21 ஆண்டுகளுக்குப் பின் நோபல் விருதைப் பெற்ற சூ கி



1991ம் ஆண்டில் வழங்கப்பட்ட நோபல் அமைதிப் பரிசை மியான்மர் எதிர்க் கட்சி தலைவர் ஆங் சான் சூ கி 21 ஆண்டுகள் கழித்து நேரில் பெற்றுக் கொண் டார்.


தன்னுடைய ஏற்புரை யில் 1991ம் ஆண்டில் வழங் கப்பட்ட நோபல்விருது, தன்னை மீண்டும் உணர் வோட்டம் உள்ளவராக உணரவைத்தது என்றும் மியான்மரின் துயரங்கள் உலக சமுதாயம் மறக்க வில்லை என்பதையும் உணர வைத்தது என்றும் அவர் கூறினார். மியான்மரில் நடை பெற்றுவரும் மாற்றங் களுக்கு சர்வதேச சமூகத் தின் ஆதரவும் காரணமா கும் என்றும் அவர் குறிப் பிட்டார்.

1991ம் ஆண்டில் விருதை நேரில் பெற சூ கி நார்வேக்கு செல்லவில்லை. ராணுவ ஆட்சியாளர்கள் தன்னை மீண்டும் நாட்டுக்குள் நுழைய விட மாட்டார்கள் என்று அவர் கருதினார். 24 ஆண்டுகள் வீட்டுக்காவ லில் வைக்கப்பட்டிருந்த அவர், 2010ம் ஆண்டில் விடு விக்கப்பட்டார்.

ஆஸ்லோ நகரின் நகர் அரங்கத்தில் நடந்த விழா வில் அவர் விருதினைப் பெற்றுக்கொண்டார். அவ் வமயம் நார்வே அரசர் ஹெராலட், அரசி சோபியா, சற்றேறக்குறைய 600 பிரமு கர்கள் அரங்கில் கூடியிருந்த னர். நார்வே நோபல் குழு தலைவர் கோர்ப்ஜோர்ன் ஐக்லாண்ட் வரவேற்புரை நிகழ்த்தினார். நீங்கள் தனி மைச்சிறையில் இருந்த போது ஒட்டுமொத்த உல கின் நீதிக்குரலாக மாறிவிட் டீர்கள் என்றும் நீங்கள் உலக சமுதாயத்திற்குக் கிடைத்த விலை மதிப்பில் லா வெகுமதி என்றும் அவர் கூறினார்.

சூ கி ஏற்புரை நிகழ்த்தினார். 





நோபல் பரிசு என் இதயக் கதவுகளைத் திறந்து விட்டது. சிறையில் இருந்த போது உலகில் நானும் ஒருவர் இல்லையோ என்று விரக்தி அடைந்தேன். ஆனால் நோபல் விருது என்னு டைய உணர்வுகளைத் தூண்டிவிட்டது. விரிந்து பரந்த உலக சமுதாயத்துக் குள் என்னை ஈர்த்துக் கொண்டது. மியான்மரில் ஜனநாயகத்துக்காகவும் மனித உரிமைகளுக்காக வும் நடந்த போராட்டங் களின் மீது உலகின் கவனத் தை நோபல் விருது திருப்பி விட்டது” என்று அவர் கூறினார்.

மியான்மரில் நடக்கும் சீர்திருத்தங்கள் சாதகமான வைகள். ஆனால் அவற்றின் மீது குருட்டு நம்பிக்கை ஏற் படக்கூடாது. தேசிய சமரச நடவடிக்கைகளில் தானும் தனது கட்சியும் (என்எல்டி) எந்தவொரு பங்கினையும் வகிக்க தயாராக இருப்பதா கவும் அவர் கூறினார். மியான்மரில் நடைபெறும் இன முரண்பாடுகளையும், மோதல்களையும் அவர் குறிப்பிட்டார். அமைதிக் காகப்பாடுபடும் தன்னு டைய நம்பிக்கை யை நோபல் விருது வலுப் படுத்தியுள் ளது என்று அவர் ஏற்புரை யை முடித்தார்.
-பென்னிசெல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

MARI The Great said…
வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வோம் ஆங் சான் சூ-கிற்கு .!
  • குணமகள் தேவை
    26.09.2011 - 2 Comments
    என் மகன் M.S.Cண வரை படித்தவன். வாழ்வில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் தோல்விகளால் மனநோய்க்கு ஆளானான்.…
  • மாணவர்களே ராஜபக்சேவுக்கு எதிரான உண்ணாவிரத்தை உடனே நிறுத்துங்கள் ...
    12.03.2013 - 4 Comments
    ராஜபக்சேவுக்கு எதிரா நம்மால ஓன்னும் பண்ணு முடியாது?. உண்ணாவிரதம் இருக்குறது வெட்டிவேலை... நல்ல படிச்சமா?…
  • 2011 கடந்து வந்த பாதையும்... - கடக்க வேண்டிய துரமும் 2012,2013....
    30.12.2011 - 1 Comments
    புத்தாண்டை வரவேற்க எல்லோரும் தயாராக இருப்பீர்கள். ''தண்ணீ'' (அல்கஹால்) அடித்து ஆட்டம் பாட்டமாக வரவேற்பதுதான்…
  • சசிகலா வெற்றிக்காக திருமங்கலத்தில் இடைத்தேர்தல்? 2009 பார்முலாவை கையிலெடுக்கும் அதிமுக
    03.01.2017 - 1 Comments
    அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவிற்காக ஆள் ஆளுக்கு பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதால் மீண்டும்…
  • சிஇசட்12 படத்தில் மனித வாகனமாக நடிக்கும்  ஜாக்கிசான்
    30.11.2012 - 2 Comments
    உலகம் முழுவதும் பலகோடி ரசிகர்களைக் கொண்டவர் அதிரடிமன்னன்ஜாக்கிஜான். இவரது அதிரடி ஆக்சன் மற்றும்…