31 ஆக., 2012

இராண்டாம் ஆண்டில் இன்றையவானம்

மிழ்மணம்,சகபதிவர்கள்,வாசகர்கள்,அனைவருக்கும் நன்றியும்,
வணக்கமும்,இன்றுடன்(ஆகஸ்ட் 31)இன்றையவானம் வலைப்பூ முதலாமாண்டை நிறைவு செய்து இராண்டாம் ஆண்டில் நுழைகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் வலைபூ குறித்து அறிமுகம் செய்து வைத்தார். அப்போது கணிணி குறித்தே அதிகமாக தெரியாது. இணையத்தில் வலைபூ தொடங்குவது பற்றி நிணைத்துக்கூட பார்க்கவில்லை.மதுரை சர்வோதயா புத்தகநிலையத்தில் வேறு ஒரு புத்தகம் வாங்கசென்ற போது தற்செயலாக  சுமஜ்லா எழுதிய http://sumazla.blogspot.com/ '' நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்'' என்ற புத்தகம் கிடைத்தது.அதை வைத்து முயற்சியில் இறங்கினேன். வலைபூ தொடங்கிய அன்று காலையில் தொடங்கி மாலை 4மணிவரை மதிய உணவு சாப்பிடாமலேயே கணிணி முன் அமர்ந்திருந்தேன். கடந்த ஒராண்டில் சகபதிவர்களின் வலைபூக்களை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக எதோ எனக்கு தெரிந்த அளவில் இன்றையவானத்தை வடிவமைத்திருக்கிறேன்.
           
  நான் பத்திரிகையாளன் என்ற முறையில் அனைத்துவிதமான தகவல்களும் உள்ள வலைபூவாக இன்றையவானத்தை நடத்துகிறேன்.எனது பதிவுகள், எனது நண்பர்களின் பதிவுகள்,நான் படித்த தகவல்கள் என அனைத்தையும் பகிர்ந்துகொள்கிறேன். கல்லூரிகாலங்களில் 40 பக்க நோட்டில் சிற்றிதழ் தொடங்கி,பின் ரோணியோ, ஜெராக்ஸ்,அச்சு என 10 வருடம் பத்திரிக்கை அனுபவம்,தற்போது பணியாற்றுகிற பத்திரிக்கை தொழில் அனுபவமும் வலைப்பூ நடத்த உதவுகிறது.


இந்தியா
20,230
ஐக்கிய அமெரிக்க குடியரசு                   
6,425
ஐக்கிய அரபு கூட்டாட்சி
1,753
சிங்கப்பூர்
1,387
இலங்கை
1,377
பிரிடிஷ் கூட்டரசு
806
ஜெர்மன்
774
கனடா
564
கதார்
368
ரஷ்யா
294
ஆபாசதகவல்கள்,கிசுகிசுக்கள்,மதவெறி கட்டுரைகள்,போன்றவற்றை தவிர்த்து  இன்றையவானம் பதிவுகள் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன்.
                  43 நண்பர்கள், உலகமுழுவதிலி ருந்தும் 41,000 க்கும் மேற்பட்ட பார்வை யாளர்கள், 200க்கும் மேற்பட்ட கருத்து ரைகள்,ஆனந்தவிகடன் என்விகடனில் அறிமுகம் என நம்பிக்கை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.                         
                      எனது வேலைப்பளு காரணமாக மற்ற சகபதிவர்களின் வலைபூக்களுக்கு கருத்துரைகள் எழுக்கூட முடியாத சூழ்நிலை,அதை தவிக்க முயற்சிக்கிறேன். திண்டுக்கல் தனபாலனை தவிர பதிவுலகில் இன்னும் நண்பர்கள் இல்லை. இன்றையவானம் வலைபூவின் நிறைகுறைகளை எதிர்பார்க்கிறேன்.மீண்டும் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்

அன்புடன்
அ.தமிழ்செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Related Posts Plugin for WordPress, Blogger...