போதைப் பொருட்கள் பட்டியலில் ஃபேஸ்புக்?


மனரீதியாக அடிமையாக்கும் போதைப் பொருளாக ஃபேஸ்புக் மாறி வருகிறது என்று நார்வேயின் பெர்ஜன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரி
த் திருக்கிறார்கள்.எந்த அளவுக்கு ஒரு மனிதர் அதற்கு அடிமையாகிறார் என்பதை அளப்பதற்கான அளவீட்டை
யும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். ஃபேஸ்புக் என்ற சமூக வலைத்தளம் தகவல் தொழில்நுட்பத்துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தகவல் பரிமாற்றங்கள், கூட்டுச் செயல்பாடு போன்றவற்றை
புதிய பரிமாணத்திற்கு இது எடுத்துச் சென்றுள்ளது.மேற்கு ஆசிய மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் ஜனநாயக உரிமைகள் கோரி நடந்த போராட்டங்களுக்கு மக்களைத் திரட்ட ஃபேஸ்புக்தான் பெரிய அளவில் பயன்பட்டது.


தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடந்து வரும் போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில், தவறான வகையிலும் இந்த சமூக வலைத்தளம்பயன்படுகிறது.மேலும், பெரும்பாலான நேரத்தை ஃபேஸ்புக்கில் பேசுவது, பதிவுகளைப் போடுவது என்று செலவழிப்பதையே போதைப் பொருள் வலைத்தளத்தை சித்தரிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. ஏதாவது ஒரு காரணத்தால் சமூக வலைத்தளத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், கடுமையான அழுத்தத்தை சந்திப்பவர்கள் பலர் என்று சுட்டிக்காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள்.423 மாணவர்களைக் கொண்டு இந்த ஆய்வை நார்வே பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்திருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் இவர்களில், வாய்ப்பு கிடைக்காதபோது பதற்றம் அடையாமல் இருந்தது வெகு சிலரே என்பதையும் ஆய்வாளர்கள்சுட்டிக்காட்டுகிறார்கள்.
-பென்னிசெல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

MARI The Great said…
தகவல் பறிமாற்றங்களை புதிய பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றதில் முகநூலிற்கு முக்கிய பங்குண்டு, பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருந்தால் நன்மை பயக்கும், கட்டுப்பாட்டை மீறி பயணித்தால் ஆபத்துகளையே ஏற்படுத்தும்
  • ஜெயலலிதாவின் சொத்துக்கள் அவரது வருமானத்தைவிட 200 சதவீதம் அதிகம்- வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா
    06.06.2015 - 0 Comments
    ஜெயலலிதா விடுதலையாகி தமிழக முதல்வராக பொறுப்பேற்று ,ஆர்.கே. நகரில் போட்டியிட மனுத்தாக்கல் செய்து தேர்தல்…
  • 15 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் புதிய சாதனை
    11.08.2015 - 2 Comments
    "என்னால் சும்மா இருக்கமுடியாது"  என்ற படியே தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார் கமல். இன்றைய இளம்…
  • நாம் எங்கிருந்து வந்தோம்?
    16.02.2016 - 0 Comments
    இது தெரியாதா? ஆப்பிரிக்காவுல குரங்கா இருந்து கொஞ்சம் கொஞ்சமா மாறி மனிதனா மாறியிருக்கோம்... அதுக்கும்…
  •  மாடுகள் மாலை தாண்டும் திருவிழா
    15.10.2021 - 0 Comments
     திருவிழாக்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம் ஒவ்வொகு சமூகமும் தனக்கோயுறிய தனித்துவமிக்க கலாச்சாரம்…
  • தூங்காவனம் உருவான விதம்- வீடியோ+ கமலின் புதியகெட்டப்
    29.09.2015 - 0 Comments
    2011ல் வெளிவந்த பிரெஞ்சு திரைப்படமான ‘ஸ்லீப்லெஸ் நைட்’ (பிரெஞ்சில் ‘nuit blanche’) தமிழில் அதிகாரபூர்வமாக…