15 நவ., 2012

இந்த ஆண்டு குழந்தை பொற்றுக்கொண்டவர நீங்கள்?


ஆம் என்றால் உங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி. 2012ம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கை வித்தியாசமாக இருக்கும்.என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்கார்ட் லாந்தை  சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2012 ல் பிறக்கும் குழந்தை களில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 100 வயது வரை வாழ்வார்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் 70 வயது வரை வேலை செய்யும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் .
இவர்கள் தங்கள் மூதாதையர்களை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்துகொள்வர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களின் வாழ்வு வித்தியாசமானதாக இருக்கும். இவர்கள் தங்கள் 31 வயதில் தான் குழந்தையை பெற்று கொள்வார்கள். பலர் குழந்தையே பெற்றுக்கொள்ள மாட்டார்களாம். அப்படியே பெற்றுக் கொண்டாலும் ஒன்றோடு நிறுத்திக்கொள்வார்களாம். 2012ஆண்டு பிறந்த குழந்தைகளில் 39 சதவீத பெண் குழந்தைகளும் 32 சதவிகித ஆண்குழந்தைகளும் 100வது பிறந்தநாளை கொண்டாடுவார்களாம். ஆண்களை விட பெண்கள் 100 வயதை தொடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
-செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...