நடிகராகும் இசையமைப்பாளர் + நான் பட ஸ்டில்கள்


தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் அழகானவர், முன்னணியில் இருப்பவர் விஜய் ஆன்டணி. இவரது திரை இசைப் பயணத்தில் `நான்’ 25ம் படம்,அதுமட்டுமல்ல; இது அவர் கதாநாயகனாக நடித்து, தயாரித்து, இசையமைக்கும் படம் என்பது கூடுதல் தகவல்.இசையமைப்பாளர்களில் இவர் தைரியமாய் மேற்
கொண்ட முயற்சி வீண் போகவில்லை. படம் உருவான வேகத்தோடு நல்ல விற்பனையும் ஆகிவிட்டது. விஜய் ஆன்டணியின் தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி இது.
இவர் பெரிய குடும்பப் பின்னணி கொண்டவர். தமிழின் முதல் நாவலான `பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலை எழுதிய வேதநாயகம்பிள்ளைதான் இவரது தாத்தா.

திருச்சி தலை காவிரியில் இசை பயின்று, தலைநகர் சென்னையில் சவுண்ட் என்ஜினியராகவும், இசை கோர்ப்பாளராகவும் பணி புரிந்தவர். நண்பர்களால் (தேவி ஸ்ரீபிரசாத் - சுந்தர் சி. பாபு போன்ற இசைமைப்பாளர்களால்) `ராஜா’ என்றழைக்கப்படுபவர்.இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தபின் தன்னை அடையாளப்படுத்தும் விதமாய் ஒரு புனைப் பெயரை இவர் தேடும்போது `அக்னி புத்திரன்’, `பாரதி புத்திரன்’ என்றெல்லாம் யோசித்தாராம், இந்தப் பெயர்கள் இலக்கியத்திற்கு சரி, இசை மென்மையானது. அதற்கேற்ப பெயரை யோசி என நண்பர் சொல்ல, `விஜய் ஆன்டணி’ என உருவெடுத்தவர் இவர்.இசையின்பால் இஷ்டப்பட்டு உழைத்து, கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் இவர். அதனால்தானோ என்னவோ சினிமாவின் கதவைத் தட்டும் புதியவர்களை அரவணைத்து கைத்தூக்கிவிடுகிறார். இவரால் தமிழுக்கு ஏழு புதிய பாடலாசிரியர்கள், 46 புது பாடகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

நான் பட ஸ்டில்கள்
இயக்குநர் சசியின் `ரோஜா கூட்டம்’ படத்தின் வாயிலாக திரையிசைப் பயணத்தைத் தொடங்கினார். முதல் படத்தில் அந்த பெரிய தயாரிப்பாளரால் பல காயங்கள் பட்டபோதும், அவர் அதை வெளியே காட்டிக்கொள்ள விரும்பவில்லை. `என்ன இருந்தாலும் அவர் எனக்கு பாதைபோட்டு கொடுத்தவர். அவ
ருக்கு நன்றி உடையவனாக இருக்கவே விரும்புகிறேன்’ என்பார்.`ஆப்பிள் பெண்ணே நீயாரோ,’ என்று தமிழக இளசுகளை முணுமுணுக்க வைத்தவர், இவரது `நாக்க மூக்கா’ கோலிவுட், பாலிவுட், டோலிவுட் தாண்டி கேன்ஸ் திரைப்பட விழா வரை சென்று ரசிக்கப்பட்டது.`நான்’ படத்தின் இயக்குநராக இவர் அறிமுகப்படுத்தும் `ஜீவா சங்கர்’ இவரது நண்பர், மறைந்த பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஜீவாவிடம் பயின்றவர்.தான் இசையமைத்து, தயாரித்து, நடிக்க அவரது நண்பர் ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். இருவரும் ஒரே அலைவரிசையில் யோசிப்பதால் படத்தின் வெற்றி எளிதாகி இருக்கிறது.“தவறு செய்வதற்கான சந்தர்ப்பமும் - சூழ்நிலையும் அமையாதவரை எல்லோரும் நல்லவரே’ இதுவே `நான்’ படத்தின் மையப்புள்ளி.ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று முகம் உண்டு. ஒன்று சமூகத்திற்கு காட்டும் முகம், மற்றொன்று குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் காட்டும் முகம், மூன்றாவது யாருக்கும் தெரியாத - அவனுக்கு மட்டும் தெரிந்த ரகசிய முகம். இதுதான் `நான்’ கதாநாயகனின் முகம் என, தான் கதாநாயகனாக நடிக்கும் படத்தைப் பற்றி சொல்கிறார். “இசையமைப்பாளராக வெற்றிபெற்று விட்டார், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுவிட்டார். படம் நல்ல விலைக்கு விற்பனையாகிவிட்டது. ஹீரோவாக வெற்றி பெற வேண்டும். அவரது தன்னம்பிக்கை வீண் போகாது” - என்று இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் (நடிகர் விஜய்யின் அப்பா) சொன்னதை இங்கு குறிப்பிடலாம்.
-சத்யஜித்ரே
படங்கள் சினிமா ஆன்லைன்

இதையும் படிக்கலாமே

சுதந்திர இந்தியாவின் அரசு தடை செய்த முதல் திரைப்படம்
உங்கள் கருத்துக்களை எழுத

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழுக்கு ஏழு புதிய பாடலாசிரியர்கள், 46 புது பாடகர்கள் - மிகவும் பாராட்டப்பட வேண்டிய மனிதர்...

தொடர வாழ்த்துக்கள்...
நன்றி…


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?