16 நவ., 2012

எனது ஊரில் துப்பாக்கி படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


நேற்று எனது ஊரில் ( மதுரை மாவட்டம் திருமங்கலம்) துப்பாக்கி படம் இரவு காட்சி ஓடிக்கொண்டிருந்த தியோட்டர்களில் வெடிகுண்டு மிரட்டல் காட்சிகள் நிறுத்தபட்டன. எப்போதுமே பகல் காட்சி செல்வது எனது வழக்கம். நேற்று மனைவி குழந்தைகளோடு அவர்களுக்காக இரவு காட்சி சென்றோம்.  இடைவேளையை தாண்டி  படத்தில் விஜய் மும்பையில் முஸ்லீம் தீவிரவாதிகளை பந்தாடிக்கொண்டிருந்த நேரத்தில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய்களோடு நுழைந்தார்கள்.படம் முழுமையாக பார்க்க முடியவில்லை...
இதை தொடர்ந்து துப்பாக்கி இயக்குனர் முருகதாஸ் பகிங்கர மன்னிப்பு கேட்டதாகவும், முஸ்லீம்களுக்கு எதிரான காட்சியை நீக்குவதாகவும் செய்திகள் வரத்தொடங்கின. மேலும் நடிகர் விஜய் கோட்டையில் முதல்வரை சந்தித்து துப்பாக்கி ஓடும்
தியோட்டர்களுக்கும்,தனக்கும் பாதுகாப்பு தருமாறு கேட்டதாகவும், அதனடிப்படையில் பாதுகாப்பு வளையத்தில் துப்பாக்கி படமும் ,நடிகரும் கொண்டுவரபட்டதாகவும் செய்திகள் வரத்தொடங்கின.
இயக்குனர் முருகதாஸ்க்கும் ,விஜய்க்கும் இது தேவையா?  தீவிரவாதிகள் என்றாலே முஸ்லீம்கள்தானா?

                       தமிழ் படங்களில் விஜயகாந்த படத்திலிருந்து , கமலின் உன்னைபோல் ஒருவன் , தற்போது விஜயின் தூப்பாக்கி, மீண்டும் கமலின் விஸ்வரூபம்,
சமீபத்தில் நபிகளை அவமானப்படுத்தும் ஹாலிவுட் படம் என முஸ்லீம்களை மட்டுமே தீவிரவாதிகளாக சித்தரிப்பது நியாயமா?
இந்தியாவில் மிகச்சிறந்த முதல்வராக சித்திரிக்கப்படும் நரேந்திரமோடி,குஜாராத்தில்  திட்டமிட்டு நிகழ்த்திய கோத்ரா ரயில்  எரிப்பு சம்பவமும்,அதன் பின்  இந்து தீவிரவாதிகள், முஸ்லீம்கள் மீது  நிகழ்த்திய கொடுர தாக்குதல்களை படமாக்கலாமே ( முஸ்லீம் கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து கருவை தீயில் போட்ட கொடுமையை படமாக்கலாமே?..
மலோக்கான் குண்டுவெடிப்பில் பெண்சாமியார் பிராக்யாவும், இரண்டு ராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்டடனரே அதை வைத்து படம் எடுக்கலாமே?
ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை.குஜராத் அவலத்தை தோலுரிக்க தைரியமில்லை
 உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.இயக்குனர்கள் திருந்துவார்களா?
-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...