காரில் பயணித்த வேற்றுகிரகவாசி வீடியோ+ 10 கெட்டப்புகளில் எலியான்


நம்பமுடியாது... ஆனால் உண்மையா இருக்குமோ என்ற நிலையில் தான் வேற்றுகிரகவாசிகளை பற்றிய தகவல் அடிக்கடி வருவதும் போவதுமாக இருக்கிறது. வேற்றுகிரகவாசிகளை ''எலியான்'' என்கிறார்கள்.விண்வெளி விஞ்ஞானிகளுக்கு சவால் மிகுந்த துறை. ஆனால் இன்னும் 40 ஆண்டுகளில் நாம் வேற்றுகிரவாசிகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.தற்போது வேற்றுகிரக மனிதர்களை பற்றி தகவல்கள், புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை வெளியீடுகிற ஒரு அமைப்பாக யுஎப்ஓ உள்ளது. அந்த வகையில் காரில் பயணிக்கும் வேற்றுகிரகவாசியின் வீடியோ பார்த்தேன் அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
 மேலும் வேற்றுகிரகவாசிகள் எப்படியிருக்கலாம் என்ற கற்பனையில் உருவான 10 புகைப்படங்களையும் தொகுத்து தந்துள்ளேன்.

நீங்கள் பார்க்கும் வீடியோவில், ஒரு குடும்பம் காரில் வீட்டில் இருந்து புறப்படுகிறது.இதனை தொடர்ந்து புறப்பட்ட மேலும் ஒரு கார் அவர்கள் காரை பின்தொடர்ந்து வீடியோ எடுக்கிறது. அப்போது கார் அதிவேக பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது அதிர்ச்சி காத்திருக்கிறது. 
காரின் பின்புறத்தின் கீழாக ஒரு வேற்றுக்கிரகவாசி போன்ற உருவம் வெளியில் தலை ஓட்டி வீதியை பார்க்கிறது.

இந்த வீடியோ எந்தளவுக்கு உண்மை என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் இவ் வீடியோ ஏலியன்கள் பற்றி தொடர்ச்சியாக வெளியிடும் ஒரு டி.வி.சானலால் வெளியிடப்பட்டுள்ளது. 
இருப்பினும் இந்தவீடியோவை  பார்த்த பெரும்பாலானோர் இது ஒரு பொய்யான வீடியோ என்றெ காமெட் பதிவிட்டுள்ளார்கள். 
எது உண்மை எது பொய் நீங்களே முடிவு செய்யுங்கள். எலியான் 10 கெட்டப்புகள் எப்படியிருக்கிறது?
--செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

நம்ப முடியவில்லை... இருந்தாலும் நன்றி...
ஆத்மா said…
ஆச்சரியமான தகவல்
  • புகைப்படச் செய்தியாளர்’ தேசிய விருது வென்ற தமிழன்
    18.12.2012 - 3 Comments
    தண்ணீரோ, மின்சாரமோ... தமிழகத்துக்கு எதிரான டில்லியின் அநீதி போக்கு தடையின்றி தொடரத்தான் செய்கிறது.…
  • படுகொலை செய்யப்பட்ட  வலைப்பூ எழுத்தாளர்
    17.04.2015 - 3 Comments
    தனது வலைப்பூவில் மதச்சார்பின்மை, அறிவியல், சமூகப் பிரச்சினைகள் போன்றவை தொடர்பில் அவர் தொடர்ந்து…
  • அப்பா நடிகரின் அவஸ்தை
    30.06.2012 - 3 Comments
    அப்பா வேடம் என்றால் ரங்காராவ், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தரராஜன் என அந்த காதாபாத்திரத்திற்கே அழகு சேர்கிற…
  • நோட்டாவுக்கு 60 லட்சம்  ஓட்டு...
    18.05.2014 - 0 Comments
    நாட்டில் 60லட்சம் வாக் காளர்கள் எந்த வேட்பாளருக் கும் வாக்களிக்க விரும்பவில் லை என்கிற நோட்டா பொத்…
  • இங்கிலாந்தில் குழந்தை பெற்ற ஆண் தாய்? - தந்தை?
    15.02.2012 - 0 Comments
    இங்கிலாந்தை சேர்ந்த 30 வயது ஆண் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண் ஆக மாறினார். அப்போது அவர் தனது…