விஸ்வரூபம் சமஸ்கிருதப் பெயர், மாற்றுங்கள்...


மல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து படத் தலைப்பை விருமாண்டி என மாற்றினார் கமல். அந்தத் தலைப்புக்கும், படத்துக்கும் அபாரமான வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து தசாவதாரம் படத்துக்கும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கும் கூட சிக்கல்கள் வந்தன. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சினை கிளம்பியுள்ளது.
இந்து மக்கள் கட்சதியின் தலைவரான கண்ணன் இதுதொடர்பாக சர்ச்சையை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
நீங்கள் தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்?

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
எங்களது எண்ணங்களை கமல் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம். தமிழில் பெயர் வைக்காத நிலையில் அதற்கு அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.
-சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

வழிகளில் நூறு தடையிருந்தால் தான் வாழ்க்கை ருசியாகும்' என தலைவர் பாடியுள்ளார். தடைகளைத் தகர்த்து வெற்றிவாகை சூடுவார்.
  • தென்மேற்கு, வடகிழக்கைப் போல ‘வடக்கும்’ வஞ்சித்துவிட வேண்டாம்! கவிஞர் வைரமுத்து
    03.04.2017 - 0 Comments
    தென்மேற்குப் பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் வஞ்சித்து விட்ட நிலையில், வடக்கும் (மத்திய அரசு)…
  • ஷாருக்கான் இப்படி பேசலாமா?
    25.06.2014 - 3 Comments
    சென்னை  எக் ஸ்பிரஸ் படம் மூலமாக தமிழக  ரசிகர்களை கவர்ந்தவர் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருகான்.…
  • டீசர்ட்,டவுசர்,நைட்டி- -  குற்றாலக்குளியல்
    23.07.2013 - 6 Comments
    டீசர்ட், டவுசர், நைட்டி குற்றாலம் முழுவதுமே இப்படி தான் இருக்கிறது. மேகம் மூடிய மலைகள், வானதிலிருந்து…
  • இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் புதிய கண்டுபிடிப்பு
    24.09.2012 - 6 Comments
    நமக்கு பிரியமானவர்கள் இறந்து போனால் நாம் படும் துன்பம் கொடுமையானது, அவர்கள் மீண்டும் உயிருடன் வந்தால்…
  • சூட்கேசையே  ஸ்கூட்டராக  மாற்றும் புதிய தொழில்நுட்பம்..
    02.06.2014 - 1 Comments
    விமான நிலையங்க ளுக்கோ, ரயில்நிலையங் களுக்கோ சூட்கேசை இழுத்துச் செல்லும் நடைமுறை கடந்த காலமாக மாறும் நிலை…