facebook அரசியல் நகைச்சுவைகள்


இந்திய ஜனதிபதி தேர்தலில் நடக்கும் அரசியல் பேரம், ஒருநாளைக்கு ரூ.32 இருந்தாலே வறுமைக்கோட்டை தாண்டியவர் என்ற கூறும் இந்திய திட்டக்கமிஷன் தலைவர் மன்டேகு சிங் அனுவாலியா, போலிசாமியர்களிடம் சரணடையும் அரசியல் தலைவர்கள், அரசியல் அத்தியாயம் முடிந்த  போன பாட்டாளி மக்கள் கட்சி தலைவரின் வீண் நம்பிக்கைகள்,விமானிகளின் ஊதிய உயர்வை கண்டுகொள்ளாத ஏர்இந்தியா அமைச்சரின் மனைவியின் ஓவியத்தை மட்டும் வாங்குவது எப்படி?

            இது போன்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு நகைசுவையாக வேதனையை பகிர்ந்த கொள்ளும் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணனின் முகபுக்தகத்திலிருந்து சில....



ஜனாதிபதி தேர்தலை முன்வைத்தும் அமைச்சரவை பேரங்கள் சுடச் சுட நடந்து கொண்டு இருக்கிறது.
ரப்பர் ஸ்டாம்புக்கு பின்னனியில் கூட பேரமா.......

ஒரு தலையாட்டி பொம்மையை தயார் செய்ய நாட்டுக்குள்ளே என்னா கலவரம்


2016ல் மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள் - ராமதாஸ்

ஒரு கட்சியை தக்கவைக்க எப்படி எல்லா அறிக்கை விட வேண்டியதிருக்கு


சமீபத்தில் தான் என் மகன் திருமணத்தை 200 கோடி செலவில் நாக்பூரில் நடத்தினேன், கொஞ்சம் நம்மல மட்டும் பாத்துக்கங்க பாபா,

நாங்க ஆட்சிக்கு வந்தா உங்க கருப்பு பணத்த பாத்துக்குறோம் - நிதின் கட்கரி


பெட்ரோல் விலையை உயர்த்தியதே அது தட்டுபாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்ற தான் - சிதம்பரம்

உன்மைய சொல்லு நீ ஹாவார்டு ஸ்கூலில் எம்பிஏ பிட் அடிச்சி தான பாஸ் பன்னுன.





ருபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது வருத்தமளிக்கிறது- பிரநாப் முகர்ஜி

அதுல் எல்லாம் நாங்கபட வேண்டி வருத்தமப்பா





நிதி நெருக்கடியில் சிக்கிதவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோ னியின் மனைவி வரைந்த ஓவியங்களை பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது.

இந்த கத, கட்ர, கவிட இத எல்லாம் வாங்க மாட்டாங்களா சார்..???????



32 ருபாய் பார்டீக்கு 35 லட்சத்தில் கக்கூஸ், அதில் உள்ளே நுழைய ஸ்வைப் கார்டு வேறு.............

-தொகுப்பு அ.தமிழ்ச்செல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ....

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments