மதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்


தவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான்.  இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு  3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில்  வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.
மதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட  பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசுமை மற்ற பயணங்கள் குறித்து இந்த பதிவின் கீழ்பகுதியில்இணைக்கப்பட்டுள்ளது.) பசுமை பயணத்தில்  மாடக்குளம் கண்மாயும் ஒன்று.

 மதுரை - பழங்காநத்தம் வழியாக ஆரப்பாளையம் செல்லும் பைபாஸ் மேம்பாலத்திலிருந்து இடது புறமாக சிறிது,பெரிதுமான வீதிகளை கடந்து 2 அல்லது 3 கிலோமீட்டர் தொலைவில் வருகிறது மாடக்குளம் கண்மாய்.கண்மாய் கரையோரத்தில் ஸ்ரீஈடாடிஅய்யனார் கோவில், கோவிலையொட்டிய பாதையில் கண்மாயின் உட்புறமாக சென்றால் சமீபத்தில் பெய்த மலையால் பசுமையான கண்மாயில் 3அடி உயரத்தில் கல் ஒன்று தெரிகிறது. கண்மாயில் நீர்நிறைந்திருக்கும் போது முழ்கிவிடுவதால் அந்த கல்லில் உள்ள எழுத்துக்கள் சற்று தெளிவாக இல்லை. அந்த கல்லை சுத்தபடுத்திய பிறகு,கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் அந்த கல்லின் வரலாற்றை பேச துவங்கிய போது பிரமிப்பாகதான் இருந்தது. அந்த கல்  12அல்லது 13 ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கூறினார். ''மாடக்குளத்தின் கீழ் மதுரை'' என பழந்தழிழ் இலக்கியங்கள்  சொல்லும் அளவுக்கு மாடக்குளம் என்ற கிராமம் பெயர்பெற்றிருந்தது .அந்த கல்லின் வரலாறு மிக முக்கியமானது என்கிறார் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம். 12ம் நூற்றாண்டில் அரசர்கள்,பார்பனர்களுக்கு எதிராக விவயாயிகளும், வணிகர்களும் ஒன்று திரண்டு சங்கம் வைத்திருந்தாகவும், அப்போது விவசாயிகளுக்கு உதவியாக மாடக்குளம் கண்மாயை தூர்வாரி,புணரமைத்து கொடுத்தற்காக நிறுவப்பட்ட கல்தான் தேவடியாகல். சாந்தலிங்கம் நடுகல் என்று மட்டுமே சொன்னார், நண்பர் ஒருவர் அந்த கல்லுக்கு தேவிடியாகல் என்று பெயர் இருப்தை சொன்ன போது நம்ப முடியவில்லை.ஆனால் அப்பகுதி விவசாயி ஒருவரை விசாரித்த போது உண்மைதான் என்பதை உணரமுடிந்தது.அதற்கான காரணம் அவருக்கு தெரியவில்லை, தன்து பாட்டன் காலத¢திலிருந்து அப்பெயர் இருப்பதாக சொல்கிறார். அந்த கல்லுக்கு சற்று தொலைவில்  18ம் நூற்றாண்டை சேர்ந்த சற்று உயரமான இரட்டைக் கல் காணப்படுகிறது. அதற்கு குத்துக்கல் என்று அழைக்கிறார்கள். கண்மாயின் நீர்மட்டம் அறிவதற்காக நடுப்பட்டகல் அது.



மலைசுழந்த மதுரை....
             கண்மாயின் கரையோரமாக நடந்து சென்றால் கருப்புசாமி அருவாளுடன் கண்மாயை காவல்காத்து கொண்டிருந்தார். அதை கடந்து காணப்படுகிற குன்று ஒன்றில் கிட்டதட்ட 500 படிகள் ஏறி பாத்தோமானால் மதுரைமாநகர்,மதுரை மாவட்டத்தின் 90 சதம் பகுதியும் பார்க்கலாம். திருப்பரங்குன்றம்மலை, யானைமலை,பசுமலை கீழக்குயில்குடிமலை, பஞ்சபாண்டவர் என மதுரை மலை சூழ்ந்து காணப்படும் காட்சி அற்புதமானது. மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு கோபுரவாசல்,கோயிலை சுற்றி மதுரை நகரம் அமைக்கப்பட்டுள்ள காட்சி என ஓட்டுமொத்த மதுரை அருமையான காட்சி.



உங்கள் கருத்துக்களை எழுத

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

தகவலுக்கு நன்றி.....
நல்ல தகவல்..நன்றி நண்பரே
Seeni said…
nalla thakaval!
Unknown said…
நல்ல பதிவு... வாழ்த்துகள்...
வந்து பார்த்து உங்கள் கருத்தையும் சொல்லுங்கள் . பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.
http://varikudhirai.blogspot.com/2012/08/they-planted-tea-on-hills.html
தகவலுக்கு நன்றி... (அறியாதது)
ADMIN said…
அறிந்த தகவல்தான் என்றாலும் தங்கள் கட்டுரையின் வழி கூடுதல் தகவல்களைப் பெற முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி..!
பசுமைநடைப்பயணத்தில் மாடக்குளம் சென்றதை அழகாக பதிவாக்கியுள்ளீர்கள். மாடக்குளக்கீழ்மதுரை செழிக்கட்டும்.
அருமையான புதிய தகவல்
  • வைகைபுயல் வடிவேலுவின் வறுமைக்கதை
    10.12.2012 - 1 Comments
    வடிவேலு இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார். அடுத்து படத்தில் நடிப்பாரா என்ற கேள்விகள் அவரது ரசிகர்கள்…
  • 7ம் அறிவு திரைப்பட புதிய புகைப்படங்கள்
    25.10.2011 - 1 Comments
    படங்கள் - tamilwire.com எந்திரனை தொட்டுவிட்ட 7ம் அறிவு 1600க்கும் மேற்பட்ட பிரிண்டுகள்,தமிழகத்தில்…
  • பேஸ்புக் கில் கருத்துச்சொன்னால் போதாது...  இயக்குநர் பிரபு சாலமன்
    16.05.2013 - 2 Comments
    சார் உங்க பேஸ்புக் ஐடி கொடுங்க.... இல்ல எனக்கு டிவிட்டர் கணக்கு இருக்கு... பிளாக்ல எழுதுறேன்... இது…
  • உலகத்தின் கடைசி நாள்.....
    03.10.2011 - 2 Comments
    15 -20 ஆண்டுகளுக்கு முன்னாள் ஸ்கைலேப் என்ற அமெரிக்க விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி…
  • விஸ்வரூபம் அதன் பின் விளைவுகளும்....
    06.02.2013 - 2 Comments
    விஸ்வரூபம் இன்று இந்தியா முழுவதும் உச்சரிக்கப்படும் ஒரு சினிமா.கமல் படம் என்றால் அவரது ரசிகர்கள், அவர்…