10 செப்., 2012

சுந்தரபாண்டியன். ஸ்டில்கள் + பாடல் இலவச டவுன்லோடு செய்ய


போராளி படத்துக்குப் பிறகு சசிகுமார் நடிக்கும் புதிய படம் சுந்தரபாண்டியன். கும்கி படத்தில் நடித்த லட்சுமி மேனன் நாயகி . படத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்துள்ளார் இயக்குநர் - நடிகர் சசிகுமார்.தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என அனைத்திலும் வெற்றியை ருசித்தவர் எம் சசிகுமார்.இதில் அவர் ஹீரோ மட்டுமில்லை, தயாரிப்பாளரும் கூட. இந்தப்படத்தை அவரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்ஆர் பிரபாகரன் இயக்குகிறார்.
படத்தில் பாடல்கள்...

சுந்தரபாண்டியன் படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
கொண்டாடும் மனசு பாடலை எழுதியிருக்கிறார் மோகன்ராஜன். இவர் ஏற்கனவே ஈசன் படத்தில் ஜில்லா விட்டு பாடலை எழுதியவர். கொண்டாடும் மனசு பாடல் ஹீரோ அறிமுக பாடலாக எழுதப்பட்டுள்ளது.

பாடல்களை டவுன்லோடு செய்ய

ரெக்கை முளைத்தேன் பாடலை ஜீவி பிரகாஷ் உடன் ஸ்ரேயா கெளசலும் இணைந்து பாடியிருக்கிறார்கள். மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடல் ஒரு டூயட் பாடலாக இருக்கிறது. ஸ்ரேயா கௌசலின் குரலில் தேனாக தித்திக்கிறது ரெக்கை முளைத்தேன்.
நெஞ்சுக்குள்ளே என்று தொடங்கும் பாடலை சைந்தவி பாடியிருக்கிறார். தாமரை இந்த பாடலை எழுதியிருக்கிறார். ஒரு பெண்ணின் ஆசைகளை ஏக்கங்களை பதிவு செய்கிறது நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே பாடல். பாடலின் ஒரு வரி முடிந்ததும் இடைவெளி விடாமலே அடுத்த வரியும் தொடர்ந்து வருவது பாடலின் ஹைலைட்.
காதல் வந்து பொய்யாக உன்னைச் சுற்றினாலே… பாடலை எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். பாடியிருக்கிறார் ஹரிச்சரண். காதல் வரும் போது ஏற்படும் அனுபவங்களை பதிவு செய்கிறது இந்த பாடல்.
- சத்யஜித்ரே


உங்கள் கருத்துக்களை எழுத

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...