குவகிக்கும் கடல் மற்றும் மீனவர்களின் வாழ்க்கை வலியை சொல்லும் படம். கடலுக்கு நடுவே காம்பவுண்ட் சுவரா இருக்கு, நாட்டு படகில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை அந்நிய நாடுகள் சுடுறது தான் உலகத்திலேயே மிகபெரிய வன்முறை.முப்படைகளை கொண்ட இந்திய நாட்டின் கடலோரப் பிள்ளைகள் இன்னொரு நாடு சுட்டுக்கொல்வதை எப்படி பொறுத்தக்கொள்ள முடியும்?. இதை படம் பேசும் என்கிறார் இயக்குனர் சீனு.


             வெண்ணில கபடி குழு நாயகன் விஸ்ணு, சுனைனா, இயக்குனர் சமுத்திரகனி, தம்பி ராமையா, முக்கிய வேடத்தில் நடிகை நந்திதாதாஸ்,சரண்யா பொன்வண்ணன்,நடித்துள்ளனர்.பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.இசை என்.ஆர்.ரகுநந்தன்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 10 ஆம் தேதி சத்யம் திரையரங்கில் நடந்தது. இயக்குனர் பாலுமகேந்திரா, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் மற்ற திரைக்கலைஞர்களுடன் இயக்குனர் முருகதாஸ் வெளியிட இசை குருந்தகுடை ஹாரிஸ் ஜெயராஜ் பெற்றுக்கொண்டார்.
     எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். தென் மேற்று பருவாக்காற்று படத்தில்  வறட்சியான கிராமத்தை கையாண்ட இயக்குனர் இந்தபடத்தில் கடலை மையமாக வைத்து இயக்கியுள்ளபடம். விரையில் வெளிவர உள்ள இப் படத்திற்கு     தனிக்கைகுழு அதிகாரிகள் ``U  '  சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
சுருக்கமான நல்ல விமர்சனம்...

நன்றி...