ஒலிம்பிக் நகரில் களைகட்டும் திருட்டு தொழில் + படங்கள்


நாளை உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் லண்டன் ஒலிம்பிக் திருவிழா துவங்க இருக்கிறது. இதற்காக இங்கிலாந்து அரசு பலகோடிகளை கொட்டி லண்டன் மாநகரை அழகுபடுத்தி வைத்துள்ளது. நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிட்டதட்ட உலகின் அனைத்து நாடுகளின் விளையாட்டு வீரர்களும் பங்கேற்கவுள்ளனர். அவர்களுக்காக தங்கும் விடுதிகளுடன் கூடிய பூங்காக்கள், பொழுதுபோக்கு மையம், பிரண்மாண்டமான ஒலிபிக்கோபுரம் என ஏராளமான புதுமைகளும் செய்யப்பட்டுள்ளன.

       உலகமுழுவதும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் லண்டன் மாநகரில் குவிந்து வருகின்றனர். அதே போல அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடக்காமல் இருக்க ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் இடத்தை ராணுவம் தனது கட்டுபாட்டில் கொண்டுவந்துள்ளது. ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டபடி உள்ளது.இப்படி பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் லண்டன் மாநகரில் பிக்பாக்கெட்டுகளும்,கொள்ளையும் ஜருராக நடந்துவருகிறது. இதனால் விளையாட்டு  வீரர்களும் சுற்றுலாபயணிகளும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
       இது குறித்த  ஆய்வு ஒன்றை பிபிசி செய்தியாளர் ஒருவர் திருடர்களின் குழுவைச்சேர்ந்த ஒருவரின் உதவியுடன் மேற்கொண்டார். அப்போது அவர்கள் எவ்வாறு பொருட்களை தந்திரமாக திருடுகிறார்கள் என்பதை செய்தியாளர்களிடம் விளக்கினார்.

திருடர்களின் தந்திரம்
         
               பொழுதுபோக்கு மையங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு வரும் சுற்றுலாபயணிகளிடம் திருடன் ஒருவன் வழிகேட்பதுபோல பேச்சு கொடுப்பான். அப்போது  அதே திருடர் குழுவை சேர்ந்த மற்றொரு திருடன் அவரிடம் ச்சுக்கொடுப்பான்.இதனால் குழும்பிபோகும் சுற்றுலாபயணியிடம் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் பணப்பை, செல்போன் போன்றவற்றை திருடிக்கொண்டு ஓடி விடுவார்கள். இதை ரோமனியர்களின் திருட்டு பாணி என்கிறார்கள். திருடப்படும் பொருட்கள் ஒருதிருடனிடம் மிருந்து மற்றொருவருக்கு கைமாறி இறுதியில் கப்பல் மூலம் ரோமனியாவிற்கு அனுப்பபட்டு அங்கு கள்ளச்சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.
              திருடர்களின் இந்த தந்திரத்தால் தினசரி 1700 பேர் பாதிக்கப்படுவதாக இங்கிலாந்தின் குற்றக்கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.தற்போது நடைபெறவுள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு கிழக்கு ஐரோப்பியத் திருடர்கள் லண்டன் மாநகரில் முகாமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் வாரத்திற்கு சுமார் 4 ஆயிரம் பவுண்ட அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3,45,000 சம்பாதிக்கிறார்கள்.
       ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் லண்டனின் மேற்கு  முனைப்பகுதி மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் ரோந்துப்பணியில் ஸ்காட்லாந்து போலிசார் 80 பேரை பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.இப்படி லண்டனில் ஒலிம்பிக்போட்டி துவங்கும் முன்பே திருட்டு தொழில் களைகட்ட துவங்கியுள்ளதால் சுற்றுலாபயணிகள் மிகுந்த பீதியடைந்துள்ளனர்.
 
ஒலிபிக் நகரம் படங்கள்
                       இன்னொறு வருத்தமான செய்தி ஒலிம்பிக் தொடங்கி இதுவரை இந்திய வாங்கி மொடல் எண்ணிக்கை மொத்தம் 20 தான். இதுல தங்கம் 8, கடந்த ஒலிம்பிக்ல மட்டும் சீனா 167, சின்ன,சின்ன நாடுகள் கூட நிறை பதக்கம் வாங்கும் போது இந்தியாமட்டும் ஏன் இப்படி? இந்த தடவையாவது .....
         

            -பென்னிசெல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அங்கேயுமா...?
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.

நன்றி...