தமிழ்நாட்டுக்கும்- தமிழக மக்களுக்கும் நன்றி - ''உருமி'' பிருதிவிராஜ்


''மொழி'' படத்தின் மூலம் தமிழில் ஒருரவுண்ட் வலம் வந்தவர் பிருதிவிராஜ். இடையில் சரியான படங்கள் அமையாமல் மலையாளத்திற்கு சென்றார். ''உருமி'' படத்தின் மூலம் மறுபடியும் தமிழுக்கு வந்துள்ளார். மேலும் உருமி படத்தின் நடிகராக மட்டுமல்லாமல்  தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் ஆனதின் பின்னணி என்ன? இனி தொடர்ந்து படங்களை தயாரிப்பாரா? இந்த கேள்விகளுக்கு பிருதிவியின் பதில்கள் வேறுமாதரியாக வருகிறது.

             மணிரத்தினத்தின் ''ராவணன்'' படப்பிடிப்பின் போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் உருமி கதையை சுருக்கமாக சொன்னார்.''இது 15ம் நூற்றாண்டில் நடந்த சரித்திர கதை. இந்த சரித்திர படத்தை மலையாளத்தில் மட்டும் எடுக்காமல் தமிழிலும்  எடுக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் செலவாகும், பிரண்டமாக எடுத்தால்தான் பேசப்படும்'' என்றேன்.

             நண்பர்களின் உதவியுடன் தயாரிப்பாளனாகி விட்டேன். சந்தோஷ்சிவன் என்கிற பிரபலமானவர் படத்தை இயக்குகிறார் என்றதும் பிரபுதேவா,ஆர்யா, ஜெனிலியா.வித்யாபாலன்,தபு, நித்யாமேனன்,அலெக்ஸ் பேன்ற முன்னணி நட்சத்திரங்கள் சம்பளம் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கொடுத்ததை வாங்கிகொண்டு நடித்தனர். அதனால் படத்திற்கு பிரபலமும், பிரமாண்டமும் கிடைத்தது. உலகம் முழவதும் 250 தியோட்டர்களில் உருமி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
      உருமி படத்தின் மூலம் நான் ஒரு நடிகனாகவும் வெற்றி பெற்று விட்டேன், தயாரிப்பாளராகவும் நிமிர்ந்து விட்டேன். இதற்கு காரணமான தமிழ்நாட்டுக்கும்,தமிழக மக்களுக்கும் நன்றி.
     
65 நாட்களுக்குள் ஒரு சரித்திரபடத்தை இவ்வளவு சிறப்பாக பிரண்டமான எடுக்க முடிந்தென்றால் அதெல்லாம் சந்தோஷ்சிவன் என்ற தொழில்நுட்ப கலைஞனால் தான் முடிந்தது என்கிறார் பிருதிவிராஜ்.

-சத்யஜித்ரே

உருமி ஸ்டில்கள் + பாடல் வீடியோ பார்க்க


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்