உருமி ஸ்டில்கள் + பாடல் வீடியோ


வருகிற மே 25ம் தேதி, உலகம் முழுவதும் 250 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது.சரித்திர சம்பவத்தை அடி‌ப்படையாக வைத்து சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள படம் உருமி . கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை வெளியிடுகிறார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தில் ப்ருத்விராஜ், ஆர்யா, பிரபுதேவா, ஜெனிலியா, வித்யாபாலன், நித்யா மேனன், தபு என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு தீபக்தேவ்வின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

போர்ச்சுகீசியர்கள் இந்தியாவிற்குள் எப்படி காலடி எடுத்து வைத்தார்கள்.அவர்கள் எப்படி இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்று கதை விவரிக்கிறது.அபிமான நட்சத்திரங்களுடன், வரலாற்று காலகட்ட நடை-உடையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

பாடல் வீடியோ காட்சி


ரசிகர்களிடமிருந்து சக துறையை சேர்ந்த தோழர்களிடமிருந்து கிடைக்க போகும் வரவேற்பிற்காக டைரக்டர் சந்தோஷ் சிவனும் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் நம்மை ஆண்ட மன்னர்கள் அவர்களின் வாரிசுகள் எப்படி அந்நியர்களை விரட்டியடிக்கிறார்கள் என்பதை நம் கண் முன் கொண்டு வருகிறது. வரலாற்றுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், இந்திய திரைப்படங்களைப் பற்றி உலகம் முழுவதும் அறிந்து கொள்ளும் விதமாகவும், உலகம் முழுக்க வெளி வருகிறது உருமி.

-சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

வரலாற்று சுவடுகள் இவ்வாறு கூறியுள்ளார்…
அங் .., கலக்கல் ..!