தமிழகத்தில் ரவுடிகளின் எண்ணிக்கை16,502..

தமிழகத்தில் வசிப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி.தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பெயர் பட்டியலை, உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தலைவர் தாக்கல் செய்தார். அதில், ‘மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் உள்ளனர். ரவுடிகள் பட்டியலில் தலைநகர் சென்னை முதலிடத்திலும் 2வது இடத் தில் நெல்லையும், 3வது இடத் தில் மதுரையும் கடைசி இடத் தில் நீலகிரி மாவட்டமும் உள் ளது’ என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
புதுக்கோட்டையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முத்துக்குமார், காதல் பிரச் சனையில் வெட்டி கொல்லப் பட்டார். இந்த கொலையில் போலீசார் கைது செய்த இரு வர், ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல், குற்றங் களின் எண்ணிக்கை, தண் டனை விபரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய, தமிழக காவல் துறை தலைவருக்கு, நீதிபதி கிரு பாகரன் உத்தரவிட்டார்.

அதன் படி தமிழக காவல்துறை தலை வர் ராமானுஜம், உயர்நீதிமன் றத்தில் அறிக்கை தாக்கல் செய் தார்.அந்த அறிக்கையில், 31 மாவட்டங்கள், 6 நகரங்களில் காவல் நிலையங்களில் பராமரிக் கப்படும் ரவுடிகள் பட்டியலில் 16 ஆயிரத்து 502 ரவுடிகளின் பெயர்கள் இடம் பெற்றிருப்ப தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் சென்னையில் 3,175 ரவுடிகள் உள்ளனர். பட்டி யலில் நெல்லை 2வது இடத்தில் உள்ளது. நெல்லை நகரில் 334 ரவுடிகளும், நெல்லை புறநகரில் 1,214 ரவுடிகளும் உள்ளனர். மதுரை 3வது இடத்தில் உள் ளது.

மதுரை நகரில் மட்டும் 888 ரவுடிகள் உள்ளனர். புறநகரில் 484 பேர் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் 748 ரவுடிகளுடன் 4ம் இடத் தில் உள்ளது. டிஜிபி பட்டியல் படி, கோவை நகரில் 512, புற நக ரில் 226, சேலம் நகரில் 353, புற நகரில் 299, திருச்சி நகரில் 427, புறநகரில் 155 ரவுடிகள் உள் ளனர். ரவுடிகளின் எண் ணிக்கை நீலகிரி மாவட்டத்தில் குறைவாக உள்ளது. இங்கு 65 ரவுடிகள் மட்டுமே போலீஸ் பட்டியலில் உள்ளனர். திரு வாரூர், பெரம்பலூரில் தலா 84 பேர் உள்ளனர்.இது தவிர காஞ்சிபுரம்-416, திருவள்ளூர்-318, விழுப்புரம்-452, கடலூர்-680, வேலூர்- 376,


திருவண்ணாமலை-200, ஈரோடு-276, திருப்பூர்-127, நாமக்கல்-308, தர்மபுரி-165, கிருஷ்ணகிரி-329, புதுக்கோட்டை - 157, கரூர்-143, அரியலூர்-290, தஞ்சாவூர்-584, நாகப்பட்டினம் -287, விருதுநகர்-655, திண்டுக் கல்-299, தேனி-111, இராமநாத புரம்-462, சிவகங்கை-214, தூத் துக்குடி-605 பேர் என ரவுடிகள் பட்டியலில் உள்ளனர்.குற்றங்களை பொறுத்த வரை, 2001 முதல் 2011 வரை பத்து ஆண்டுகளில் 17 ஆயிரத்து 32 கொலைகள் நடந்துள்ளன.

3 லட்சத்து 11 ஆயிரத்து 308 கொலை முயற்சி, சிறு குற்ற சம் பவங்கள் நடந்துள்ளன. 2 லட் சத்து 33 ஆயிரத்து 738 சொத்து தொடர்பான குற்றங்களும் கடந்த பத்து ஆண்டுகளில் நடந் துள்ளன. இ.பி.கோ சட்டப் பிரிவு வழக்குகளில் குற்றவாளி களுக்கு தண்டனை கிடைப்பது தமிழகத்தில் 2001ம் ஆண்டு 62.80 சதவீதமாக இருந்தது. 2011ம் ஆண்டு 62.10 சதவீதமாக குறைந்துள்ளது.ஆக மொத்தம் நாம் ரவுடிகளின் ராஜ்ஜியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. ரவுடிகள் என்ப்படுவர்கள்யார்? இவர்களை வளர்த்துவிடுவது யார்? எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என சிந்திக்கவேண்டியுள்ளது.

-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஐயோ...! இத்தனை ஜென்மங்களா...!!!
சிட்டுக்குருவி இவ்வாறு கூறியுள்ளார்…
என்னப்பா இது ஒரே ரவுடி மயமாத்தான் இருக்குது
நாடு வெளங்கிடும்